Thursday, January 27, 2011

அவங்க மட்டும் ஒழுங்கா?



கருணாநிதியின் சமாளிப்புகள் பெரும்பாலும் மூன்று வகை. 

ஒன்று. மற்றவர்கள் மட்டும் ஒழுங்கா? அவர்களும் இதே லட்சணம் தான் என்பது ஒன்று. விலை வாசி புள்ளி விவரம் சொன்னால், மற்ற மாநிலங்களில் தனக்கு சாதகமானவற்றை சொல்வதும் இதில் சேர்த்தி!
இரண்டாவது. இதற்கெல்லாம் காரணம் ஆரியர் என்பது! அது எதுவானாலும்.
மூன்றாவது. கேள்வி கேட்டவரை சந்தேகத்துக்கு உள்ளாக்குவது! 

இன்றைய கேள்வியும் நானே பதிலும் நானேவில் முதல் வகை சமாளிப்பிற்கு சாம்பிள்கள் சில..  

இலவசங்கள் என்ற பெயரில் 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டி வரும், தி.மு.க., அரசு மக்களை கடனில் மூழ்கடித்துள்ளது என்று தா.பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?


இந்த ஆண்டு கூட மேற்குவங்க அரசு வாங்கியுள்ள கடன் தொகை 16 ஆயிரத்து 260 கோடி ரூபாய். தமிழ்நாடு பெற்ற கடன் 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய். இதிலிருந்து எந்த மாநில கடன் சுமையை மக்கள் தலையிலே ஏற்றி உள்ளது என்பதை பாண்டியன் நடுநிலையோடு கூறுவாரா? கடந்த 2001, 2002ம் ஆண்டில் எனது தலைமையிலான, அரசு விட்டுச் சென்ற கடந்த 32 ஆயிரம் கோடி ரூபாய். அந்தக் கடன் 2005, 2006ம் ஆண்டு இறுதியில் அ.தி.மு.க., ஆட்சி பதவியில் இருந்து நீக்குகின்ற காலக் கட்டத்தில் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி? இலவசங்கள் வழங்காத ஜெயலலிதா ஆட்சியிலே கடனே வாங்கவில்லையா? அந்தக் கட்சியோடு கூட்டணி சேர தா.பாண்டியன் சென்றிருப்பது எந்த அடிப்படையிலே நியாயம்? நியாயத்தைப் பாண்டியனிடம் கேட்க முடியுமா?


வழக்கம் போலத்தான்! அவர்களும் கடன் வாங்கினார்கள். நானும் வாங்கினேன். என்ன தவறு?


மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று ஹெலிகாப்டரிலேயே திரும்பியிருக்கிறாரே?


தமிழகத்திலே இது வரை பல மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் அ.தி.மு.க., ஆட்சி நடை பெற்ற காலத்திலும் கூட கொல்லப்பட்டுள்ளனர். உதாரணமாக 1991, 1996ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடை பெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதில் எந்த ஒரு மீனவர் வீட்டுக்காவது, ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வேண்டாம், ரயிலிலோ, காரிலோ சென்று இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுண்டா? அப்போதெல்லாம் போகாமல், இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வருகிறது என்றதும், நாகப்பட்டினத்திற்குச் சென்று ஆறுதல் கூறுகிறார் என்றால் அது உண்மையிலே பாசமா? வேஷமா? ஆறுதல் கூறப் போன இடத்திலே கூட தான் ஆட்சிக்கு வர மீனவர்கள் ஓட்டு அளிக்க வேண்டுமென்று தான் ஜெயலலிதா கோரிக்கை வைத்திருக்கிறார்.

திருமண விழாக்களில் அரசியல் மட்டுமே பேசுவதும் எந்த முறையில் சேர்த்தியோ! 


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, January 22, 2011

முதல்வரின் அறிவிப்பு!


முதல்வரின் இன்றைய அறிவிப்பினால் தமிழகத்தில்  எதிர்பாராத திருப்பங்கள் நடை பெற்றுள்ளன. ஆகாயத்தையும் தாண்டுமோ என்று எல்லோரும் நினைத்த விலைவாசி இந்த அறிவிப்பினால் பெரும் சரிவை சந்திக்க உள்ளது. 
தெருவெங்கும் இருக்கும் டாஸ்மார்க்கினால் மக்கள் கெட்டழியும் நிலையும் எழும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் இந்த அறிவிப்பின் மூலம் பெரும் மாற்றம் காணும் என்பது உறுதி. 
அகில இந்தியாவே பெட்ரோல் விலை உயர்வை சந்திக்க முடியாமல் முழிக்கும்போது முதல்வரின் இந்த அறிவிப்பு இதற்க்கு ஒரு தீர்வு காண்கிறது. பெட்ரோல் விலை குறையும் என்பதால் எல்லா பொருட்களின் விலையும் குறையும் வாய்ப்புள்ளது.
பத்தாம் வகுப்பு வரை தேர்வு இல்லை என்பதால் மாணவர்களிடையே பெரும் சரிவை சந்தித்திருக்கும்  கற்கும் ஆர்வம், இந்த அறிவிப்பின் மூலம் தீர்வு சொல்லியிருக்கிறார் முதல்வர். சமீபத்தில் ஒரு பதிவர் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத படிக்க கூட தெரியவில்லை என்று ஒரு பதிவு எழுதியிருந்தார்.
தினம் ஒரு இலவசம் என்று எதிர்பார்த்து மக்கள் வாழும் சுயமரியாதையும் உழைக்கும் ஆர்வமும் அற்ற சமுதாயத்திற்கு இந்த அறிவிப்பின் மூலம் தீர்வளித்திருக்கிறார் முதல்வர். 
கிட்ட தட்ட ஆயிரம் விவசாயிகள் கடந்த சில வருடங்களில் தற்கொலை செய்து கொண்ட துயரம் இந்த அறிவிப்பினால் முடிவிற்கு வந்திருக்கிறது.
ரேஷனில் கிடைக்கும் அரிசியை விட கட்டடம் கட்ட தேவையான மணல் அதிக விலை விற்கும் அதனால் கட்ட தொழிலினால் பாதிப்படைவது இதனால் முடிவிற்கு வரக்கூடும்.
தமிழ் நாடெங்கும் விவசாய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரியல் எஸ்டேட் பிளாட்டக மாறுவதும், தினம் அதிகரிக்கும் சாலை போக்குவரத்தும், என், ஈழ தமிழர்களின் அல்லல் கூட இந்த அறிவிப்பினால் மாறலாம்.

அப்படி என்ன அறிவிப்பு என்கிறீர்களா?


எவ்வளவோ பிரச்சனைகளால் மக்கள் அன்றாடம் அவதிப்படும்போது முதல்வரின் இந்த 'பொறுப்பான' அறிவிப்பு எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விடும் தானே?



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வீரப்ப மொய்லி - இரட்டை நாக்கு!


இந்த செய்தி, முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களின் மருமகன் சொத்து சேர்த்த குற்றச்சாட்டு பற்றியது. இந்த செய்தியின் சாரம் : வீரப்ப மொய்லி சொல்வது என்ன என்றால், "இந்த குற்றசாட்டுகள் எந்த அளவிற்கு உண்மை என்று தீர விசாரிக்க வேண்டும். தீர விசாரிக்காமல் நான் அதை பற்றி சொல்வது முறையாகாது". இது சென்ற மாதக்கடைசியில்.

இதே போல இன்னொரு செய்தி, எடியூரப்பா மற்றும் அவர் குடும்பத்தினர் நில ஆக்கிரமிப்பு சம்பந்த பட்டது. இந்த செய்தியில் வீரப்ப மொய்லி எடியூரப்பா கிட்ட தட்ட குற்றவாளி என்ற முடிவிற்கே வந்து விட்டார்! இவர் மீதும் இன்னும் எந்த குற்றசாட்டும் நிரூபணமாகவில்லை.

என்ன, எடியூரப்பா எதிர் கட்சி. பாலக்ருஷ்ணன் அப்படி இல்லை! 

போடோவில் மொய்லி. ஒட்டு போட்டதோடு உங்கள் கடமை முடிந்தது. மூடிகிட்டு இருங்க என்கிறாரா?
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, January 21, 2011

நகை முரண்!


இன்றைய தினமலரில் வந்தது.. 
ஊழலை ஒழிப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்காக, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்றை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழுவில் விவசாய அமைச்சர் சரத்பவார், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இதில் இருக்கும் எவருக்காவது இந்த குழுவில் பங்கு பெற தகுதி உண்டா? சரத் பவார் பற்றி ஈ எறும்புக்கு கூட தெரியும். வீரப்ப மொய்லி ராஜாவிற்கு பரிந்து வந்தவர். பிரச்சனையை பெரியாதானவுடன் அதை பற்றி பேசாமல் நழுவுபவர். அழகிரி பற்றி சொல்லவே வேண்டாம். 

இந்த லட்சணத்தில் இவர்கள் ஊழல் ஒழிப்பு பற்றி பரிந்துரைகள் வழங்குவார்களாம். 

திருடர்களையே   திருட்டை குறைக்க வலி கேட்கும்  விசித்திரமான ஜனநாயகம் இந்தியாவில்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, January 17, 2011

முரளி தியோரா!


எவ்வளவு நாள் ஒரே பொய்யை சொன்னால் அது உண்மையாகும்? 

இங்கு முரளி தியோரா சொல்வது இந்தியாவின் பெட்ரோல் கம்பனிகள் நிறைய நஷ்டத்தை அடைவதால் பெட்ரோல் விலை உயர்வை தவிர வேறு வழியில்லை! எத்தனையோ முறை - வினவு மற்றும் பலர், ஏன் நான் கூட  - பெட்ரோல் விலையில் பாதிக்கு மேல் அரசு விதிக்கும் வரிதான் என்று சுட்டி காட்டிய பிறகும், அரசுக்கு சொந்தமான இந்த கம்பனிகள் நஷ்டமடைகிறது என்று சொல்வது ஜமக்காளத்தில் வடி கட்டிய பொய்!

ஒரு கையில் அரசு வரி விதித்து விலையை உயர்த்திவிட்டு, வரி போக அந்த நிறுவனங்களுக்கு போகும் வருமானம் கம்மி. அதனால் மேலும் விலையை உயர்த்துகிறோம் என்று அறிவிக்கிறார்?

இது போன்ற அண்ட புளுகு மந்திரிகளை என்ன செய்யலாம்?

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, January 15, 2011

மாண்டேக் சிங் அலுவாலியா!



இத்தனை நாள் அரசியல் வாதிகள் 2G விஷயத்தில் ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தது போதாது என்று இப்போது இவரும் இதற்கு ஒத்து ஊதுகிறார்! 

இதில் இவர் சொன்ன ஒரு முக்கியமான விஷயம் SWAN மற்றும் UNITECH கம்பனிகள் பாதிக்கும் கீழான பங்கை ஏகப்பட்ட விலைக்கு விற்ற குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லியிருக்கிறார். இவர் சொல்வது, அந்த அதிக பணம் promoter களுக்கு தரப்படவில்லை. அந்த கம்பெனியிலேயே இருக்கிறது. இது வேறு. பணம் கொடுத்து பங்கு வாங்குவது வேறு என்று. 

ஒரு கடை நடத்துகிறீர்கள். ஒரு வருடம் கழித்து வேறொருவர் பங்கு தாரராக சேர வருகிறார். கடையின் அப்போதைய மதிப்பில் பாதியை அவரை தர சொல்லி அவரை பாதி பங்குதாரராக்கி கொள்கிறீர்கள். அப்போது அவர் கொண்டு வந்த பணத்தை உங்களிடம் கொடுக்காவிட்டாலும் அதன் மீது உங்களுக்கு உள்ள உரிமை எப்போதும்  உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது. 

சேரும்போது கொடுக்கும் பணம் அந்த கம்பனியின் அன்றைய மதிப்பின் படி கொடுப்பது. கொடுத்தபின் இந்த மாதிரி கதை விடுவது மக்களை முட்டாளாக்கும் முயற்ச்சியே!

ஒன்று மட்டும் முழுமையாக தெரிகிறது. காங்கிரஸ்ஸின் பங்கு கைக்கு வந்து விட்டது. பூசணிக்காயை முழுமையாக மறைக்க பார்க்கிறார்கள். 

மாண்டேக் போன்றவர்களுக்கு பாரதி அன்றே சொன்னான், படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் ஐயோ என்று போவான் என்று!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, January 13, 2011

சரத் பவார்!





கொஞ்சம் பழைய செய்தி தான். இருந்தாலும் இப்போது பார்த்தாலும் வயறு எரிகிறது. யார் கிட்டயாவது சொல்லி புலம்பணும்னு தான் இந்த பதிவு! Sixth Agriwatch Global Pulse Summit இல் இந்த பிரகஸ்பதி சொன்ன யோசனை தான் அது. 

"பருப்பு வகைகள் நம் விவசாயிகள் வளர்ப்பது நம் தேவைக்கு போதவில்லை என்றால் அயல்நாட்டு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அதில் பருப்பு விளைவித்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும்" இது தான் அன்னார் திருவாய் மலர்ந்திருக்கும் முத்து.

நம் நாட்டில் விவசாயிக்கு எந்த அளவு இந்த அரசு பாதுகாப்பு கொடுக்கிறது என்பது ஊரறிந்த விஷயம். நம் நாட்டில் விளையும் சக்கரைக்கு குறைந்த விலை கொடுத்து வாங்காமல் அயல் நாட்டிலிருந்து அதிக விலை கொடுத்து சக்கரை இறக்குமதி செய்கிறது இந்த அரசு. கடந்த ஐந்து வருடங்களில் ஒரு லட்ச்சத்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் கடன் தொல்லை தாங்காமல். விவசாயிகள் எதிர்த்தபோதும் BT விதிகளை அறிமுகப்படுத்தியதே இவர்தான்!

உள்ளூர் விவசாயிகளை உள்ளூரில்  கஷ்டப்படுத்துவது போதாது என்று இப்போது வெளிநாட்டிலும் அதை செய்ய இவர் தயாராகிவிட்டார் போலுள்ளது! 

இது போன்ற உதவாக்கரை மந்திரிகளை (அடுத்த தேர்தலுக்குள்) பதவியிலிருந்து தூக்கி எறிய மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையே, அது ஏன்?
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, January 12, 2011

நகைச்சுவை! (Black Humour)





இன்றைய தினமலரில் படித்தது.


நிதியமைச்சர் அன்பழகன்: விலைவாசி உயர்வுக்கு பாலபாரதி வேதனை தெரிவித்தார். விலைவாசி உயர்வுக்காக, நானும் ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கிறேன். எந்த சூழ்ச்சியால் இந்த விலை உயர்ந்துள்ளது; எந்த முதலாளித்துவத்தை ஒழித்தால் காய்கறி விலை குறையும்; எப்படி வெங்காய விலை இறங்கும் என்று சொன்னால், விலை உயர்வை கட்டுப்படுத்த உதவியாய் இருக்கும். விலைவாசி உயர்வு மார்க்சிஸ் டுகளுக்கு மட்டும் ஏற்படவில்லை. எங்களுக்கும், காங்கிரசுக்கும் கூட விலை உயர்ந்துள்ளது. இதற்கு தீர்வு என்ன என்று சொன்னால், விலைவாசியை குறைக்க அடிப்படை கொள்கை கிடைக்கும்.
அப்போது இத்தனை நாள் இது கூட தெரியாமல் தான் நிதி அமைச்சராக இருக்கிறீர்களா? ஐந்து முறை ஆட்சியில் இருந்துவிட்டு இப்போது தான் அடிப்படை கொள்கையை தேடுகிறார் போல! 
வேதனை வேறு தெரிவிக்கிறாராம்! இவர் நிதி அமைச்சராக இருப்பதற்கு நாம் தான் வேதனை தெரிவிக்க வேண்டும்!

விலைவாசி உயர்வு: சட்டசபை கேன்டீனில் தக்காளி சட்னி "கட்"

இதற்கு கமென்ட் தேவையில்லை என்று நினைக்கிறேன்! 

வருமானம் கூடும் போது விலைவாசி கூடுவது இயற்கை : அமைச்சர் பொன்முடி புது விளக்கம்

விளக்கம் இருக்கட்டும். எவ்வளவு விலை வெளியில் ஏறினாலும் சட்டசபை மற்றும் பார்லிமென்ட் காண்டீனில் மட்டும் அதே விலைக்கு எல்லாம் விற்க்கபடுகிறதே, அதை மக்களும் எதிர்பார்த்தால் தப்பா?

""இந்த ஆண்டுக்குள் இரண்டு லட்சம் விவசாய மோட்டார்களுக்கு கண்டிப்பாக மின் இணைப்புகள் வழங்கப்படும்,'' என்று, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதி அளித்தார்.

ஆனால் அவற்றுக்கு தடையின்றி  மின்சாரமும் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்!

disclaimer : logo and news - property of dinamalar
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, January 7, 2011

காங்கிரஸ்ஸின் U Turn!





இதற்க்கு முன் காங்கிரஸ்ஸின் திட்டம் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் காங்கிரஸ் தி மு க வை ஒழிக்க முனைந்திருப்பதாக எழுதியிருந்தேன். 

இன்றைய செய்திகளை பார்த்தால் காங்கிரஸ் அந்த எண்ணத்திலிருந்து விலகி உள்ளது போல் தோன்றுகிறது. முதல் முறையாக கபில் சிபல் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று முழு பூசணியை மறைக்கும் வேலையில் ஈடு பட்டிருக்கிறார். 

கொஞ்சம் யோசித்தால், டி ஆர் பாலு சோனியாவை சந்தித்ததற்கும் இதற்கும் உள்ள சம்பந்தம் விளங்கும். தி மு க வை பொறுத்தவரை எப்பாடு பட்டாவது மறுபடி ஆட்சிக்கு வந்து விட்டால் முதலமைச்சர் நாற்காலியை கருணாநிதி தன் மகனுக்கு (எந்த மகன்?) தாரை வார்த்து கொடுத்து விடுவார் (ஜன நாயகம்!). இதற்காக எந்த அளவுக்கும் தாழ்ந்து போக தி மு க தயங்காது. இப்போது கருணா நிதிக்கு வயது 87. இதற்க்கு மேல் பதவி இல்லாமல் கட்சியை உடையாமல் நடத்துவது கஷ்டம். எல்லோரும் அவரை சார்ந்து இருப்பது பதவிக்கு மட்டுமே என்பது எல்லோருக்கும் தெரியும். 
ஆதாயம் இல்லாமல் வெறும் வாய் ஜாலத்தில் மயங்கி இருந்த கட்ச்சிக்காரர்கள் காலம் முடிந்தது. 

காங்கிரஸ் ஐ பொறுத்தவரை தனியே நின்று ஜெயிக்க துப்பில்லை. இப்போது கருணாநிதி நிலைமையில் என்ன சொன்னாலும் செய்வார். அதனால் கிடைத்தவரை லாபம் என்ற அவருடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பது. அவருக்கு பிறகு வருவதை அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இந்த முடிவு என்று நினைக்கிறேன்.

தை பிறந்தால் இந்த நிலையில் மாற்றம் இருக்கலாம். எதையும் எப்போது வேண்டுமானாலும் செய்ய துணிந்த அழகிரி எதையாவது செய்தால் காட்சி மாறலாம்!

cartoon :- belongs to the creator of the cartoon. thanks to the artist and google images!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, January 5, 2011

அரசின் தோல்வி!


மேலே உள்ள புகைப்படம் இன்றைய தினமலரில் வெளியானது. அரசு கூட்டம் முடிந்தவுடன் அலங்காரமாக கட்டியிருந்த காய் கறிகளை எடுத்து செல்ல பொதுமக்கள் சிலர் அலை மோதுவதை இதில் பார்க்கலாம். 

விண்ணை தொடும் காய்களின் விலை, மக்களை எந்த  அளவிற்கு வீழ்த்தியிருக்கிறது என்பது பார்த்தாலே தெரிகிறது. அதை விட முக்கியம், இலவசமாக கிடைப்பதை ஏற்றுக்கொள்வது தன்மானத்திற்கு இழுக்கு என்னும் மனநிலை இவர்களுக்கு சுத்தமாக இல்லை என்பதும் தெரிகிறது.

ஆட்சியாளர்களின் மிகப்பெரிய தோல்வி இது என்று கருதுகிறேன்!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...