Wednesday, November 6, 2013

உணவு எண்ணெய்!


அண்மையில் இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது. சீனாவில் கிட்டதட்ட 10% எண்ணெய் இப்படிப்பட்டது தான் என இது சொன்ன தகவல் எந்த அளவு உண்மையோ தெரியவில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம். இதை பார்த்தால் வெளியே சாப்பிடுவதை கண்டிப்பாக குறைக்கத் தோன்றும்!

ஒருவரை ஒருவர் ஏய்த்து பிழைப்பது எந்த அளவிற்கு போனால் இப்படியெல்லாம் கலப்படம் பண்ணத் தூண்டும்?


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Anonymous said...

நல்ல பதிவு! ஆனால் எண்ணெய் என்பதை எண்ணை எண்ணை என எழுதுவது சரியா? தமிழை பிழையின்றி எழுத முயல்வோமாக!

bandhu said...

எண்ணெய் என்பது தான் சரியான சொல் என்பது இதுவரை எனக்கு தெரியாது! அதை சரிபார்த்தபின் பதிவை திருத்தி விடுகிறேன். வருகைக்கு நன்றி விவரணன் நீலவண்ணன்!

bandhu said...

நீலவண்ணன்.. இந்த URL

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88
படி, எண்ணை என்பது பேச்சு வழக்கு. எண்ணெய் என்பதே சரியான எழுத்து வழக்கு என அறிந்தேன்.. பதிவை திருத்தி விடுகிறேன். தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

ஹோட்டலுக்குச் செல்லும்மமுன் யோசிப்பது நல்லது. நன்றி நண்பரே

bandhu said...

தவறாமல் வருகை தருவதற்கு நன்றி ஜெயக்குமார் சார்..

நம்பள்கி said...

மிக நல்ல பதிவு: ஒட்டு பட்டை இல்லையே.
உங்களுக்கு plus 1 வோட்டு போட நினைத்தேன்>

மறுபடியும்...மிக நல்ல பதிவு!

bandhu said...

மிக்க நன்றி நம்பள்கி.. ஓட்டு பட்டையை இணைத்து விடுகிறேன். சோம்பேறித்தனம் தான்..

ஜோதிஜி said...

அதிர்ச்சியாக உள்ளது.

இங்கே உள்ள நடைமுறை?

நடைவண்டிக் கடைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் என்பது உணவகங்கள் பயன்படுத்தி எண்ணெய் வகைகளை பாதி விலைக்கு வாங்கி அதை இவர்கள் பயன்படுத்துவார்கள்.

உதாரணமாக சரவணபவன் என்றால் அவர்கள் ஒரு வடையின் விலையை 20 ரூபாய்க்கு விற்பார்கள். அதுவே நடைவண்டிக்கடையில் 4 முதல் 6 ரூபாய்க்கு விற்பார்கள்.

சரவணபவன் ஒரு முறை தான் அந்த எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். பயன்படுத்திய எண்ணெய்யை பாதி விலைக்கு நடைபாதை வண்டிக்கடைகாரர்களுக்கு விற்று விடுவார்கள்.

bandhu said...

ஆம் ஜோதிஜி. இது பற்றி வேறொரு பதிவர் ஒரு பதிவிட்டிருந்தார். ஆனால் சீனாவில் நடப்பது கற்பனைக்கும் விஞ்சியது!

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு! ! தொடர வாழ்த்துக்கள்!


தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

துளசிதரன், கீதா