இது ஒரு சொந்த சோக கதை! சில (பல?) வருடங்களுக்கு முன் நான் இந்தியாவில் பொது துறையில் பணியில் இருந்த பொது, வருடாந்தர விடுப்புகள் (லீவ்)
Casual Leave - 10
Earned Leave - 1 day for every 11 days in service
Sick Leave - 2 months (not really sure)
Annual Holidays - 15 - 20
இதில் கடுப்பேற்றுவது என்றால், type of leaves cannot be combined in one stretch, சனி ஞாயிறு முன்னும் பின்னும் லீவ் எடுத்தால் அவையும் லீவ் ஆக கணக்கில் சேர்வது என்பது போன்றவை. தொலை தூரத்தில் வேலையில் இருந்ததால் ஊருக்கு போக ஒவ்வொரு லீவையும் அடிக்கடி கணக்கில் சரி பார்த்து கொண்டே இருப்பதால், மேலே சொன்னவை வயிறெரிய வைக்கும்.
ஆனால், கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் இருப்பதால், இந்தியாவில் கொடுத்த சலுகைகள் எவ்வளவு தாராளமானவை என்று தெரிகிறது. இங்கு வந்தவுடன் வருடாந்தர விடுப்புகளில் முதல் கொடுமை, எந்த கம்பெனி யாக இருந்தாலும் வருடத்திற்கு holidays 10 தான். நான் அறிந்தவரை இதில் பெரிய வித்யாசம் இருப்பதாக தெரியவில்லை.
இரண்டாவது, Paid Time Off (PTO). இது நம் ஊரில் இருக்கும் casual leave + earned leave க்கு சமம். பெயரளவில். பொதுவாக இவை வருடத்திற்கு 10 முதல் 20 வரை கம்பெனிக்கு கம்பெனி வித்தியாசப்படுகிறது. ஆனாலும், இது அநியாயத்திற்கு குறைவு. நம் ஊரில் இருக்கும் சில குறைபாடுகள் (சனி ஞாயிறை லீவில் சேர்ப்பது போன்றவை) இங்கு களயபட்டாலும், பொதுவாக லீவ் மிக குறைவு என்பது நிச்சயம்.
வெளியூரில் இருக்கும்போதே நிறைய லீவ் தேவையான எனக்கு, வெளி நாட்டில் இப்போது இருப்பதால் இந்த குறை பூதாகாரமாக தெரிகிறதோ என்னவோ!
அதுவும் ஒவ்வொரு முறை இந்திய போகும்போதும் பார்த்த நண்பர்கள் / சொந்தங்களை விட பார்க்காமல் விட்டவர்கள் மிக அதிகமாக இருக்கும்போதும், பார்க்க முடியாமல் விட்ட சொந்தங்கள் அடுத்தமுறை இந்திய போவதற்குள் மண்ணிலிருந்து மறையும்போதும், கொஞ்சம் நிறைய நாள் லீவ் இருந்திருந்தால் இவர்களையும் பார்த்திருக்கலாமோ என்று தோன்றும்போதும்...
லீவ் அதிகம் இல்லாதது பெரிய குறை தான்