டிஸ்க்ளைமர் : இது முழுக்க என் கற்பனை மட்டுமே. நடக்க நிறைய சான்ஸ் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
தமிழ் நாட்டில் இது வரை எப்போதும் இல்லாத அரசியல் சூழல் நிலவுகிறது. அசுர பலம் பொருந்தியதாக காட்சியளிக்கும் தி மு க உண்மையில் அதை எடுத்து நடத்த பலம் பொருந்திய அடுத்த தலைமுறை தலைவர்கள் இல்லாமல் இருக்கிறது. charismatic leader என்று எவரும் தென்பட வில்லை. கருணாநிதி அளவிற்கு அவர் வாரிசுகள் ஆளுமை உள்ளவர்களாக பரிமளிக்க வில்லை என்று நினைக்கிறேன்.
அ தி மு க விலோ எப்போதுமே அடுத்து யாருமே கிடையாது
அதனால், காங்கிரஸ் இப்போது சரியாக காய் நகர்த்துகிறது. கூடவே இருந்து தி மு க விற்கு மேலும் மேலும் நெருக்கடி கொடுக்கிறது. ஜெயலலிதாவும் எப்படியும் காங்கிரஸ் தன் பக்கம் வரும் என்று அவர்களை எதிர்க்காமல் இருக்கிறார். தி மு க வும் உறவை விட்டால் நெருக்கடி இன்னும் அதிகமாகுமோ என்று பயப்படுவது போல் உள்ளது.
பல வருடங்களாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் இப்போது திமுக வை கொஞ்சம் கொஞ்சமாக காலி பண்ணும் வேலையே நடத்துகிறது. கலாநிதி / தயாநிதி மாறன்கள் பவர் இருக்கும் பக்கமே சாய்வார்கள்.
அதனால், இன்னும் இரண்டு மாதத்திற்குள் தி மு கவை ஒரு வழி பண்ணி விட்டு தனியாக தேர்தலை சந்திப்பார்கள். எல்லோருக்கும் தெரிந்த முகமாக ப சிதம்பரம் இருப்பதால் அவர் முதலமைச்சர் பதவிக்கு போட்டி இடுவார் என்று நினைக்கிறேன்..
இது என் எண்ணங்கள் மட்டுமே. தவறிருந்தால் பொறுத்தருள்க!
5 comments:
அப்படி நடந்தால் நல்லது தான்.காமராசரின் கால் தூசிக்குக்கூடத் தகுதியில்லாதவர்கள் காமராசர் ஆட்சியென்று பேசுவதெல்லாம் எடுபடாது.செத்துக் கிடந்த காங்கிரசு ஒரேயடியாகச் செத்து மடிந்து விடும்.டெபாசிட்டை இழந்து இளங்கோவனும் மற்ற வீரப் புதல்வர்களும் உருப்படியாக ஏதாவது வேலைக்குச் சென்று உழைத்தால் தெரியும் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று.
வருகைக்கு நன்றி, தமிழன் ..
எளிமையான தமிழில் அக்கறையுடன் எழுதுகிறீர்கள்.
மாற்றங்கள் நல்லவையாக மலர ,
பிறக்கும் இப்புத்தாண்டு ,
வழி செய்யும் என்று
நம்பி இருப்போம்
வருகைக்கு மிக்க நன்றி, goma. வரும் புத்தாண்டு நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்று நானும் நம்புகிறேன்!
Post a Comment