Sunday, January 3, 2016

பழைய பட விமர்சனம்! கேப்டன் பிரபாகரன்




பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் கேப்டன் பிரபாகர் படம் பார்த்தோம். சுவாரஸ்யமாக இருந்தாலும் அப்போது பார்த்தபோது தெரியாதது, எந்த அளவுக்கு எல்லாவற்றையும் ஒரே படத்தில் கொட்டி கிளறியிருக்கிறார்கள் என்பது!

ஏற்கனவே 100 வது படம் கமல், ரஜனி இருவருக்குமே தோல்விப் படங்களாக அமைந்ததால் விஜயகாந்த் எந்த ரிஸ்கும் எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.


  • போலிஸ் ஸ்டேஷனில் கற்பழிப்பு முயற்சி - வேலியே பயிரை மேய்கிறது போன்ற வீர வசனங்கள்
  • ஷோலே பாதிப்பில் ரயிலை குதிரைகளில் துரத்தி பெரிய சண்டைக் காட்சி (நம் ஊரில் யார் குதிரையில் ரயிலை துரத்தி கொள்ளை அடித்தார்கள்?)
  • இளையராஜா இசையில் குரூப் டான்ஸ் பாடல் - ஆட்டமா தேரோட்டமா - 
  • பலசாலியான வில்லன் - மன்சூரலிகானின் அட்டகாச நடிப்பு 
  • எல்லோருக்கும் தெரிந்த மற்றொரு ஹீரோ - கௌரவ தோற்றத்தில் - சரத் குமார் 
  • கொஞ்சம் தெரிந்த இன்னொரு ஹீரோ - லிவிங்க்ஸ்டன் 
  • இந்த கௌரவ ஹீரோக்களின் பரிதாப மரணம் 
  • கௌரவத் தோற்றத்தில் நம்பியார் (ஒரு வசனம் கூட இல்லை! யூ டியுப் பிரிண்டில். மௌன விரதமோ என்னமோ!)
  • கவர்ச்சியான ரொமான்ஸ் காட்சிகள் - சரத் குமார் - ரம்யா கிருஷ்ணன் 
  • க்ளைமாக்சில் சண்டைக் காட்சி நடுவில் நிறை மாத கர்ப்பிணி தவிப்பு -- 
  • ரத்தக் களரி சண்டைக்கு நடுவே குழந்தை பிறப்பது -- ரம்யா கிருஷ்ணன் 
  • குழந்தையை பிரசவித்த வுடன் தாய் மரணம் -- ரம்யா கிருஷ்ணன் 
  • வில்லனை பிடித்த வுடன் நின்று விடாமல் நீளமான தீப்பொறி பறக்கும் வசனங்கள் --
  • கோர்ட்டில் மூன்று கொலை செய்த விஜயகாந்த் நிரபராதி என்று விடுதலையாவது (
  • கடைசி கோர்ட் காட்சிகள் எல்லாம்  படு முட்டாள் தனம்!)
  • விஜயகாந்திற்க்கே உரிய கால்களை அதிகம் உபயோகித்து நிறைய சண்டைகள்..



Throw the kitchen sink என்பார்கள். குத்துச் சண்டையில் கடைசி ரௌண்டில் ஜெயிக்க தனக்குத் தெரிந்த எல்லா வகை தாக்குதல்களையும் பயன்படுத்தி அடிப்பது. (கிடைத்தால் கிச்சன் சிங்கை தூக்கி அடி!) உண்மையிலேயே எல்லா வித்தையையும் இறக்குவது என்பது இது தான்.

விஜயகாந்தின் உழைப்பு அசர வைக்கிறது. படத்தின் பெரிய வெற்றிக்கு அவர் மட்டுமில்லாமல் மன்சூரும் காரணம். மற்றதெல்லாம் சேப்டி நெட் தான்!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Thulasidharan V Thillaiakathu said...

Bhandu நேற்றே இந்தத் தலைப்பைப் பார்த்ததும் எடுத்து வைத்துவிட்டோம். ஆனால் கொஞ்சம் பயம்..ஹிஹி வேறு ஒன்றும் இல்லை படம் விமர்சனம் என்றாலும் கேப்டன் என்ற பெயர் இதிலிருந்துதானே வந்தது. அதனால் எங்கேனும் அவரது அரசியல், எதிர்கால..........என்று சொல்லிப் பயமுறுத்திவிடுவீர்களோ என்று...ஹஹஹ்

நல்ல காலம் விமர்சனம் மட்டுமே...ஆம் அப்போது இந்தப் படம் செம ஹிட் அதுவும் விஜயகாந்திற்கு. நேற்று கூட இந்தக் கர்ப்பிணிப் பெண், சண்டைக்கிடையில் பிரசவம், பெண் இறத்தல் என்று நாசர் வில்லனாக நடித்த ஏதோ ஒரு படத்தில்....பெயர் தெரியவில்லை..இது பெரும்பான்மையான படத்தில் வருவதுதான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்தப் படத்திலிருந்துதான் மெதுவாக அரசியல் நெடியில் விஜயகாந்த் அரசியலுக்குள் வருவதற்கான அறிகுறிகள் என்று இல்லையோ

இப்போதும் எல்லா கமர்சியல் படங்களும் இங்கு நீங்கள் சொல்லியிருப்பதைத்தான் டிட்டோ...

கீதா

bandhu said...

வருகைக்கு நன்றி கீதா. கமர்ஷியல் ஐட்டங்கள் எல்லா படத்திலும் இருந்தாலும், இந்தப் படத்தில் மொத்தமாக!