Friday, January 1, 2016

அரசியல் வெற்றிடம்முதலில் ஒரு தன்னிலை விளக்கம். நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன். நான் தமிழகம் இப்போதிருக்கும் நிலையை பார்ப்பது செய்தி ஊடகங்கள் மூலமும், சமூக வலை தளங்கள் மூலமும், பதிவுகள் மூலமும் தான்.

இப்போது இருப்பது போல ஒரு அரசியல் வெற்றிடம் எப்போதுமே இருந்ததாக நினைவில்லை. வெள்ளம் வந்த போதுதான் எந்த அளவு அரசு செயல்படாத அரசாக இருக்கிறது என்று தெரிந்தது. ஊரே முழுகிக் கொண்டிருக்கும் போதும் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வெளியே வராத முதல்வரை என்ன சொல்வது?

திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதி தலைமையை ஸ்டாலினுக்கு எளிதாகக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார் என நினைக்கிறேன். சென்ற முறை ஆட்சியில் இருந்தபோது இரண்டாவது அல்லது மூன்றாவது வருடம் ஸ்டாலினைக் கொண்டு வந்திருந்தால் transition எளிதாக இருந்திருக்கும். இப்போது யார் கூட்டணிக்கு வருவார்கள் என வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் நிலையில் இருக்கிறார்கள். வெள்ளத்தில் இறங்கி வேலை செய்திருந்தால் ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும். மிக தாமதமாக குறைந்த இடங்களில் தென்பட்டது பெரிதாக பலன் அளிக்கவில்லை என நினைக்கிறேன்.

வைகோ வை பொருத்தவரை தங்கத்தட்டில் கொடுத்த வாய்ப்பை தவற விட்டவர் என நினைக்கிறேன். இனி எப்போதும் அந்த வாய்ப்பு வராது. எப்போது தமிழகத்தின் நலத்தை விட தமிழீழத்தின் நலத்தை அதிகமாக  அவர் மதிபிட்டாரோ அப்பொழுதே அவர் அரசியலில் தனிப்பட்டு விட்டார். அவர்தான் புரிந்து கொள்ளவில்லை.

விஜயகாந்தை பொறுத்த வரை, பொறுப்பிலாமல் நடந்து கொள்வதே அவர் மிகப் பெரிய பலமாகக் கருதிக் கொள்கிறார். எல்லோரையும் துச்சமாக மதிப்பது வேறு. பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வேறு. அந்த வித்யாசம் தெரியாமல்தான், யாரையும் மதிக்காமல், அது வெளியே தெரியும் அளவு பொறுப்பிலாமல் நடந்து கொள்கிறார். அதை உணர்ந்து கொள்ளும் வரை, அவர் 10% ஓட்டோடு திருப்தி அடைய வேண்டியது தான்!


ராமதாசை பொருத்தவரை அவர் credibility யை அவரே போக்கிக்கொண்டு விட்டார். மாற்றி மாற்றி அலியன்ச் வைப்பது பெரிய தவறு ஒன்ன்றும் இல்லை. யாருக்குமே கொள்கை என்று ஒன்று கிடையாது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். என்ன. இது பா மா கா விஷயத்தில் வெளிப்படையாக தெரிந்து விட்டது. அது தான் தவறு. அதை மீறி வருவது என்பது அவ்வளவு எளிதல்ல.

திருமாவளவன் போன்றவர்கள் உண்மையாக உறுதியாக தன் கொள்கையில் (!) நின்றிருந்தால் ஒரு credibility  இருந்திருக்கும். ஆனால் கொள்கை (!​) விஷயத்தில் எதிர் நிற்கும் பா மா கா போன்றவர்களுடன் எப்போது கூட்டணி அமைத்தாரோ, ராஜ பக்ஷேவுடன் புகைப் படத்துக்கு போஸ் கொடுத்தாரோ அப்போதே அவர் அழிந்துவிட்டார். இவரை அழித்ததில் கருணாநிதியின் பங்கு மிக அதிகம் என நினைக்கிறேன்.

கம்யூனிஸ்ட் களை பொருத்தவரை அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. மேலும், ஒன்றுக்கும் உதவாத சீனா ஆதரவு, ரஷ்யா ஆதரவு என்பதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல் மக்களை பாதிக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்களேயானால் scope உண்டு. என்னைப் பொருத்தவரை, மக்களை பாதிக்கும் விஷயங்களில் உண்மையாக அக்கறை செலுத்துபவர்கள் இவர்கள் மட்டுமே. என்ன பிரயோஜனம். அதை மக்கள் உணரும் வரை இவர்களுக்கு விடிவு காலம் கிடையாது.

பிஜேபி யை பொருத்தவரை தமிழிசை போன்றவர்களை தவிர்த்து வேறு யாரும் அவர்களை சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்.

கடைசியில் என்ன மிச்சம் என்று பார்த்தால், இருப்பது வெற்றிடம் என்ற உண்மை தான்.

மீள ஒரே வழி , தேர்தலில் ஒரு மைனாரிட்டி அரசு வரவேண்டும். அந்த அரசு, குறைந்தது இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால்தான் அரசு அமைக்க முடியும் என்ற நிலை வரவேண்டும். அப்போது தான் கொஞ்சமாவது பொறுப்பான அரசு வரும்!மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Avargal Unmaigal said...


தலைவர்களைப் பற்றி கூட்டியோ குறைத்தோ சொல்லாமல் மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள். இதுதான் தமிழகத்தின் உண்மை நிலை.... நிச்சயம் ஒரு மாறுதல் வரும் அது நல்லதாக இருந்தால் தமிழகம் வளம் பெரும் இல்லையென்றால் அதோகதிதான்

bandhu said...

வருகைக்கு மிக்க நன்றி, அவர்கள் உண்மைகள்.. பார்ப்போம். மாறுதலே இல்லாதது மாறுதல் ஒன்று தான்! அந்த நம்பிக்கையில்.

Thulasidharan V Thillaiakathu said...

மிகச் சரியான அலசல். எந்தக் கட்சியுமே தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவில்லை அதாவது மக்களின் மனதில். இதுவரை இங்கி பிங்கி பாங்கி என்பது போலத்தான் ஒன்று அதிமுக இல்லை திமுக என்று மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றது. இந்த முறை திமுக ஃபெயில் என்றால் அடுத்த முரைஅதிமுக. அதிமுக ஃபெயில் என்றால் திமுக. மிச்சம் உள்ள எந்தக் கட்சியுமே தங்க்ளைப் பலப்படுத்திக் கொள்ளவில்லை. காரணம் எந்தக் கட்சிக்குமே தமிழ்நாட்டின் தொலை நோக்குத் திட்டங்கள், மக்களைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைக் கருத்தில் கொண்டு தேர்தலை அணுகுவது இல்லை. இலவசங்கள் பணம் என்று இவைதான். மேம்பாலங்கள் கட்டுவது என்பது ஒரு வளர்ச்சிப்பணித் திட்டமல்ல. அதுவும் நல்ல திட்டமிட்டுக் கட்டப்படவில்லை. இன்று அவை பல இடங்களில் வேஸ்டாகவே இன்னும் போக்குவரத்து நெரிசலை தீர்ர்க்காமல் இருக்கின்றன. இதற்கும் அடிமட்டத்திலிருந்து தீர்வுகள் ஆராயப்படவேண்டும். ப்ரொஃபஷனல் அரசியல் வரும்வரை அதாவது நல்ல கேரிஸ்மாட்டிக் தலைமையுடன் கூடிய ஒரு கட்சி வரும்வரை தமிழகத்திற்கு விடிவுகாலம் வருமா என்பது கவலைக்குரிய இடம், வெற்றிடமே என்பது எனது தாழ்மையான கருத்து.

கீதா