Monday, November 25, 2013

அமெரிக்கா ஏன் உலகத்தின் தலை சிறந்த நாடு இல்லை..


HBO என்பது அமெரிக்காவில் இருக்கும் ஒரு ப்ரீமியம் டி வி சேனல். ப்ரீமியம் என்பதால் எந்த விளம்பரதாரர் தொந்தரவும் இல்லாமல் நிகழ்ச்சியை பார்க்க முடியும். இந்த சேனலில் முக்கியமாக மூன்று வித நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுகிறது. சினிமா. சின்னத்திரை  தொடர்கள். பே-பெர்-வியு நிகழ்ச்சிகள்.

இதில் 2012 இல் இருந்து வெளிவரும் தொடர் The Newsroom. ஒரு தொலைகாட்சியில் நியூஸ் வழங்கும் ஒரு டீமில் நடக்கும் நிகழ்ச்சிகள், எப்படிப்பட்ட நேரத்திலும் நேர்மையாக செய்திகளை வழங்க வேண்டும் என்று துடிக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்.. முடிந்தவரை எல்லோரையும் திருத்த முயற்ச்சிக்கும் செய்தியின் நேர்முக பேட்டியாளர்.. உண்மையாக உழைக்கும் துடிப்பான இளைஞர்கள்..அவர்கள் நேர்மையாக இருப்பதால் அவர்களுக்கு வரும் இடையூறுகள், யார் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று அவர்களை காப்பாற்றும் அந்த நெட்வொர்க்கின் தலைவர் என்று பிரமாதமான கேரக்டர்கள்.. அந்த தொடரில் அலசப்படும் நியூஸ் எல்லாம் அந்தந்த நேரத்தில் நடந்த நிகழ்சிகள் என்று.. அருமையாக எடுக்கப்பட்ட தொடர்..

அந்த தொடரின் முதல் நிகழ்ச்சியின் முதல் சில நிமிட கிளிப்.. அதில் இந்த தொடரின் ஹீரோ அமெரிக்கா இன்று ஏன் சிறந்த நாடு இல்லை என்று விளக்கும் ஒரு சுவாரஸ்யமான ஸீன் ..


இது போன்ற ஆக்க பூர்வமான தொடர்கள் நம் ஊரில் ஏன் வருவதில்லை?


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

வவ்வால் said...

நம்ம ஊரில் 'தன்னிச்சையான" சேனல்கள் இல்லை, எல்லாமே தொழிலதிபர்கள் அல்லது அரசியல் பின்ப்புலங்களில் உள்ளவை, எனவே உண்மையாக நிகழ்ச்சி எடுத்தால் 'நீ மட்டும் யோக்கியமானு' இன்னொருத்தன் கேட்பானே அவ்வ்!


"HBO" என்பது ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு சொந்தமான சேனல், அங்கெல்லாம் சினிமாத்தயாரிப்பாளர்கள் அரசுக்கு ஜால்ரா அடிக்கனும்னு கட்டாயமில்லை, மேலும் ஜால்ரா அடிச்சாலும் ,அது அந்த தனிப்பட்ட தயாரிப்பாளரோட முடிஞ்சிடும், அவரோட ஜால்ரா கொள்கைய அப்படியே ஒட்டு மொத்த தயாரிப்பாளர்கள் மேலும் திணிக்க முடியாது.

அங்கேயும் ரிபப்ளிகன்,டெமக்ரடிக் நிலைப்பாட்டில் சேனல்கள்,தயாரிப்பாளர்கள் செயல்ப்படுறாங்க, ஆனால் அவ்வப்போது வெளிப்படையாக இப்படி சொல்லவும் செய்வாங்க.

நம்ம ஊரில் அடிச்சா ஜால்ரா, திட்டுனா எக்ஸ்ட்ரீம்னு போயிடுவாங்க, ரெண்டுமே உண்மையா இருக்காது அவ்வ்!

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம் தான்...

ஆக்க பூர்வமான தொடர்களை நாம் ஆரம்பிப்போம்...!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

கரந்தை ஜெயக்குமார் said...

சுவாரஸ்யம்தான்

bandhu said...

வவ்வால்.. வருகைக்கு நன்றி.. உங்கள் ஆழமான பின்னூட்டங்களுக்கு நான் ரசிகன். தங்கள் வருகை என்னை தன்யனாக்கியது!

bandhu said...

தனபாலன் சார்.. எல்லோரையும் ஊக்குவிப்பதில் தங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை! வருகைக்கு நன்றி!

bandhu said...

ஜெயகுமார் சார்.. தவறாது வருகை தருவதற்கு நன்றி!

Suresh Kumar said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

Thulasidharan V Thillaiakathu said...

நம்ம ஊர் சானல்கள் எல்லாமே பரபரப்புசெய்தியை யார் முதலி தருவர் என்ற போட்டியிலும், ரேட்டிங்கிலும், சினிமாவிலும் மூழ்கி இருக்கும் போது இது போன்ற நல்ல ஆக்கபூர்வமான நிகழ்சிகளை எப்படி எதிர்பார்க்க முடியும்?! நல்ல அருமையான பதிவு!! தொடர்கிறோம். வாழ்த்துக்கள்!

தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

துளசிதரன், கீதா

bandhu said...

சுரேஷ் குமார்.. உலகம் சுற்றும் வாலிபனான நீங்கள் என் தளத்திற்கு வந்தது எனக்குப் பெருமை! நன்றி

bandhu said...

துளசிதரன், கீதா.. தங்கள் மகன் பற்றிய பதிவு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தது. அதில் ஒரு சிறு பகுதியாவது என் மகனுக்கு செய்யவேண்டும் என்று உத்வேகத்தை அளித்தது! நன்றி!

ஜோதிஜி திருப்பூர் said...

புதிய தலைமுறையில் வரும் ரௌத்ரம் பழகு நிகழ்ச்சியை பாருங்கள். நம்மைச் சுற்றிலும் உள்ள வாழ முடியாதவர்களின் வாழ்க்கையைப் பற்றி மிக அழகாக நேர்மையாக பதிவு கொண்டு வருகின்றார்கள்.

bandhu said...

கட்டாயம் பார்க்க முயற்சிக்கிறேன் ஜோதிஜி.. வருகைக்கு நன்றி