Wednesday, August 18, 2010

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் (1)

இது என் சமீபத்து இந்திய பயணத்தின் இரண்டு அனுபவங்கள் 


இரண்டும் பதிவாளர் அலுவலகத்தில். 
முதலாவது சென்னை அருகில் உள்ள புகழ் பெற்ற திருத்தலம் ஒன்றில். கோவிலில் நடை பெற்ற திருமணத்தை பதிவு செய்ய வேண்டியிருந்தது. மணமகன் வெளி நாட்டில் வசிப்பதால் குறைந்த கால அவகாசமே இருந்தது.
பதிவு சான்றிதழ் வாங்க யாரும் பொறுப்பான பதில் தர வில்லை. பக்கத்தில் இருந்த டீ கடைக்காரர் அறிவுரைப்படி தரகரை அணுகினோம் (தவறு தான். வேலை ஆகவேண்டுமே) . எல்லா சான்றிதழ்களும் இருந்தும் Rs. 3000 கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் மூன்றாம் நாள் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதில் எங்களின் ஒரே special need சான்றிதழ் உடனே கிடைக்க வேண்டும் என்பது தான். அதற்க்கு Rs. 3000 அதிகம் தான்!


இரண்டாவது power of attorney கொடுக்க வேண்டியிருந்தது. இது சென்னையில் ஒரு பதிவாளர் அலுவலகத்தில்.  மாடியில் அலுவலகம். கீழே இருக்கும் அனைத்து கடைகளும் தரகர் வேலை பார்ப்பவர்கள். முகம் பார்த்து Rs 1100 என்றார்கள். இதில் எந்த விதத்திலும் குறைப்பதே இல்லை.  அங்கே ஒரு பெண் அலுவலர் டெஸ்க் டிராயரில் பணத்தை திணிப்பது பார்த்து அசந்து போனேன்! யார் சொன்னது பெண் முன்னேற்றம் இல்லை என்று?


ஒரு சாதாரண சான்றிதழ் வாங்கக்கூட லஞ்சம் கொடுத்தே ஆகா வேண்டுமா?
இதற்க்கெல்லாம் லஞ்சமில்லாமல் சான்றிதழ்கள் பெற வழியே இல்லையா?

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, August 17, 2010

உமாஷங்கருக்கு ஆதரவாக..

இந்தியா இன்று எதிர்நோக்கியிருக்கும் பெரிய பிரச்சனை லஞ்சம். அதற்க்கு எதிராக போராடும் உமா ஷங்கர் பழிவாங்கப்படுவது பெரிய கொடுமை. காலம் எவரையும் உயர்த்தும்.. எவரையும் தாழ்த்தும். அவர் மேலே உயரும் நாள் அதிக தூரத்தில் இல்லை. 



மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...