Tuesday, June 26, 2012

இந்திய பொருளாதாரம்.. ஆபத்தான பாதையில்!இத்தனை நாட்கள் நமது நாட்டில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் அந்நிய முதலீடு குவிந்து வந்தது. அதை வைத்து எந்த ஒரு நல்ல அரசும் செய்ய
 வேண்டியவை

  • நல்ல உள் கட்டமைப்பு
  • எல்லோருக்கும் எளிதில் நல்ல குடிநீர்
  • எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி
  • விளை பொருட்களை கெடாமல் வைத்திருக்க கோல்ட் ஸ்டோரேஜ் வசதிகள் 
  • பெரும்பான்மையான மக்கள் கண்ணியத்துடன் வாழ வேலை வாய்ப்பு 
  • எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய நல்ல கல்வி..

இதில் முதல் ஒன்றில் மட்டும் நல்ல முன்னேற்றம். மற்ற எதிலும் கடந்த இருபது வருடங்களில் பெரும்பாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இல்லையேல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் மோசமாக போய்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில், ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை தடுக்க அரசு செய்வது, மேலும் முதலீட்டை வசீகரிக்க, இது நாள் வரை இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்பு துறையிலும் அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கிறது.

இது மிக ஆபத்தானது. ஆடம்பரத்திற்காக கந்து வட்டி காரனிடம் கடன் வாங்குவது போன்றது! மிக விரைவில் அழிவை தந்துவிடும்.

ஏதாவது அதிசயம் நடந்து இந்த ஆட்சி ஒழிந்து நல்ல ஒரு ஆட்சி வராதா என்று ஏங்குகிறேன்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, June 15, 2012

ஏழை மக்கள் உபயோகிக்கும் பெட்ரோலிய பொருள் அதிரடி விலை குறைப்பு!
ஒரு பக்கம் பகல் கொள்ளையாக பெட்ரோலின் மேல் அசலைவிட அதிகமாக வரி வைத்து விற்று விட்டு 'ஒரே நஷ்டம்' என்று பச்சை புளுகு புளுகும் 'படித்த நல்லவர்கள்' ஆளும் இந்த அரசு! இந்த பெட்ரோல் கொள்ளை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்தாலும், வவ்வால் மிக தெளிவாக அவர் பதிவில் விளக்கியிருந்தார். 

அதே நேரம் இந்தியாவில் பரம ஏழைகள் தினமும் உபயோகிக்கும் விமான பயணிகள் வசதிக்காகவும், விஜய் மல்லய்யா, கலாநிதி மாறன் போன்ற 'உத்தம' முதலாளிகள் நலனுக்காகவும் அதிரடியாக 5% Jet Fuel விலையை 
இந்த அரசு குறைத்திருக்கிறது.  ஏப்ரல்   மாதத்திலிருந்து இது வரை ஐந்து முறை விலை குறைத்திருக்கிறதாம் இந்த அரசு! 

இந்த jet fuel மட்டும் என்ன தாவரத்தில் இருந்தா விளைகிறது? முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பெட்ரோலிய பொருள் தானே? அப்போது மட்டும் ரூபாய் மதிப்பு, உலக சந்தையில் விலை உயர்வு போன்ற காரணங்கள் கிடையாதா? 

எந்த அளவு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்!  

வயறு எரிகிறது!  'படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான்' என்னும் பாரதி வாக்கு உண்மையாக காத்திருக்கிறேன்!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, June 6, 2012

அமெரிக்காவில் பெட்ரோல் விலை..பல்லாயிரக்கணக்கான கோடி 'நஷ்டத்தில்' இருக்கும் பொது துறை பெட்ரோலிய நிறுவனங்களின் 'நஷ்டத்தையும்' பொருட்படுத்தாமல் மக்களை காக்க ஒரு லிட்டருக்கு வெறும் ரூ.  5.50 மட்டுமே கருணையுடன் விலை உயர்த்திய மன்மோகன் (சோனியா) தலைமையிலான அரசின் பார்வைக்கு :

தாங்கள் எப்போதும் உதாரணம் காட்டும் அமெரிக்காவில் பெட்ரோல் அரசு நிறுவனங்களால் சுத்திகரிக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க தனியார் மாத்திரமே செய்கிறார்கள். அரசு பெட்ரோல் விலையில் தலையிடுவதில்லை. எந்த வித 'மான்யங்களும்' கொடுப்பதில்லை. இருந்த போதும், இன்றைய விலை கிட்ட தட்ட லிட்டருக்கு  ரூ. 52 மட்டுமே! ஆனால் அமெரிக்காவின் தனி நபர் வருமானத்தில் பத்தில் ஒரு பாகம் தனிநபர் வருமானமாக இருக்கும் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 75 -க்கும் அதிகம்! இது எந்த விதத்தில் சரி?

இந்த முறை விலை ஏற்றியதற்கு நீங்கள் சொன்ன காரணம் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு. உண்மை தான். ருபாய் மதிப்பு கிட்டதட்ட 20% குறைந்திருக்கிறது  இந்த மூன்று மாதங்களில்! ஆனால், அதே சமயம், சுத்திகரிக்காத பெட்ரோலின் மதிப்பு பாரல் ஒன்றிற்கு  $ 110 -இலிருந்து $ 85 -இற்கு சரிந்திருக்கிறதே.  அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் கண்டுகொள்ள வில்லையே! அதுவும், கொள்முதல் விலை குறைந்தது கிட்ட தட்ட அதே 20% !
இருந்தும் விலையை  ஏற்றாமல் சமாளிக்க முடியவில்லை   என்றால் நீங்கள்   பெரும் பொய்யர் என்று தெரிகிறது!

ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. நீங்கள் பிரதமராக இருக்கும் வரை மக்களுக்கு விடிவு காலமே இல்லை!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...