Wednesday, December 29, 2010

அக்கரை பச்சை!

இது ஒரு சொந்த சோக கதை! சில (பல?) வருடங்களுக்கு முன் நான் இந்தியாவில் பொது துறையில் பணியில் இருந்த பொது, வருடாந்தர விடுப்புகள் (லீவ்) 

Casual Leave - 10
Earned Leave - 1 day for every 11 days in service
Sick Leave - 2 months (not really sure)
Annual Holidays - 15 - 20

இதில் கடுப்பேற்றுவது என்றால், type of leaves cannot be combined in one stretch, சனி ஞாயிறு முன்னும் பின்னும் லீவ் எடுத்தால் அவையும் லீவ் ஆக கணக்கில் சேர்வது என்பது போன்றவை. தொலை தூரத்தில் வேலையில் இருந்ததால் ஊருக்கு போக ஒவ்வொரு லீவையும் அடிக்கடி கணக்கில்   சரி பார்த்து கொண்டே இருப்பதால், மேலே சொன்னவை வயிறெரிய வைக்கும். 

ஆனால், கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில்  இருப்பதால், இந்தியாவில் கொடுத்த சலுகைகள் எவ்வளவு தாராளமானவை என்று தெரிகிறது. இங்கு வந்தவுடன் வருடாந்தர விடுப்புகளில் முதல் கொடுமை, எந்த கம்பெனி யாக இருந்தாலும் வருடத்திற்கு holidays 10 தான். நான் அறிந்தவரை இதில் பெரிய வித்யாசம் இருப்பதாக தெரியவில்லை. 
இரண்டாவது, Paid Time Off (PTO). இது நம் ஊரில் இருக்கும் casual leave + earned leave க்கு சமம். பெயரளவில். பொதுவாக இவை வருடத்திற்கு 10 முதல் 20 வரை கம்பெனிக்கு கம்பெனி வித்தியாசப்படுகிறது. ஆனாலும், இது அநியாயத்திற்கு குறைவு. நம் ஊரில் இருக்கும் சில குறைபாடுகள் (சனி ஞாயிறை லீவில் சேர்ப்பது போன்றவை) இங்கு களயபட்டாலும், பொதுவாக லீவ் மிக குறைவு என்பது நிச்சயம். 

வெளியூரில் இருக்கும்போதே நிறைய லீவ் தேவையான எனக்கு, வெளி நாட்டில் இப்போது இருப்பதால் இந்த குறை பூதாகாரமாக தெரிகிறதோ என்னவோ!

அதுவும் ஒவ்வொரு முறை இந்திய போகும்போதும் பார்த்த நண்பர்கள் / சொந்தங்களை விட பார்க்காமல் விட்டவர்கள் மிக அதிகமாக இருக்கும்போதும், பார்க்க முடியாமல் விட்ட சொந்தங்கள் அடுத்தமுறை இந்திய போவதற்குள் மண்ணிலிருந்து மறையும்போதும், கொஞ்சம் நிறைய நாள் லீவ் இருந்திருந்தால் இவர்களையும் பார்த்திருக்கலாமோ என்று தோன்றும்போதும்... 

லீவ் அதிகம் இல்லாதது பெரிய குறை தான் 

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

பனிமலர் said...

அது தான் இப்போ கட்டாய விடுப்பு என்று வைத்து இருக்கிற விடுப்புகளை எல்லாம் ஒரு காலாண்டு 5 நாட்கள் என்று எடுக்க சொல்லி படுத்துகிறார்களே, உங்களுக்கு எல்லாம் இல்லை போலும். புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் எல்லாம் இனி இந்தியா செல்வது எல்லாம் இனி பணமில்லா விடுப்பில்மட்டுமே. கொடுனை கொடுமை என்று கோயிலுக்கு போனா......

bandhu said...

வருகைக்கு நன்றி பனிமலர் . கட்டாய விடுப்பு பற்றியும் கொஞ்சம் எழுதலாம் என்று இருக்கிறேன்.

ஜெய்லானி said...

//அதுவும் ஒவ்வொரு முறை இந்திய போகும்போதும் பார்த்த நண்பர்கள் / சொந்தங்களை விட பார்க்காமல் விட்டவர்கள் மிக அதிகமாக இருக்கும்போதும், பார்க்க முடியாமல் விட்ட சொந்தங்கள் அடுத்தமுறை இந்திய போவதற்குள் மண்ணிலிருந்து மறையும்போதும், கொஞ்சம் நிறைய நாள் லீவ் இருந்திருந்தால் இவர்களையும் பார்த்திருக்கலாமோ என்று தோன்றும் //


உண்மையான வார்த்தை :-(

bandhu said...

வருகைக்கு நன்றி, ஜெய்லானி

VAI. GOPALAKRISHNAN said...

பண்டிகைக்கான லீவு நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும்போது அதை ஈடு கட்ட ஆப்ஷனல் ஹாலிடே என்று ஓரிரு நாட்கள் தருவார்கள். இவை ஞாயிறு போன்ற லீவு நாட்கள் அடிபடாமல் நம்மை ஓரளவுக்குக் காப்பாற்றும். அதிலும் ஒரு கண்டிஷன் போடுவார்கள்: அதாவது இத்தகைய ஆப்ஷனல் ஹாலிடே லீவை, மற்ற நம் லீவுகளின் ஆரம்பத்திலோ அல்லது கடைசியிலோ தான் அப்ளை செய்ய முடியும். நடுவில் போட அனுமதிக்க மாட்டார்கள்.

You may like to visit gopu1949.blogspot.com

bandhu said...

வருகைக்கு நன்றி, Gopalakrishnan Sir!

goma said...

வெளிநாடுகளிலிருந்து சொந்தங்கள் வரும்பொழுதெல்லாம் அப்போதைய சீனியர் சிடிசன்களை இவர்கள் தவறாமல் சந்தித்துச் செல்லவேண்டும் என்று வேண்டுகோளைச் சொல்ல நினைப்பேன்...

goma said...

ஒரு கனி கையில் கிடைக்க எத்தனையோ இழப்புகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்....

நீங்கள் உங்கள் குறைகளை என்னதான் மனம் கலங்கி வெளியிட்டாலும்

உனக்கென்னப்பா...???!!!என்பதுதான் இங்கு உழல்பவர்களின் ஏக்கப் பெருமூச்சாக இருக்கும்

bandhu said...

முற்றிலும் சரி, கோமா. பார்க்கலாம். விட்டு விட்டு அங்கேயே வந்துவிட நினைக்கிறேன்..

சதீஷ் செல்லதுரை said...

வாங்க சார்.நம்ம நாட்டுல ஆபீஸ் போனாலே லீவு மாதிரின்னு பேசிக்கிறாங்க.