Saturday, December 18, 2010

அரசியல் வாதி - சரத் பவார் !


சரத் பவார் கார்பொரேட் முதலாளிகளுக்கு சொல்லும் சேதி என்ன தெரியுமா?
நீரா ராதியா டேப் வெளியானதால் கவலைப்படும் கார்பொரேட் முதலாளிகளுக்கு சொல்வது என்ன என்றால், அவர்களுக்கு ஆதரவாக கண்டிப்பாக மன்மோகன் சிங் பேசுவார் என்பது தான். 

அதாவது, பயப்படாதீர்கள், உங்கள் பேச்சு இனிமேல் டேப் செய்ய படாது. உங்களுக்கு ஆதரவாக இருக்கத்தானே நாங்கள் இருக்கிறோம் என்பதும் கூட!

இவர்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா? இந்த சரத் பவார் இவ்வளவு பெரிய ஊழல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதனால் முதலாளிகளுக்கு வரும் நெருக்கடி பற்றி கவலை படுகிறார். இந்த முதலாளிகள் சேர்ந்து அமைச்சர்களை நிர்ணயிக்கும் அசிங்கத்தை பற்றி பேச துப்பு இல்லை! 

அதே போல், இந்த ஊழல் பற்றி தார்மீக பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டிய பிரதம மந்திரி முதலாளிகளுக்கு ஆதரவாக பேசுவாராம்.  

இவர்களை நினைத்தாலே அருவருப்பாக உள்ளது!

தொடர்புடைய செய்தி : 
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

ஜோதிஜி said...

எல்லா பதிவுகளிலும் கொஞ்சம் முன்னும் பின்னும் சேர்த்து உங்கள் எண்ணங்களையும் சேர்த்து எழுதி இருக்கலாமே?

bandhu said...

சொல்ல நினைப்பதை சரியாக சொல்ல தெரியவில்லை. செய்திகளின் ஊடாகவே வந்துவிடுகிறது என் கருத்துக்களும். கற்றுக்கொள்கிறேன்.தங்களை போன்ற சீனியர் வருகை, எனக்கு ஊக்கம் அளிக்கிறது, ஜோதிஜி!