Friday, December 26, 2014

பிசாசு!

மிஷ்கின் கிரைம் த்ரில்லெர் படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ரசிகரை புத்திசாலியாக கருதி படத்தின் ஓட்டத்தில் சேர்த்துக் கொள்ளும் அவர் உத்தி எனக்கு மிகப் பிடிக்கும். முடிச்சை போட்டுக்கொண்டே போய் வழியில் சில அதை அவிழ்க்கும் தடயங்களை விட்டு கடைசியில் அதை அவிழ்க்கும்போது நமக்கு வரும் திருப்தி.. என்ன சொல்ல. அது ஒரு அனுபவம்.. விளக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்தப் படத்திலும் அந்த அனுபவம் கிடைத்தது. ஆட்டோ சிக்னலில் நிற்காமல் முன்னே இருக்கும் டூ வீலரில் முட்டி நிற்பது ஒரு சாதாரண நிகழ்வு. அதையும் கடைசியில் ஒரு ஆதாரமாக கொண்டு வருவதில் மிஷ்கினின் அறிவு மிளிர்கிறது!

மிஷ்கினின் மிகப்பெரிய பலம்.. பொதுவான உருவகத்தை உடைப்பது. பாண்டியராஜனையும் பிரசன்னாவையும் வேறு யார் வில்லனாக பார்த்திருப்பார்கள்? அசட்டுத்தன நகைச்சுவை நடிப்பை வழங்கிய YG மகேந்திராவிடம் மிரட்டும் நடிப்பை யார் எதிர்பார்த்திருப்பார்கள்? ஆவி என்றாலாவது கொஞ்சம் நல்ல ஆவி உண்டு என்று நினைப்பதற்கு வழி உண்டு.. பிசாசு என்றால் தோன்றுவதே பயம் தான். அதை நல்லதாகவும் இருக்கக் கூடும் என்று புது சிந்தனைக்கு வழி அமைத்திருக்கிறார் மிஷ்கின்.

புத்திசாலித்தனமான படம் பிசாசு. எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் அழகாக எடுத்திருக்கிறார், மிஷ்கின். அதே போல 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருக்கும் ராதா ரவி அவர்களுக்கு பெருமைப் படும் நடிப்பு வாய்ப்பை அளித்திருக்கிறார் மிஷ்கின்.

பிசாசு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

Welcome Back , மிக்ஷ்கின்!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான படம்தான் நண்பரே
பார்த்தேன் மகிழ்ந்தேன்
நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
This comment has been removed by the author.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பலரின் பாராட்டையும் பெறிருக்கிறது பார்க்க வேண்டிய படம்தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

பார்த்து விட்டேன்... நன்று...

bandhu said...

வருகைக்கு நன்றி, ஜெயகுமார் சார்

bandhu said...

வருகைக்கு நன்றி, முரளிதரன் சார்

bandhu said...

வருகைக்கு நன்றி, தனபாலன் சார்

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான படம். மிஷ்கினின் படத்தை ரசித்துப் பார்ப்பவர்கள். பார்த்தோம்....

Thulasidharan V Thillaiakathu said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!