Tuesday, February 10, 2015

மன்மோஹனின் நெருங்கிய நண்பர்!டிபெரியஸ் (Tiberius) 14 AD முதல் 37 AD வரை ஆட்சியில் இருந்த ரோமாபுரி மன்னன். வரலாற்றில் அவர் ஒரு கொடுங்கோல் மன்னனாக பதிவு செய்யப் பட்டிருக்கிறார் (மாற்று தகவல்களும் உண்டு) அவரை சதி மூலம் கொன்று பதவிக்கு வந்தவர் அவர் கொள்ளு மருமகன்  (grand nephiew) கலிகுலா (Caligula) டிபெரியஸ் இறக்கும்போது கலிகுலாவிடம் சொன்னது..எப்படியாவது மக்களை டிபெரியஸ் நல்லவன் என்று சொல்ல வேண்டும். அது ஒன்றே நான் கேட்கும் உதவி என்றானாம். அடுத்து வந்த கலிகுலாவின் மிருகத்தனமான கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் எல்லோரும் 'இவனை விட டிபெரியஸ்  எவ்வளவோ நல்லவன்' என்று சொன்னார்களாம்!

வரலாறு மறுபடி திரும்புகிறது

மௌனசாமியாக இருந்து குடி கெடுத்த மன்மோகனிடம் இருந்து பிடுங்கி மோடியிடம் அரசை கொடுத்தால், அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்தது போல் இருக்கிறது!

நூறு நாட்களில் கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவேன்.. (அதுவும் ஆளுக்கு ஒரு லட்சம்!)
இன்சூரன்ஸ் தனியார் மயமாகாது
ஆதார் அட்டை தேவையில்லை..
அணு ஒப்பந்தம் எல்லோருக்கும் ஏற்றது போல நிறைவேற்றப் படும்..
...
...
எல்லாமே மறந்து விட்டது போல இருக்கிறது. வேலையற்ற வேலையாக இந்துக்கள் பத்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.. கோட்சேக்கு சிலை..பட்டேலுக்கு  உலகத்திலேயே பெரிய சிலை... அதானிக்கு வெளிநாட்டில் தொழில் தொடங்க 1 பில்லியன் டாலர் கடன் (ஸ்டேட் பேங்க் மூலம்).. அணு ஒப்பந்தத்திற்கு கிட்ட தட்ட மண்டியிட்டு ஒப்புக் கொண்டு கையெழுத்து..'எளிமையாய்' 11 லட்சத்தில் சூட்..

நல்ல வேளை .. .டில்லியில் தோத்தது பிஜேபி.. இதை ஒரு wakeup call என உணர்ந்து வெறும் விளம்பரத்தை விட்டு உண்மையில் ஏதாவது பண்ணினால் தேவலாம்!

இப்போது சொல்லுங்கள்..

மன்மோகனே நல்லவர் போல இருக்கிறதே என்று எண்ண வைத்த மோடி தானே மன்மோகனின் நெருங்கிய நண்பர்?மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதிவு.

பல சமயங்களில் முடிவு எடுத்த பிறகு தான் அம்முடிவு எவ்வளவு மோசமானது என்று புரிகிறது....

yathavan nambi said...

அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு

Thulasidharan V Thillaiakathu said...

செம பதிவுப்பா....! //வேலையற்ற வேலையாக இந்துக்கள் பத்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.. // அடப்பாவிங்களா..ஏற்கனவே இந்தியா மக்கள் தொகையினால முழி பிதுங்குது....என்னப்பா இது இவரெல்லாம் நம்ம பிரதம மந்திரி....நல்லா விளங்குமப்பா நாடு....

நன்றி நண்பரே ஒரு பதிவு பாதில இருக்குது மக்கள் தொகை பற்றி அதற்கு இந்த வாசகம் உதவும்....மிக்க நன்றி!