Tuesday, June 10, 2014

காசிருந்தால் இங்கிருக்கவும்..



திண்ணை. நம் கண் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் வஸ்து. அயலூரார் ஒரு பொழுது தங்கிப் போவதற்கும், கவனிப்பாரற்ற தத்தா மூலையில் முடங்கிக் கொள்வதற்கும், பகலெல்லாம் வெய்யிலில் இளைப்பாற யாருக்கும் இடம் அளிக்கவும் காலம் காலமாக நம் ஊரில் இருந்து வந்தது.. இப்போதைய இரண்டு பெட்ரூம்.. இரண்டு பாத்ரூம்.. ஒரு ஹால். ஒரு கிச்சன்.. 600 சதுர அடி.. தேவையில் திண்ணை தேவையில்லாமல் போய் விட்டது..



எல்லாவற்றிற்கும் அடி நாதம்... என்னிடம் இருக்கும் பணம் என் சௌகர்யத்திற்கு.. மற்றவரிடம் பணம் இல்லை என்றால் அது அவர்கள் தவறு (இப்படி ஒரு வாதத்தை அமெரிக்காவில் முதன்முறை கேட்டு அசந்து விட்டேன்!) ஏனென்றால் அவர்கள் உழைக்க மறுக்கின்றார்கள்! அவர்கள் சௌகர்யத்தை ப் பற்றி நான் ஏன் கவலைப் படவேண்டும் என்ற எண்ணங்களே..

இது எந்த நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் என்பதை கற்பனை பண்ணிப் பார்க்க வேண்டாம்.. கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்தாலே போதும்..

இங்கிருக்கும் படங்களைப் பாருங்கள். தரையை வெறுமனே வைத்திருந்தால் வீடில்லாத மக்கள் வந்து தூங்கி மற்ற எல்லோருக்கும் 'தொல்லை' தருகிறார்களே என்று லண்டனில் சில இடங்களில் தரையில் ஈட்டி போல கூர்மையான உலோக வடிவங்களை பதித்திருக்கிறார்கள்!




இவர்களே பரவாயில்லை என்று நினைக்க வைத்து விட்டார்கள் கனடாவில் உள்ள ஒரு ஊரின் அதிகாரிகள். வீடில்லாதவர்கள் கூடாரம் அடித்துத் தங்கும் நிலத்தில் கோழிக் கழிவுகளை கொட்டி அவர்களை விரட்ட முயற்ச்சித் திருக்கிறார்கள்.



எதை இழந்து எதை பெறுகிறோம் என்றே தெரியவில்லை!

இதைப் பற்றிய செய்தி..

https://ca.news.yahoo.com/blogs/dailybrew/london-criticized-anti-homeless-spikes-canada-better-174042472.html
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

சீனு said...

அடப்பாவமே இவ்வளவு கீழ்த்தரமாகவா இருக்கிறார்கள்.. இவற்றை எல்லாம் பார்க்கும் போதுதான் நாட்டை விட நாம் எவ்வளவு மேலானவர்கள் என தெரிகிறது

Yaathoramani.blogspot.com said...

நாமும் அப்படி ஆகிவிடுவோம்
எனத்தான் படுகிறது
அதன் முதல்படிதான் திண்ணை ஒழிப்பு
என நினைக்கிறேன்

bandhu said...

உண்மை தான் சீனு.. இக்கரைக்கு அக்கரை பச்சை!

bandhu said...

ரமணி சார்.. 1970களில் அமெரிக்கா சந்தித்த பிரச்சனைகளைத் தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். நீங்கள் சொல்வது சரி. நம் ஊரில் இதே நிலை வர அதிக நாள் இல்லை என நினைக்கிறேன்.

Packirisamy N said...

ஒரு தலைமுறையைவிட அடுத்த தலைமுறை நன்றாக வாழ்ந்தால், நாம் முன்னேறுவதாகக் கூறலாம். ஆனால் இப்பொழுது அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. அனைத்தும் இருக்கிறது. ஆனால், அனுபவிக்க நேரமுமில்லை. பகிரவும் மனமில்லை. இந்த ரேஸில் இருந்து ஒதுங்கிவிடவும் முடியாது. பதிவு உண்மையான நிலவரம்.

துளசி கோபால் said...

அட ராமா:(

அப்போ இங்கிருக்கும் ஸூப் கிச்சன்கள்?

நியூஸி பரவாயில்லை போல இருக்கே!

Pebble said...

Even in some cities in Southern California. The city council removed the long benches in park and the road side and replaced it with split handle benches. To avoid the homeless people to sleep on it during night time.

bandhu said...

பக்கிரிசாமி சார்.. வருகைக்கு நன்றி.. உங்கள் கருத்து தான் என் கருத்தும்.. இருக்கறத விட்டு பறக்கறத பிடிக்கப் போகிறோம்!

bandhu said...

துளசி டீச்சர்.. நியூசியை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது!

bandhu said...

Pebble, It is a news to me. Think they are careful not to get any press coverage on these!

கார்த்திக் சரவணன் said...

ஹா ஹா நம்ம ஊர்ல சுவரொட்டி ஒட்டக்கூடாதுன்னு சுவர்ல கல் பதிச்சு வச்சிருப்பாங்களே, அதே மாதிரி...

ஜீவன் சுப்பு said...

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை . MISS USE பண்ணுபவர்கள் அதிகரித்து விட்டார்கள் . முப்பது நாற்பது வருடங்களாக எங்கள் ஊர் அம்மன் கோவிலில் முகப்பு திண்ணையை OPEN ஆகவே வைத்திருந்தார்கள் . பேருந்திற்கு நிற்பவர்கள் , வெயிலுக்கு பயந்தவர்கள் என இளைப்பாறியவர்கள் அதிகம் . இந்தவருடம் GATE போட்டுவிட்டார்கள் . இரவு நேரத்தில் கோவில் திண்ணையில் அமர்ந்து புகைப்பது , பாக்கு போட்டு துப்புவது அங்கேயே சிறுநீர் கழிப்பது என்று அட்டகாசம் செய்கிறார்கள் என்று சொல்லி மூடிவிட்டார்கள் என்னபண்ண.?

கரந்தை ஜெயக்குமார் said...

கொஞ்சம் இடம் கொடுத்தாலும், அதை சீரழிப்பவர்கள், இருப்பதால் வரும் முடிவு இது

வெங்கட் நாகராஜ் said...

என்ன மனிதர்களோ...... :(

விசு said...

என் தளத்தில் நீங்கள் வந்து பின்னூட்டம் இட்டதை பார்த்து, தங்கள் எழுத்துக்களை காண இங்கே வந்தேன். நல்ல பதிவுகள். தொடர்ந்து எழுதிங்கள். வாழ்த்துக்கள்.