Saturday, March 5, 2011

கூட்டணி முறிவு, காங்கிரஸ்ஸிற்கு முடிவு?காங்கிரஸ் - தி மு க இடையே கூட்டணி முறிந்துள்ளது. அவசர அவசரமாக இணையலாம். அப்படி இல்லாமல் போனால் காங்கிரஸ்ஸிற்கு இதனால் என்ன பாதிப்பு என்று கொஞ்சம் அலசலாம். 

எல்லோருக்கு தெரிந்த ஒரு விஷயம், தனியாக நின்றால் மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரஸ் வெல்ல முடியும். சொல்லப்போனால் ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போகலாம். இது காங்கிரஸ்ஸிர்க்கும் தெரிந்ததே. அதற்க்கு பின்னாலும் இப்படி அவர்கள் முறுக்கிக்கொண்டு போவதற்கு என்ன காரணம்?

ஒன்று, காங்கிரஸ்ஸின் மிகப்பெரிய பிரச்சனை கோஷ்டி சண்டைகள். இதற்க்கு காரணம், தொண்டர்களை விட தலைவர்கள் நிறைய! ஒரு சின்ன பட்டியல்,
தங்கபாலு
வாசன்
சிதம்பரம்
இளங்கோவன்
ஜெயந்தி நடராஜன்
....
இவர்களுக்கு அடுத்த லெவலில்
யசோதா
ஞானசேகரன் 
வசந்த் & கோ - வசந்த் 
...
இன்னும் சட்டென்று பட்டியலிட முடியாத மேலும் 20-30 பெயர்கள். இந்த தலைவர்களின் உண்மையான செல்வாக்கு என்ன என்று தேர்தலில் தனியாக நின்றால் கச்சிதமாக கணிக்க முடியும்,.  தேர்தலில் தோற்ற பிறகு, செல்வக்கில்லாதவர்களை எளிதில் களையெடுக்க முடியும். 

எல்லோரும் சொல்வது போல் பீகாரில் காங்கிரஸ் ஸி ற்கு பிரம்மாண்ட தோல்வி என்று சொல்ல முடியாது. என்ன முன்னர் 4 M L A இருந்தார்கள். இப்போது 2 தான். ஆனால், அங்கு இருக்கு வேற்று வெட்டு தலைவர்களை அடையாளம் காண தேர்தல் வழி வகுத்து விட்டது. அதை தான் இந்த தேர்தல் இங்கு செய்யும். 

இரண்டு, கருணாநிதிக்கு பிறகு தி மு க பல பிரிவாக பிரிந்து விடும் என்று தோன்றுகிறது. ஏற்கனவே ஜெயலலிதாவிற்கு நல்ல பெயர் ஒன்றும் இல்லை. அதனால், கருணாநிதிக்கு பிறகு வரும் வெற்றிடத்தை நல்ல முறையில் காங்கிரஸ் உபயோகப்படுத்த பார்க்கிறது. இந்த தேர்தலில் தனியாக நின்றால், காங்கிரஸ் திராவிட கட்சிகளுக்கு நல்ல ஒரு மாற்றாக காட்சி அளிக்கும். இன்றைய  தேதியில் அப்படி யாரும் இல்லை என்பதே உண்மை!

மூன்றாவது, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தி மு க மட்டுமே காரணம் என்று எளிதில் கை கழுவி விடலாம். ஓர் அளவிற்கு மேல் தி மு க வும் எதுவும் செய்ய முடியாது. சோனியா இந்த ஊழலில் பங்கு பெற்றிருந்தால் கருணாநிதியும் பங்கு பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினால் இருவருமே மாட்டிக்கொள்வார்கள். அதனால், மேலும் மேலும் குட்டையை குழப்புவார்களே ஒழிய வெளிப்படையாக ஒன்றும் நடக்காது!

எல்லாவற்றையும் பார்த்தால், நீண்ட நாள் திட்டப்படி தனியாக நிற்பது காங்கிரஸ்ஸிற்கு நன்மையே!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

ராஜ நடராஜன் said...

Balanced analysis

ramalingam said...

ஆமாம். எனது கணிப்பின்படியும் காங்கிரஸ் அடுத்த தேர்தலுக்கு தன்னை தயார்படுத்துகிறது என்றே தோன்றுகிறது.

bandhu said...

நன்றி ராஜ நடராஜன்.

bandhu said...

வருகைக்கு நன்றி, ராமலிங்கம். இதுவரை சமாதானத்திற்கு வராததால் அப்படித்தான் தோன்றுகிறது.

சிவா said...

காங்கிரசின் கோஷ்டி தலைவர்களின் செல்வாக்கை இந்த தேர்தலில் கணிக்க முடியாது. இது மாநில தேர்தல் என்பதால் இப்போது காங்கிரஸ் வாங்கும் ஓட்டை வைத்து அதன் பலத்தை கணிப்பது சிரமம். திமுகவை தோற்கடிக்க பல காங்கிரஸ் அனுதாபிகள் கூட அதிமுகவையே ஆதரிப்பார்கள்

Suresh Kumar said...

கூட்டணி முறிவு, காங்கிரஸ்ஸிற்கு முடிவு? ///////////

திமுகவிற்கு முடிவாக போய்விட்டதே

bandhu said...

வருகைக்கு நன்றி சிவா!

bandhu said...

நீங்கள் சொல்வது சரி சுரேஷ். என்ன பண்ணுவது? தி மு க வின் குடுமி இப்போது காங்கிரஸ் கையிலே!