இரண்டும் பதிவாளர் அலுவலகத்தில்.
முதலாவது சென்னை அருகில் உள்ள புகழ் பெற்ற திருத்தலம் ஒன்றில். கோவிலில் நடை பெற்ற திருமணத்தை பதிவு செய்ய வேண்டியிருந்தது. மணமகன் வெளி நாட்டில் வசிப்பதால் குறைந்த கால அவகாசமே இருந்தது.
பதிவு சான்றிதழ் வாங்க யாரும் பொறுப்பான பதில் தர வில்லை. பக்கத்தில் இருந்த டீ கடைக்காரர் அறிவுரைப்படி தரகரை அணுகினோம் (தவறு தான். வேலை ஆகவேண்டுமே) . எல்லா சான்றிதழ்களும் இருந்தும் Rs. 3000 கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் மூன்றாம் நாள் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதில் எங்களின் ஒரே special need சான்றிதழ் உடனே கிடைக்க வேண்டும் என்பது தான். அதற்க்கு Rs. 3000 அதிகம் தான்!இரண்டாவது power of attorney கொடுக்க வேண்டியிருந்தது. இது சென்னையில் ஒரு பதிவாளர் அலுவலகத்தில். மாடியில் அலுவலகம். கீழே இருக்கும் அனைத்து கடைகளும் தரகர் வேலை பார்ப்பவர்கள். முகம் பார்த்து Rs 1100 என்றார்கள். இதில் எந்த விதத்திலும் குறைப்பதே இல்லை. அங்கே ஒரு பெண் அலுவலர் டெஸ்க் டிராயரில் பணத்தை திணிப்பது பார்த்து அசந்து போனேன்! யார் சொன்னது பெண் முன்னேற்றம் இல்லை என்று?
ஒரு சாதாரண சான்றிதழ் வாங்கக்கூட லஞ்சம் கொடுத்தே ஆகா வேண்டுமா?
இதற்க்கெல்லாம் லஞ்சமில்லாமல் சான்றிதழ்கள் பெற வழியே இல்லையா?
8 comments:
Welcome to India Boss... :)
சுஜாதா சொல்வார்ல? இங்க தான் வேலைய செய்றதுக்கே லஞ்சம்..
வருகைக்கு நன்றி மகேஷ். உண்மை தான். வாத்யார் என்னைக்கு தப்பா சொல்லியிருக்கார்?
லஞ்சம் இல்லாம வாங்கனும்னா உங்களுக்கு வயசாயிரும் பரவா இல்லையா! சொல்ல வெக்கமா இருந்தாலும் இதுதான் உண்மை...
உண்மை தான் சிவராம். லஞ்சம் கொடுக்காம வாங்கணும்னா கல்யாணத்துக்கு வாங்க வேண்டிய marriage certificate 60- ம் கல்யாணத்திற்கு தான் வாங்கியிருக்க முடியும்!
15 வருடத்திற்கு முன்பே இங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பெண்மணி ‘என்ன.. இவ்வளவுதான் கொடுத்தானா’ என்று முகஞ்சுழித்து கிடைத்த லஞ்சத்தை அலட்சியமாய் வாங்கியதைப் பார்த்து அசந்து போனேன். நாம் சமத்துவம் பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
நன்றி ரிஷபன் உங்கள் கருத்துக்களுக்கு. நான் உங்கள் வலை பதிவு ரசிகன்.
உங்களோடு ஏற்பட்ட தொடர்பு மகிழ்ச்சியளிக்கிறது.
உங்களுக்கேற்பட்ட இரண்டு நிகழ்வுகளில் இருந்து லஞ்சத்தின் பூர்வகம் எங்கிருந்து துவங்குகிறது என்பதை அறிய முடிகிறது.
பாண்டியன்ஜி verhal.blogspot.com
போறபோக்கைப் பார்த்தால் இந்தியாவில் இயற்கை கூட மால் வெட்டச்சொல்லும்
Post a Comment