Sunday, November 7, 2021

Doctor - டாக்டர் படம்



டாக்டர் படம் netflix -இல் வெளிவந்திருக்கிறது. பொதுவாக நல்ல விமர்சனங்கள் இருப்பதாலும் பெரிய அளவு ஹிட் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்தேன்.


பெரிய ஏமாற்றம்!


குழந்தை கடத்தல் என்பது வெகு சீரியஸான விஷயம். அதை டார்க் காமெடி என்ற பெயரில் கொடுமை படுத்தி இருந்தார்கள். படத்தின் இசை சுத்தமாக ஒட்டவில்லை.


படத்தில் இம்மி அளவும் லாஜிக் இல்லை. 


**spoiler alert**


கோவாவில் பெரிய வில்லன். அரசில் எல்லோரையும் தெரியும் என்கிறார். சிவ கார்த்திகேயன் ஒரு ஐஸ் க்ரீம் கடை நடத்துபவர்  என்பதையும் குழந்தை கடத்தலையும் செய்பவர் என்பதை எளிதாய் நம்பும் ஏமாளியாக இருக்கிறார்!


படத்தின் க்ளைமாக்ஸ் 1970 வந்த மோசமான படங்களை நினைவு படுத்தியது 



எல்லா படத்திலும் நிறைய பேசி நடிப்பதால் இதில் சிவகார்த்திகேயன் அண்டர் பிளே பண்ண முயற்சிக்கிறார். அதனால் லைஃபே இல்லாமல் ஒரு நடிப்பு 



எல்லா விதத்திலும் இந்த படம் ஒரு குப்பை! 


இந்த படம் எப்படி ஓடியது என்பது பெரிய ஆச்சர்யம்!


பணம் போட்டு லாபம் பார்த்த சிவகார்த்திகேயன் பெரிய அதிர்ஷ்டசாலி!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம். வீட்டில் உள்ள இளைஞர்கள் சொன்னார்கள் சூப்பர் என்று. அதுவும் திரில்லர் என்றார்கள். எனக்கும் த்ரில்லர் ரொம்பப் பிடிக்கும் என்பதால் அன்று விஜய் டிவியில் போட்டப்ப சரி பார்க்கலாமே என்று பார்க்கத் தொடங்கியதுமே....பெரிய எதிர்பார்ப்போடு. ஆரம்பமே கதை சுத்தமாக நன்றாக இல்லை. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப போர். ஸோ நான் பார்க்கவில்லை. ஒரு வேளை என் ரசனைக்கு ஒத்துவரவில்லையோ என்று நினைத்தேன்.

கீதா

bandhu said...

கீதா.. அதே தான் எனக்கும்.

பெரும்பாலான நகைச்சுவை, வெறும் 'நகைச்சு வை' என்ற அளவில்தான் இருந்தது!