Saturday, February 25, 2017

ஆரம்பமே சொதப்பல்!


ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சி தொடங்கியிருக்கிறார்.

அரசியல் என்பது எவ்வளவு பெரிய பிசினெஸ்! எவ்வளவு பணத்தை கொட்டி ஒரு கட்சியை நடத்த வேண்டியிருக்கிறது! வெறும் டீ குடித்துவிட்டு நாளெல்லாம் வேலை செய்யும் தொண்டர்கள் எந்த கட்சியிலாவது இருக்கிறார்களா? (கம்யூனிஸ்ட் தவிர). வேளைக்கு குவார்ட்டர். சாப்பாட்டுக்கு பிரியாணி. கையில் கொஞ்சம் காசு என்றுதான் தொண்டர்களை திரட்ட வேண்டியிருக்கிறது.

போட்ட பணத்தை எடுக்க எவ்வளவு பொறுப்பாக அந்த பிசினெஸ்ஸை நடத்தவேண்டும்! இங்கே என்னடாவென்றால் கட்சி பெயரிலேயே சொதப்பல்.

கட்சிப் பெயர் : எம்ஜியார் அம்மா தீபா பேரவை

ஆங்கிலத்தில் : MGR Amma Deepa பேரவை. அதாவது MAD பேரவை.

பைத்தியக்கார பேரவை? பைத்தியக்காரர்களின் பேரவை?

கொஞ்சம் யோசித்து வைத்திருக்கக் கூடாதா? இரண்டு மாதம் யோசித்து வைத்த பேர் இதுதானா?

சுத்தம்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை

வேகநரி said...

:) மக்களுக்காகவே வாழ தீபா அம்மா முடிவு செய்தது எனக்கு பிடிச்சிருக்கு.

bandhu said...

வருகைக்கு நன்றி, ஜெயக்குமார் சார்!

bandhu said...

//:) மக்களுக்காகவே வாழ தீபா அம்மா முடிவு செய்தது எனக்கு பிடிச்சிருக்கு.//பின்னே. மக்களுக்காகவே எங்க அத்தை. மத்ததுக்கு நான்!

Avargal Unmaigal said...

தமிழகத்தில் பைத்தியகாரர்களும் கட்சி ஆரம்பிக்கலாம் என்பது இவர்களை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்