Saturday, March 15, 2014

பெரிய பிரச்சனை.. எளிய தீர்வு..


பார்க்கிங் பல இடங்களில் பெரிய பிரச்சனை.. இந்த பார்க்கிங் லாட்களை பாருங்கள்..




இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது அரை மணி நேரத்துக்கும் அதிகமாக காலியான பார்கிங் இடத்தை தேடுவதற்கே ஆகி விடும்! சில சமயங்களில் அதை விட அதிகமாவதும் உண்டு. ஒரு முறை, சுற்றி சுற்றி வெறுத்துப் போய் திரும்பி வந்ததும் உண்டு..

டி நகரில் கார் நிறுத்த இடம் கிடைக்காமல் ட்ரைவரை சுற்றிக்கொண்டே இருக்கச் சொல்லிவிட்டு நிதானமாக ஷாப் செய்துவிட்டு திரும்ப வருபவர்களை பார்த்திருக்கிறேன்!

பல நாடுகளிலும் இந்த காலி இடம் தேடுவதை பல விதமாக சால்வ் செய்கிறார்கள்..

அமெரிக்காவில் மால்களில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் முறை.. பார்கிங் சென்சர். ஒவ்வொரு பார்க்கிங் இடத்திற்கும் மேலே ஒரு விளக்கு இருக்கும். பார்கிங் இடத்தில் கார் இருந்தால் சிவப்பு வண்ணத்திலும் காலியாக இருந்தால் நீல வண்ணத்திலும் அந்த விளக்கு எரியும்.

பார்கிங் ப்ளோர் போகுமுன் அந்த ப்ளோரில் எவ்வளவு காலி இடங்கள் இருக்கிறது என்று எண்ணிக்கை இருக்கும். அதிக நேர விரயம் இல்லாமல் பார்க்கிங் செய்துவிட்டு வந்துவிடலாம்..


இப்போது  ஸ்மார்ட் போனுடன் இணைத்தும் சில கம்பெனிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்கிறார்கள். இந்த முறையில் இன்னொரு பெரிய அட்வான்டேஜ்.. காரை எங்கே வைத்தோம் என எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்பது தான்.. ஒரே பார்கிங் லாட்டில் ஆயிரம் கார் இருக்கும்போது கண்டுபிடிப்பதும் ஒரு தலை வலியே!

எனக்கு மிகவும் பிடித்த தீர்வை தந்திருப்பது ஒரு கொரியன் கம்பெனி.. மிக எளிய தீர்வு.. எவ்வளவு அழகாக இந்த பிரச்சனையை தீர்த்திருக்கிறார்கள் என்று வியக்காமல் இருக்க முடியாது..

நீங்களே பாருங்களேன்!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

பால கணேஷ் said...

அட...இந்த ஹீலியம் பலூன் மெத்தட் நல்லாவே இருக்குதே... ஜுப்பரு!

திண்டுக்கல் தனபாலன் said...

சென்னைக்கு உட்பட பல இடங்களில் தேவை தான்...

கே. பி. ஜனா... said...

Good Idea!

bandhu said...

வருகைக்கு நன்றி பால கணேஷ் சார்..

bandhu said...

தனபாலன்.. கண்டிப்பாக தேவைதான்!

bandhu said...

வருகைக்கு நன்றி, ஜனா..

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான யோசனை நண்பரே

வெங்கட் நாகராஜ் said...

அருமையான யோசனை. முன்னரே இக்காணொளியை முகப்புத்தகத்தில் நண்பர் ஒருவர் இணைத்திருந்தார்.

இந்தியாவில் இப்படி செய்ய ஒரு எண்ணை நிறுவனமும் முன்வருவதில்லை!

கண்ட இடத்தில் பார்க் செய்வது தானே இங்கே வழக்கம். தில்லியில் சில பல மாடி பார்க்கிங் தளங்கள் இருக்கின்றன...... ஆனாலும் வண்டிகள் நிறுத்துவதில் பிரச்சனைகள் அதிகம் தான்!

இராஜராஜேஸ்வரி said...

அருமையான தீர்வு..பயனுள்ள பகிர்வுகள்..

bandhu said...

வருகைக்கு நன்றி, ஜெயகுமார் சார்..

bandhu said...

வருகைக்கு நன்றி, வெங்கட். உண்மைதான்.. கண்ட இடத்தில் பார்க் செய்பவர்களுக்கு இதெல்லாம் பிரச்சினையே இல்லைதான்!

bandhu said...

வருகைக்கு நன்றி, ராஜராஜேஷ்வரி

Thulasidharan V Thillaiakathu said...

பலூன் யோசனை நன்றாக இருக்கிறதே! சூப்பர்! அமெரிக்க முறையும் நன்றாகத்தான் உள்ளது! மிக அழகான, உப்யோகமுள்ள பகிர்வு! இந்தியாவில் செயல்படுத்தப்படுமா? அவர்கள் க்ண்ணில் இது படுமா? பார்த்தாவது நாங்கள் ஆருடல் கொள்கின்றோம்!!!!

துளசிதரன், கீதா

ஜோதிஜி said...

பதிவுகளை மின் அஞ்சல் வழியே பெறும் வசதியை உருவாக்கவும்.

ஜோதிஜி said...

மன்னிக்கவும். இன்று தான் கவனித்தேன். நன்றி.

bandhu said...

வருகைக்கு நன்றி துளசிதரன் சார்..

bandhu said...

வருகைக்கு நன்றி ஜோதிஜி.. அந்த வசதி செய்துவிட்டேன் என நினைக்கிறேன்.. இல்லையேல் தெரிவிக்கவும்..

அருணா செல்வம் said...

அட... நல்ல ஐடியாவா இருக்கே...