Wednesday, December 12, 2012

மேதைக்கு அஞ்சலி!



சிதார் மேதை ரவி ஷங்கர் அவர்களின் மறைவு மிகவும் வருத்தியது. அவர் தன் வாழ்நாளை இசைக்காகவே அற்பணித்திருப்பது அவர் வாழ்க்கை குறிப்பை படித்ததில் தெரிந்தது.  சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும் எப்போது படித்தாலும் பிரமிப்பை தருகிறது 
  • உலகப்புகழ் பெற்ற உதய் ஷங்கர் இவர் அண்ணா 
  • இவர் பள்ளியில் படித்தது மொத்தம் நான்கு வருடங்களே 
  • உலகப்புகழ் பெற்ற சரோத் மேதை அலி அக்பர் கான் இவர் மனைவியின் சகோதரர் 
  • சாரே ஜகான்சே அச்சா பாடல் இவர் அமைத்த மேட்டிலே தான் இன்னும் பாடப்படுகிறது 
  • காந்தி படத்திற்கு இசை அமைப்பாளர் இவரே. அதற்க்கு ஆஸ்கர் நாமினேஷன் பெற்றார் 
  • இசைக்கு வழங்கப்படும் கிராமி அவார்டை இவர் மூன்று முறை பெற்றிருக்கிறார் 
  • நம் நாட்டின் உயர்ந்த விருதான பாரத் ரத்னா பெற்றதோடு, பிரான்ஸின்  உயர்ந்த விருதையும் பிரிட்டனின் சர் பட்டமும் பெற்றவர் இவர் 
  • மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார் 
  • முப்பத்தொன்று புதிய ராகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். 
  • கர்நாடக இசையின் நுணுக்கங்களை இந்துஸ்தானி இசையில்  பயன் படுத்தியிருக்கிறார் 
  • இவர் மகள்கள் இருவரும் பலமுறை கிராமி வென்றிருக்கிறார்கள் 
  • உலகப்புகழ் பெற்ற இசை மேதை யெஹுதி மேனுஹினுடன் சேர்ந்து வாசித்த ஈஸ்ட் மீட்ஸ் வேஸ்ட் மிகவும் புகழ் பெற்ற ஒன்று 
நான் நெகிழ்ந்த மற்றொரு விஷயம்.. இவர் கடைசி கச்சேரி இந்த வருடம்  நவம்பர் நான்காம் தேதி நடந்தது. மறக்காதீர்கள். அவருக்கு வயது 92! மேடைக்கு வர சக்கர நாற்காலி தேவையாக இருந்தது அவருக்கு. அது மட்டும் இல்லை. கையோடு எடுத்து செல்லும் வகையில் சிறிய ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசிக்க முடிந்தது. இருந்தும் அரங்கத்தில் இருந்த அனைவரும் பிரமிக்கும் வகையில், அவர் இசைக்கு வயதே தெரியவில்லை என்றும் பலரும் புகழும் வகையில் அவர் இசை அன்று இருந்தது.

இவர் புவியில் இருந்தபோது நானும் வாழ்ந்தேன் என்பது  எனக்கு பெருமை!

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

அப்பாதுரை said...

ரவிசங்கரை அதிகம் ரசித்ததில்லை என்றாலும் இந்தியக் கலாசாரத் தூண் என்பதை வெளிநாடுகளில் அதிகமாகத் தெரிந்து கொண்டேன். 92 வயதில் கச்சேரிக்கு வந்தாரென்பது பிரமிக்க வைப்பது உண்மையே.

இனிமேலாவது இவரது இசையைக் கவனமாகக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

bandhu said...

வருகைக்கு நன்றி சார். உங்கள் எழுத்தை மிகவும் ரசிக்கும் எனது ப்ளாகிற்கு வருவதற்கு நன்றி..

Advocate P.R.Jayarajan said...

"தோன்றிற் புகழோடு தோன்றுக" என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

இறந்த பிறகு மறந்து போகும் இந்த உலகில், தனது இசையை மக்கள் ஒருபோதும் மறக்க முடியாது என்பதை உணர்த்தி விட்டார் இவர். இவர் இறந்தாலும் இவரது இசை இறக்காது.

இம்மேதை பற்றி கட்டுரை எழுதி பதிவு செய்தமைக்கு வாழ்த்துகள் !

Unknown said...

கண்கள் கசிகின்றன, ஒரு மேதையை இழந்ததிற்கு, மிக நல்ல பதிவு

Unknown said...

கண்கள் கசிகின்றன, ஒரு மேதையை இழந்ததிற்கு, மிக நல்ல பதிவு - Editor Balakannan

bandhu said...

வருகைக்கு நன்றி ஜெயராஜன் சார்..

bandhu said...

வருகைக்கு நன்றி பாலகண்ணன் சார்..