Wednesday, May 18, 2011

அப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பன்!


இது நான் எழுதும் முதல் சிறுகதை.. உங்கள் கருத்துக்களை எழுதினால் தன்யனாவேன்.

காலையில்..

  "என்ன ப்ரேக்பாஸ்ட் பண்ணட்டும்" 

கேட்ட   தர்ம பத்தினிக்கு ஒழுங்கான கணவனாய் "எது ஈசியோ அது பண்ணு" என்றேன்..

"ஆமா. இப்படி சொல்லிட்டு அப்புறம் அரிசி உப்புமா ஆகாது, சேமியா உப்புமா பிடிக்காதுன்னு சொல்றதில ஒன்னும் குறைச்சல் இல்லை!" 

"சரி.. மனுஷன் சாப்புடரதுல எது ஈசியோ அது பண்ணு!"

"நாக்கை முழம் நீளம் வளர்த்துட்டு .. உங்களுக்கு நக்கல் ஒண்ணுதான் குறைச்சல்"

இதற்கு பதில் பேசினால், பிரட் + ஜாம் தான் என்பதால், மௌன சாமியாரானேன்.

ஓட்ஸ் கஞ்சியுடன் வந்த மனைவி "இந்தாங்க ப்ரேக்பாஸ்ட்" என்று டேபிளில் வைத்தாள்.

"நேத்து காலேல கலா.." என்று ஆரம்பித்த மனைவியை இடை மறித்து..

"ஐயய்யோ.. மறுபடியும் முதல்ல இருந்தா?" என்றேன்..

புரியாமல் விழித்தவளிடம் .. "அது தான் நேத்து சாயந்திரம் சொன்னியே..மறுபடியும் அதே தானே.. சரியான போர் " என்றேன்..

"உங்க கிட்ட சொல்ல வந்தேன் பாருங்க..." என்று அகன்றாள் கடுப்புடன்.

இரவு..


"பத்தரை மணியாச்சி.. தூங்க போகலை? நாளைக்கு ஆபீஸ் போற ஐடியா இருக்கா இல்லையா?" 

இது மூன்றாவது தடவை . இனிமேல் சொல்ல மாட்டாள் என்று தோன்றியது. மடிக்கணினியை எடுத்து வைத்து விட்டு படுக்க சென்றேன். படுக்கையில் மகன் கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு..

"ஏண்டா, இன்னுமாடா தூங்கலை.."

"தூக்கம் வரலப்பா... ஒரு கத சொல்லு.."ன்னான்

"ஒரே ரோதனடா உன்கூட.. சரி.. கதைக்கு பதில் ஒரு Puzzle சொல்லட்டுமா?" 

(ஒரு ரகசியம். Puzzle அப்படின்னா அதுல கொஞ்சம் கணக்கை கலந்துடுவேன்.. கணக்குன்னா பையனுக்கு உடனே தூக்கம் சொக்கிடும்!)

"Sure" 

சொல்ல ஆரம்பித்தேன்..

"ஒரு ஊர்ல ஒரு சாது நடந்து போயிட்டிருந்தார். அங்க ஒரு வீட்ல ஒரே கூச்சலும் குழப்பமுமா இருந்தது"

"ம்.."

"என்ன விஷயம்னு கேட்டாரு"

"யாரு கிட்டப்பா?"

"ஏண்டா. அதுவா முக்கியம். பேசாம கேள்டா"

"சரி. சொல்லு"

"அந்த வீட்ல மூணு பசங்க. அவங்கப்பா அவர் ஊருக்கு போறப்போ மூணு பேரு கிட்டயும் ஒரு வேலை சொன்னாரு. அவருகிட்ட இருக்கிற பசுக்களில பாதியை பெரிய பையன் பாத்துக்கணும். மூணுல ஒரு பாகம் இரண்டாவது பையன் பாத்துக்கணும். ஒன்பதில ஒரு பாகம் மூணாவது பையன் பாத்துக்கணும் அப்படின்னு சொன்னாரு"

"எனக்கு தெரியும். பிரச்சனை என்னன்னு எனக்கு தெரியும். அவங்களுக்கு Fractions எப்படி பண்றதுன்னு தெரியலை. அது தானே?"

"அது தான் இல்லை. அவங்கல்லாம் கணக்குல புத்திசாலிங்க. பிரச்சனையை என்னன்னா, அவங்க அப்பா கிட்ட இருந்த பசு மொத்தம் 17, அதை எப்படி பிரிக்கறதுன்னு தான் மண்டைய ஓடச்சுக்கிட்டிருந்தாங்க."

"ம்.."

"என்ன ம்.. பதிலை சொல்லு. எப்படி பிரிச்சாங்க"

".."

"தெரியலையா.. யோசிச்சுப்பாரு... காலைல பதில் சொல்றேன்.. Goodnight"

கொஞ்ச நேரம் சத்தமே இல்லை.. சரி, தூங்கிட்டான் போல இருக்குன்னு நினச்சேன்..

"அப்பா..."

"என்ன.."

"பதில் சொல்லட்டுமா?"

எனக்கு ஆச்சர்யம். அவ்வளவு ஈசி இல்லன்னு நினச்சத உடனே எப்படி சொல்றான்...

"சரி சொல்லு"

"அந்த சாது தன் ஆஸ்ரமத்திலிருந்த பசு ஒண்ண வரவழைச்சார். அதை அவங்க கிட்ட இருந்த பசுக்களோட சேத்தாரு. அதுல பாதி, 9 பசுவை பெரிய பையன் கிட்ட குடுத்தார். மூணுல ஒரு பாகம், 6 பசுவ இரண்டாவது பையனுக்கு குடுத்தார். ஒம்போதுல ஒரு பாகம் 2 பசுவை மூணாவது பையனுக்கு குடுத்தார். பசங்களுக்கு குடுத்த 17 பசு போக மீதி ஒண்ணு அவரோட ஆஸ்ரமத்து பசு. அத அவரே வச்சுகிட்டாரு. கரெக்டா?"

பிரமித்தேன்.. ஆனாலும் கொஞ்சம் சந்தேகம்.. 

"ஏண்டா.. இத நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டனா?"

"இல்லப்பா. இதுல பசு -க்கு பதிலா கேமல் அப்படின்னு போட்டு டிங்கிள் புக்ல  வந்துதுப்பா. அதுல படிச்சேன்.."

"அது தான பாத்தேன்.. ஏண்டா. முதலிலே சொல்லலாம் இல்ல. வேற puzzle சொல்லியிருப்பேன் இல்ல"

"இல்லப்பா. ரொம்ப சுவாரஸ்யமா சொல்லிட்டிருந்தே.. அதுதான் சொல்லலை.."

இப்போது, உண்மையாக பிரமித்தேன்..  
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

மதுரை சரவணன் said...

கதை அருமை.. வாழ்த்துக்கள்

bandhu said...

மிக்க நன்றி சரவணன். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்!

மனோவி said...

கதை நன்று..
அதனினும் உங்கள் கணிதம் நன்று

bandhu said...

நன்றி மனோவி! (வித்யாசமான பெயர்!)

A.R.ராஜகோபாலன் said...

மிக உண்மை நண்பரே , இப்போதெல்லாம் பசங்க ரொம்ப ஸ்மார்ட் , நீங்கள் சொன்னதும் அதை பதிந்த விதமும் மிக அழகு

Unknown said...

உங்க குழந்தைக்கு வாழ்த்துக்கள் நண்பா!...........பகிர்ந்த உங்களுக்கு நன்றி!

bandhu said...

வருகைக்கு நன்றி, ராஜகோபாலன்!

bandhu said...

வருகைக்கு நன்றி, விக்கி..

பாரதசாரி said...

இன்னும் தொடரும் என்று நினைக்கும்போது முடிந்துவிட்டதே? அருமை இப்படியே நைஸா எங்களுக்கும் கணக்கு சொல்லி குடுத்த டீளிங்க் எனக்கு புடிச்சிருக்கு :-)

உங்கள் ப்ளாக்கை ஃபால்லோ பன்ன முடியல பந்து சார்..கொஞ்சம் உதவுங்களேன் ப்லீஸ்

bandhu said...

வருகைக்கு நன்றி பாரதசாரி! Follow பண்ண உதவும் விட்ஜெட் ஏதோ பிரச்சனை போல. ஈமெயில் மூலம் Follow பண்ணும் விட்ஜெட் இணைத்துள்ளேன். //இன்னும் தொடரும் என்று நினைக்கும்போது முடிந்துவிட்டதே?. அருமை// மிக்க நன்றி.

சிவக்குமார் said...

நன்று!! தொடர்ந்து சிறுகதைகள் நீங்கள் துணிச்சலாக எழுதலாம்

bandhu said...

மிக்க நன்றி தமிழானவன். இனி, மேலும் முயற்சிப்பேன்

சி.பி.செந்தில்குமார் said...

கதை ஓக்கே .. நீங்க சொன்ன ஃபோட்டோஸ் எல்லாம் அட்வெர்ர்ட்டைஸ்மெண்ட்ல வர்றதுதான் நோபிராப்ளம்.. நன்றி

bandhu said...

வருகைக்கு நன்றி செந்தில் குமார். அந்த புகைப்படங்கள் விளம்பரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்பது ஆறுதலை தருகிறது.

iniyavan said...

நண்பருக்கு,

இந்த கட்டுரையை படிக்க பரிந்துரைக்கிறேன்:

http://www.vinavu.com/2011/06/13/ramdev-fast/

Muse (# 01429798200730556938) said...

இந்தக் கதை உண்மையில் ரிக் வேதத்தில் உள்ளது. ஆத்மா, மாயை போன்றவற்றின் அவசியத்தைப் பற்றி விளக்கச் சொல்லப்பட்ட கணக்கு.

bandhu said...

You are right, Muse. அதையே இங்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன்! வருகைக்கு நன்றி

kashyapan said...

பந்து அவர்களே! vedhic maths என்று இப்போது சொல்கிறார்கள். நிறைய குட்டி கணக்குகளும் கதைகளும் உள்ளன. குழந்தைகளுக்கு என்றே கெள்வி பதிலாக வையாபுரிப் பிள்ளை ஒரு நூல் எழுதியிருக்கிறார். முடியுமானால் பாருங்கள்.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

bandhu said...

அன்புள்ள காஸ்யபன், அந்த புத்தகம் என்னிடம் இருக்கிறது. மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. என் மகனுக்கு சொல்வதற்கு அதில் இருந்து சிலவற்றை எடுத்து வைத்திருக்கிறேன்.. கதையுடன் கலக்க வேண்டும்!

Balaraman said...

முதல் முயற்சி எனில்.. பரவாயில்லை. நல்ல முயற்சி.
இந்த கருவினைக் கொண்டு இன்னும் கொஞ்சம் நீளமாக,
சுவாரஸ்யமாக் சொல்ல முடியும். இதே கருவினை அலுவலக
மேனேஜர்..ஸ்டாஃப் என முயற்சித்தால், பல சுவாரஸ்யங்களை கொணர முடியும். புதுமைப் பித்தன-சுஜாதா படித்துப் பாருங்கள்
(ஆஹா.. பிரமாதம் என சொல்லாததற்கு என்னை திட்ட வேண்டாம்)
அன்புடன்.

பலராமன் (கடலூர்) orbekv.blogspot.com

bandhu said...

கருத்துக்களுக்கு நன்றி பலராமன். எவ்வளவு லீட் கொடுத்திருக்கிறீர்கள். உங்களைப்போய் திட்டுவேனா? கதை நன்றாக இருந்தால் சொல்லப்போகிறீர்கள்!

இராஜராஜேஸ்வரி said...

அருமையான கதைசொன்ன தந்தைக்கும், புத்திசாலியாய் விடை தெரிந்த பிள்ளைக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

bandhu said...

நன்றி ராஜராஜேஸ்வரி. என் முதல் கதைக்கு உங்கள் வாழ்த்து பெரிய டானிக்!

S.Raman, Vellore said...

சிறப்பான கதை. மகன் புத்திசாலியாக
இருப்பது அனைத்து தந்தைகளுக்குமே
பெருமையாகத்தான் உள்ளது.

bandhu said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, ராமன் சார்!

makka said...

nice....nice

bandhu said...

thanks, Makka