தமிழில் மிக நல்ல பகடி படம் தமிழ் படம். இதை எடுத்த தயாநிதி அழகிரி இப்போது எடுக்கும் வ குவாட்டர் கட்டிங் படத்தில் அந்த பகடியையும் மிஞ்சிவிட்டார்.
இந்த போஸ்டரை பாருங்கள்.
இதில் பெயர் தவிர எதுவும் தமிழில் இல்லை! தமிழில் தலைப்பு வைத்தால் வரி விலக்கு என்ற அரசு உத்தரவை தலைப்பை மட்டும் தமிழில் போட்டு பகடி செய்ய நிறைய நகைச்சுவை உணர்வு வேண்டும். இவர்களுக்கு நிறைய இருக்கிறது. அரசு உத்தரவுப்படி தமிழில் தலைப்பு இருப்பதால் கண்டிப்பாக வரி விலக்கும் உண்டு. வாழ்த்துக்கள்.
Disc. Image courtesy: Google images / Tamilchannel
3 comments:
ஆமா, ஒரு விதத்துல பாத்தா, செம தில்லா அரசு உத்தரவையே பகடி செய்ற மாதிரித்தான் இருக்கு!!
முன்பு தேசிய, சமூகநலக் கருத்துள்ள படங்களுக்கு மட்டும் வரி விலக்கு அளித்து ஊக்குவித்தனர்.
ஆனால் கலைஉலகத்தினரை தன் வலையத்துக்குள் வைத்திருக்க இது + இலவச வீட்டுநிலம் போன்றவைகளை அளிக்கிறது அரசு.திரை உலகில் தமிழை வாழவைக்க வேண்டுமொனில், தமிழல்லாத தலைப்புப் படங்களுக்கு அதிக வரி விதிக்கலாம் என்ற சிலரின் அலோசனையை அரசு பரிசிலிக்கலாம். வரிச்சலுகையால் படம் பார்ப்பவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய விசயம். அரசுக்கு வரவேண்டிய வரிப்பணம், ஏமாற்றும் தயாரிப்பாளர்களுக்கு போகிறது.
ஹுசைனம்மா .. வருகைக்கு நன்றி..
வாசன்.. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வருகைக்கு நன்றி
Post a Comment