Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Thursday, January 3, 2019
சபரிமலை!
இந்த பதிவு சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா கூடாதா என்பது பற்றி அல்ல.
எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளை பதிவு செய்கிறேன்
- கேரளாவின் மொத்த மக்கள் தொகை 2011 ஆண்டில் மூன்றறை கோடி. (இப்போது நான்கு கோடி இருக்கும் என நினைக்கிறேன். பாதி பெண்கள் இருக்கும். ஒரு 2 கோடி? இதில் ஒரு 50 லட்சம் 15 வயதுக்கு கீழுள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும். மீதி ஒன்றரை கோடி )
- கேரளாவின் சாலைகளின் மொத்த நீளம் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர்கள்.
- வனிதா மதில் பேரணியில் 50 லட்சம் மக்கள் 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தார்கள் - பினராயி அரசு (அதாவது மூன்றில் ஒரு பங்கு கேரள பெண்கள் சரியாக அரைமணி நேரத்துக்கு வரிசையில் வெறும் 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு நின்றிருந்தார்கள்!)
- கேரள அரசு ஆளுங்கட்சி CPI (M). இந்திய அளவில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படும் ஒன்று. ஆனால் காங்கிரஸ் கேரளாவில் சபரிமலை மீதான அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது
- பிஜேபி இந்திய அளவில் ஆளும் கட்சி. மாநில அளவில் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது
- பிஜேபி தென் இந்தியாவில் வலுவாக கால் ஊன்ற இதை ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கிறது
- காங்கிரசை பொறுத்தவரை காற்று எந்தப்பக்கம் அடிக்கும் என்று தெரியாமல் பின்னர் அதற்க்கேற்றமாதிரி நிலை எடுக்கலாம் என்று காத்திருக்கிறது
- CPI (M ) ஐ பொறுத்தவரை - பெண்கள் மீதான அதீத பாசம் - உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை எப்பாடு பட்டாவது அமுல் படுத்தும் நீதிக்கு தலை வணங்கும் நேர்மை - என்றெல்லாம் யாருமே நம்பமாட்டார்கள். இவர்கள் தான் மார்தோமா சர்ச், முல்லை பெரியாறு விஷயங்களில் கோர்ட் பேச்சைக் கேட்பதில்லை பாதிரியார் ஒருவர் மீதான கன்னியாஸ்திரீகளின் குற்றசாட்டை கேட்கவும் தயாராக இல்லாத பெண் உரிமை பாதுகாவலர்கள்!
- CPI (M ) நோக்கம் புரியவில்லை. பிற மதங்களுக்கு சார்பாகவா.. இல்லை பிஜேபி காலூன்ற கள்ளத் தனமாக பினரயி கை கோர்த்திருக்கிறாரா.. மக்கள் நலனுக்காக எந்த அரசியல் கட்சியும் இல்லை என்பதில் சந்தேகமே இல்லை.
- எல்லோருமே இது வெறும் கேரளா விவகாரமாக இருக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
என்னமோ நடக்குது. ஒண்ணுமே புரியலை..
ஸ்வாமியே சரணம் ஐயப்பா !
Friday, March 9, 2018
மோடி அரசு. - ஒரு அலசல்
முதலில் ஒரு Disclaimer. நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன். என் கருத்தில் தவறிருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
மோடி அவர்களின் மிகப்பெரிய வாக்குறுதி.. "நானும் தின்ன மாட்டேன். மற்றவர்களையும் தின்ன விட மாட்டேன்." அதாவது, நானும் ஊழல் செய்யமாட்டேன். மற்றவர்களையும் செய்ய விட மாட்டேன்.
அதிர்ச்சியாக இருந்தாலும், மக்கள் இதை பிரச்சனையாக பார்ப்பதில்லை என்பதே உண்மை. ஜெ , கருணாநிதி, காங்கிரஸ்.. என்று ஊழல் செய்தது உள்ளங்கை நெல்லிக்கனி போலவோ புறங்கையை நக்கியது போலவோ வெளிப்படையாகவோ தெரிந்தாலும் மக்கள் அதன் பின்னரும் ஓட்டு போட்டிருக்கிறார்கள்
பிறகு என்ன தான் பிரச்சனை?
நான் தனிப்பட்ட முறையில் எதில் பாதிக்கப் படுகிறேனோ, அது தான் எனக்குப் பிரச்சனை!
இதனால் தான், ஜெயலலிதா நேரடியாக மக்கள் பாதிக்கப் படும் எதிலும் கை வைக்கவில்லை. முன்னால் கை வைத்த போதெல்லாம் அடி வாங்கினார் (உயிர்பலி தடை / அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்).
நேரடியாக பலன் தரும் திட்டங்களில் (அம்மா உணவகம். சத்துணவு. கலைஞர் தொலைக்காட்சி) உடனடியாக நல்ல பெயர் கிடைப்பது அதனால் தான்.
ஊழல் எப்போது பிரச்சனை ஆகிறது என்றால் வெளிப்படையாக அது அப்பட்டமாக வெளிக் காட்டிக் கொள்ளப் படும்போது , Flaunt செய்யப் படும்போது. (கருணாநிதியின் வாரிசுகள் மிகப் பெரிய படத் தயாரிப்பாளர்கள் ஆனது / ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமண ஆடம்பரம்)
இப்போது மோடி அரசைப் பார்க்கலாம்
மோடி அரசின் மிகப் பெரிய தவறாக ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததை காண்கிறேன். கிட்ட தட்ட எல்லோரும் பாதிக்கப் பட்டார்கள். பெரிய அளவு நல்லது எதுவும் நடந்ததாக தெரியவில்லை. பலன் என்ன கிடைத்தது என்பதை விளக்கவோ, பலன் இல்லாததற்கு வருத்தம் தரவோ மோடி முன்வரவில்லை என்பது அநியாயம்!
அதே போல் GST. எவ்வளவு குழப்பம்! இதுவரை நான்கு முறை பட்டியலிட்ட பொருட்கள் மாறிவிட்டது. Again, கிட்ட தட்ட எல்லோரும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
இப்போது தேசிய வங்கிகள் ஒவ்வொன்றாக வாராக்கடன் பட்டியல் வெளியிடும்போது, இவர் அரசும் ஊழலில் குறைந்ததில்லை என்று தோன்றுகிறது!
அடுத்தது கிட்ட தட்ட ஐந்து வருட தேர்தல் பிரச்சாரமாக அரசை நடத்துகிறார்.
நல்லது நடந்திருக்கிறது. அல்லதும் நடக்கிறது. எல்லோர் அரசைப் போலவே.
அடுத்து காங்கிரஸ் வந்துவிடுமோ என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை!
ராகுல் மட்டுமே அதை தடுக்க முடியும், வாயை திறக்காமலிருந்தால்!
Tuesday, October 24, 2017
இருப்பவர்களும் இல்லாதவர்களும்!
இன்று இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை, வெளியிலிருந்து பார்ப்பவனாக எனக்குத் தெரிவது, ஏழை / பணக்காரர்கள் இடையே இருக்கும் மிகப்பெரிய இடைவெளி.
இன்றைய தமிழ் இந்து நாளிதழின் முதல் பக்கத்தில் பார்த்தவுடன் முகத்தில் அறைவது..
ஒரு லட்சத்துக்கு கொஞ்சம் அதிகம் கடன் வாங்கி இரு மடங்கு வட்டி கட்டி அடைக்க எந்த வழியும் தெரியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட இசக்கி முத்து தம்பதியர்..
33 கோடிக்கு புது 2000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த சேகர் ரெட்டி
எப்பவோ நடந்த பத்திரப் பதிவு ஊழல் புகழ் தெல்கி (90000 கோடி ஊழல்!)..
ஏழ்மையுடன் நேர்மையாக இருப்பதற்கு என்ன இன்சென்டிவ் ?
Saturday, February 25, 2017
ஆரம்பமே சொதப்பல்!
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சி தொடங்கியிருக்கிறார்.
அரசியல் என்பது எவ்வளவு பெரிய பிசினெஸ்! எவ்வளவு பணத்தை கொட்டி ஒரு கட்சியை நடத்த வேண்டியிருக்கிறது! வெறும் டீ குடித்துவிட்டு நாளெல்லாம் வேலை செய்யும் தொண்டர்கள் எந்த கட்சியிலாவது இருக்கிறார்களா? (கம்யூனிஸ்ட் தவிர). வேளைக்கு குவார்ட்டர். சாப்பாட்டுக்கு பிரியாணி. கையில் கொஞ்சம் காசு என்றுதான் தொண்டர்களை திரட்ட வேண்டியிருக்கிறது.
போட்ட பணத்தை எடுக்க எவ்வளவு பொறுப்பாக அந்த பிசினெஸ்ஸை நடத்தவேண்டும்! இங்கே என்னடாவென்றால் கட்சி பெயரிலேயே சொதப்பல்.
கட்சிப் பெயர் : எம்ஜியார் அம்மா தீபா பேரவை
ஆங்கிலத்தில் : MGR Amma Deepa பேரவை. அதாவது MAD பேரவை.
பைத்தியக்கார பேரவை? பைத்தியக்காரர்களின் பேரவை?
கொஞ்சம் யோசித்து வைத்திருக்கக் கூடாதா? இரண்டு மாதம் யோசித்து வைத்த பேர் இதுதானா?
சுத்தம்!
Sunday, December 11, 2016
காங்கிரஸிற்கு தமிழ் நாட்டில் மறுவாழ்வு!
விசித்திரமாகவும், பைத்தியக் காரத் தனமாகவும் தோன்றலாம். கிட்டதட்ட புதைக்கப் பட்ட கட்சி தமிழ் நாட்டில் உயிர்த்தெழுவதா என்ற கேள்வியும் எழலாம். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்.
அதிமுக வின் தலைவி திரு ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த உடன் அந்த கட்சியின் / தமிழகத்தின் வெற்றிடம் பிரம்மாண்டமாக தெரிகிறது. ஜெயலலிதாவின் ஆளுமை அப்படிப் பட்டது. எம்ஜியாரும் கருணாநிதியும் அடைய முடியாத உயரம் இது. (வெற்றிடம் பற்றி சென்ற வருடம் நான் எழுதியது)
இப்போது நடராஜன் அவர்களின் சித்து வேலைகளால் கிட்டதட்ட எல்லோரும் சசிகலாவின் பின் ஓரணியில் திரண்டு வருகிறார்கள். இங்கு எல்லோரும் என்பது அறியப்பட்ட / அறியப்படாத அதிமுக 'தலைவர்கள்' மற்றும் மீடியா 'நண்பர்கள்'
ஆனால், மக்களில் பெரும்பாலோருக்கு சசிகலா என்றால் வேப்பங்காய் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மக்களின் பொதுவான கருத்து ஜெயலலிதா நல்லவர்தான், ஆனால் சசிகலா தான் எல்லா கெட்டவற்றிக்கும் காரணம் என்பது. யோசித்துப் பாருங்கள். எவருக்காகவாது 10000 பேர் மொட்டை போட்டுக் கொண்டதாக சரித்திரம் உண்டா? எம்ஜியாருக்குக் கூட கிடையாது.
பிஜேபியை பொறுத்தவரை அவர்கள் சசிகலா பின்னால். கௌதமியை அறிக்கைவிட வைத்து சசிகலாவுக்கு ஒரு செக். சேகர் ரெட்டியை ரெய்டு செய்து பன்னீர் செல்வத்துக்கு ஒரு செக். சசிகலா தலைவியாக இருப்பதே பிஜேபி க்கு நல்லது என நினைக்கிறார்கள்.
திமுகவை பொறுத்தவரை, எது செய்தாலும் அவர்களுக்கு கெட்டப் பெயர். அதனால் அமைதியாக இருப்பது மட்டுமே அவர்களுக்கான ஆப்ஷன்.
இது தான் காங்கிரஸிற்கு சரியான சந்தர்ப்பம். திருநாவுக்கரசர் தலைவராக இருப்பது காங்கிரஸிற்கு பெரிய அதிர்ஷ்டம். நேரடியாக எதுவும் செய்ய வேண்டாம்.
ஜெயலலிதாவின் சகோதரர் மகளை தலைவியாகக் கொண்டு அம்மா திமுக ஆரம்பித்தால், மிக விரைவில் கட்சியும் ஆட்சியையும் அதற்கு வந்துவிடும். அவரை முன்னிறுத்தி காங்கிரஸ் தன்னை பலப் படுத்திக் கொள்ளவேண்டியதுதான்!
ஒரு 10000 கோடி இருந்தால் இதைத்தான் நான் செய்வேன்! இல்லையே!
Friday, January 1, 2016
அரசியல் வெற்றிடம்
முதலில் ஒரு தன்னிலை விளக்கம். நான் வெளிநாட்டில் வாழும் இந்தியன். நான் தமிழகம் இப்போதிருக்கும் நிலையை பார்ப்பது செய்தி ஊடகங்கள் மூலமும், சமூக வலை தளங்கள் மூலமும், பதிவுகள் மூலமும் தான்.
இப்போது இருப்பது போல ஒரு அரசியல் வெற்றிடம் எப்போதுமே இருந்ததாக நினைவில்லை. வெள்ளம் வந்த போதுதான் எந்த அளவு அரசு செயல்படாத அரசாக இருக்கிறது என்று தெரிந்தது. ஊரே முழுகிக் கொண்டிருக்கும் போதும் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வெளியே வராத முதல்வரை என்ன சொல்வது?
திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதி தலைமையை ஸ்டாலினுக்கு எளிதாகக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார் என நினைக்கிறேன். சென்ற முறை ஆட்சியில் இருந்தபோது இரண்டாவது அல்லது மூன்றாவது வருடம் ஸ்டாலினைக் கொண்டு வந்திருந்தால் transition எளிதாக இருந்திருக்கும். இப்போது யார் கூட்டணிக்கு வருவார்கள் என வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் நிலையில் இருக்கிறார்கள். வெள்ளத்தில் இறங்கி வேலை செய்திருந்தால் ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும். மிக தாமதமாக குறைந்த இடங்களில் தென்பட்டது பெரிதாக பலன் அளிக்கவில்லை என நினைக்கிறேன்.
வைகோ வை பொருத்தவரை தங்கத்தட்டில் கொடுத்த வாய்ப்பை தவற விட்டவர் என நினைக்கிறேன். இனி எப்போதும் அந்த வாய்ப்பு வராது. எப்போது தமிழகத்தின் நலத்தை விட தமிழீழத்தின் நலத்தை அதிகமாக அவர் மதிபிட்டாரோ அப்பொழுதே அவர் அரசியலில் தனிப்பட்டு விட்டார். அவர்தான் புரிந்து கொள்ளவில்லை.
விஜயகாந்தை பொறுத்த வரை, பொறுப்பிலாமல் நடந்து கொள்வதே அவர் மிகப் பெரிய பலமாகக் கருதிக் கொள்கிறார். எல்லோரையும் துச்சமாக மதிப்பது வேறு. பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வேறு. அந்த வித்யாசம் தெரியாமல்தான், யாரையும் மதிக்காமல், அது வெளியே தெரியும் அளவு பொறுப்பிலாமல் நடந்து கொள்கிறார். அதை உணர்ந்து கொள்ளும் வரை, அவர் 10% ஓட்டோடு திருப்தி அடைய வேண்டியது தான்!
ராமதாசை பொருத்தவரை அவர் credibility யை அவரே போக்கிக்கொண்டு விட்டார். மாற்றி மாற்றி அலியன்ச் வைப்பது பெரிய தவறு ஒன்ன்றும் இல்லை. யாருக்குமே கொள்கை என்று ஒன்று கிடையாது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். என்ன. இது பா மா கா விஷயத்தில் வெளிப்படையாக தெரிந்து விட்டது. அது தான் தவறு. அதை மீறி வருவது என்பது அவ்வளவு எளிதல்ல.
திருமாவளவன் போன்றவர்கள் உண்மையாக உறுதியாக தன் கொள்கையில் (!) நின்றிருந்தால் ஒரு credibility இருந்திருக்கும். ஆனால் கொள்கை (!) விஷயத்தில் எதிர் நிற்கும் பா மா கா போன்றவர்களுடன் எப்போது கூட்டணி அமைத்தாரோ, ராஜ பக்ஷேவுடன் புகைப் படத்துக்கு போஸ் கொடுத்தாரோ அப்போதே அவர் அழிந்துவிட்டார். இவரை அழித்ததில் கருணாநிதியின் பங்கு மிக அதிகம் என நினைக்கிறேன்.
கம்யூனிஸ்ட் களை பொருத்தவரை அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. மேலும், ஒன்றுக்கும் உதவாத சீனா ஆதரவு, ரஷ்யா ஆதரவு என்பதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல் மக்களை பாதிக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்களேயானால் scope உண்டு. என்னைப் பொருத்தவரை, மக்களை பாதிக்கும் விஷயங்களில் உண்மையாக அக்கறை செலுத்துபவர்கள் இவர்கள் மட்டுமே. என்ன பிரயோஜனம். அதை மக்கள் உணரும் வரை இவர்களுக்கு விடிவு காலம் கிடையாது.
பிஜேபி யை பொருத்தவரை தமிழிசை போன்றவர்களை தவிர்த்து வேறு யாரும் அவர்களை சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன்.
கடைசியில் என்ன மிச்சம் என்று பார்த்தால், இருப்பது வெற்றிடம் என்ற உண்மை தான்.
மீள ஒரே வழி , தேர்தலில் ஒரு மைனாரிட்டி அரசு வரவேண்டும். அந்த அரசு, குறைந்தது இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால்தான் அரசு அமைக்க முடியும் என்ற நிலை வரவேண்டும். அப்போது தான் கொஞ்சமாவது பொறுப்பான அரசு வரும்!
Sunday, June 7, 2015
முழுமையான சர்வாதிகாரம்..
கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் டி வி யில் வரும் 'செய்திகள் ' எந்த அளவு நம் கருத்துக்களை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது என்று வியப்பாக இருக்கிறது..
ஒரு மிகப் பெரிய ஊழல் குற்றச் சாட்டு வெளிவந்து உண்மையிலேயே மக்கள் புரட்சி வந்துவிடும் போல இருக்கிறது என்று எண்ணும்போது திடீர் என்று ஒரு நடிகை குளிக்கும் வீடியோ வெளியாவது.. மிகப் பரபரப்பாக ஒரு கற்பழிப்பு செய்தி வெளியாவது..என்றும் இல்லாமல் அதற்கு மிகப் பெரிய கவரேஜ்..அதிரடியாக ஒரு கிரிக்கெட் விளையாட்டு நடப்பது.. மிகப்பெரிய நடிகரின் படம் பெரிய தோல்வி அடைவது.. அந்த படத்தில் நஷ்டம் அடைந்த மிக சிலர் நடத்தும் 'போராட்டம்' செய்தியாக தொடர்ந்து வருவது..
இதெல்லாம் தற்செயலா? இல்லை யாராவது தெளிவாக நம் கருத்துக்களை சிதைத்துக் கொண்டே இருக்கிறார்களா?
இதெல்லாம் தெளிவாக நடக்கும் சதி வேலையே என்று கண்முன் போட்டுடைக்கிறது Perfect Dictatorship என்ற ஸ்பானிஷ் திரைப்படம். பார்க்க பார்க்க யாரோ நம் ஊரில் நடப்பதை வெட்டவெளிச்சம் ஆக்குவது போல இருந்தது..
கதை இதுதான்..
மெக்சிகோவின் ப்ரெசிடெண்ட் அடிக்கடி ஏதாவது ஏடாகூடமாக வாயை விட்டு மாட்டிக்கொள்ளும் டைப். அவர் முதல் காட்சியிலேயே அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேசும்போது மெக்சிகோ மக்கள் கடின உழைப்பாளிகள்.. யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.. என்று சொல்ல நினைத்து .. உங்கள் நாட்டு கருப்பர்கள் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் அவர்களை விட நன்றாக செய்வார்கள் என்று உளறிவிடுகிறார் .. வாட்ஸ் அப்.. Facebook , Twitter என்று எல்லோரும் அவரை கிழித்து தோரணமாய் தொங்க விட.. உடனே அவர் ஓர் டிவி நெட்வொர்க்கை அணுகுகிறார்.. அவர்கள் இதை எல்லோரும் மறக்கவேண்டுமானால் வேறு ஒரு பெரிய செய்தி வேண்டும் என்று ப்ரெசிடெண்ட் கட்சியிலேயே இருக்கும் ஒரு மாநில கவர்னர் பெட்டி நிறய பணம் லஞ்சம் வாங்கும் வீடியோவை வெளியிடுகிறார்கள்.. சட்டென்று பிரச்சனை திசை திரும்பிவிடுகிறது...
ஆனால் பெட்டி வாங்கிய கவர்னர் அசகாய சூரன்.. அந்த டிவி காரர்களுக்கு பணம் கொடுத்து அவர் மீதான செய்தியை மாற்ற முயல்கிறார்.. பேச்சுவார்த்தையின் போதுதான் தெரிகிறது இவர்கள் வீச்சு எவ்வளவு பெரிது என்று.. ஒரேடியாக தன்னை ப்ரெசிடெண்ட் ஆக்குவதற்கு அந்த டிவி யுடனே ஒரு டீல் போட்டுக் கொள்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டு வெளியிட்ட டிவி யே கொஞ்சம் கொஞ்சமாக எப்படி அவர் இமேஜை வளர்க்கிறார்கள் என்று படம் வளர்கிறது..
நேர்மையாக நடக்கும் ஒரு அரசியல்வாதி.. அவரை டிவி பேட்டியில் எடக்கு மடக்காக கேள்வி கேட்டும் பழைய விவகாரங்களை கிளறியும் அவர் இமேஜை டிவி காலி செய்வது.. இரட்டைக் குழந்தைகள் காணாமல் போவது... அந்த விவகாரத்தை எந்த அளவு முடியுமோ அந்த அளவு பெரிதாக்குவது.. எந்த அளவு அதை 'ஸ்டேஜ்' செய்து காட்டுவது.. என்று கிழித்து தோரணமாய் தொங்கவிட்டிருக்கிறார்கள்.
இந்த படத்தின் ஒரு சாம்பிள் காட்சி.. நேர்மையான அரசியல்வாதியின் பழசை கிளற அரசின் உதவியை நாடுகிறார் டிவி அதிபர்.. அவர் கூப்பிடுவது தற்போதய ப்ரெசிடெண்டை .. ப்ரெசிடெண்ட் இருப்பது ஒரு ராணுவ வீரருக்கு அரசு மரியாதை செலுத்தும் விழாவில்.. அப்படி ஒரு விழாவில் இருப்பவரை போனில் கூப்பிட்டு கிட்டதட்ட மிரட்டுகிறார் டிவி அதிபர். யாரிடம் உண்மையான அதிகாரம் இருக்கிறது என்று அப்பட்டமாக காட்டுகிறது இது! அதுவும் 'என்னய்யா டை போட்டுட்டு இருக்க. கேவலமா இருக்கு. நான் கொஞ்சம் அனுப்பறேன்.. அதை போட்டுக்கோ..' என்று 'நான் உன்னை பாத்துக்கிட்டே தான் இருக்கேன்' என்று உள்ளூட மிரட்டுவது.. அட்டகாசம்!
பற்பல இடங்களில் படம் நம் ஊர் அரசியலை நக்கல் செய்வது போலவே இருக்கிறது. அவர்கள் செய்வதென்னவோ மெக்சிகோ அரசியலை! எல்லா ஊரிலும் இவர்கள் ஒரே மாதிரிதான் போல!
தவறவே விடக்கூடாத படம் இது.. 2014இல் வெளியான படம். Netflix இல் உள்ளது.
இந்தப் படம் பார்க்கும்போது உங்களுக்கு ஆருஷி கேஸ்.. நிர்பயா விவகாரம் , லிங்கா விவகாரம்.. லல்லு.. சுப்பிரமணியம் சுவாமி.. சல்மான்.. பிரியங்கா.. ராகுல்.. மோடி.. எல்லோரும் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.. அவர்களே பொறுப்பு! ..
ஒரு மிகப் பெரிய ஊழல் குற்றச் சாட்டு வெளிவந்து உண்மையிலேயே மக்கள் புரட்சி வந்துவிடும் போல இருக்கிறது என்று எண்ணும்போது திடீர் என்று ஒரு நடிகை குளிக்கும் வீடியோ வெளியாவது.. மிகப் பரபரப்பாக ஒரு கற்பழிப்பு செய்தி வெளியாவது..என்றும் இல்லாமல் அதற்கு மிகப் பெரிய கவரேஜ்..அதிரடியாக ஒரு கிரிக்கெட் விளையாட்டு நடப்பது.. மிகப்பெரிய நடிகரின் படம் பெரிய தோல்வி அடைவது.. அந்த படத்தில் நஷ்டம் அடைந்த மிக சிலர் நடத்தும் 'போராட்டம்' செய்தியாக தொடர்ந்து வருவது..
இதெல்லாம் தற்செயலா? இல்லை யாராவது தெளிவாக நம் கருத்துக்களை சிதைத்துக் கொண்டே இருக்கிறார்களா?
இதெல்லாம் தெளிவாக நடக்கும் சதி வேலையே என்று கண்முன் போட்டுடைக்கிறது Perfect Dictatorship என்ற ஸ்பானிஷ் திரைப்படம். பார்க்க பார்க்க யாரோ நம் ஊரில் நடப்பதை வெட்டவெளிச்சம் ஆக்குவது போல இருந்தது..
கதை இதுதான்..
மெக்சிகோவின் ப்ரெசிடெண்ட் அடிக்கடி ஏதாவது ஏடாகூடமாக வாயை விட்டு மாட்டிக்கொள்ளும் டைப். அவர் முதல் காட்சியிலேயே அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேசும்போது மெக்சிகோ மக்கள் கடின உழைப்பாளிகள்.. யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.. என்று சொல்ல நினைத்து .. உங்கள் நாட்டு கருப்பர்கள் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் அவர்களை விட நன்றாக செய்வார்கள் என்று உளறிவிடுகிறார் .. வாட்ஸ் அப்.. Facebook , Twitter என்று எல்லோரும் அவரை கிழித்து தோரணமாய் தொங்க விட.. உடனே அவர் ஓர் டிவி நெட்வொர்க்கை அணுகுகிறார்.. அவர்கள் இதை எல்லோரும் மறக்கவேண்டுமானால் வேறு ஒரு பெரிய செய்தி வேண்டும் என்று ப்ரெசிடெண்ட் கட்சியிலேயே இருக்கும் ஒரு மாநில கவர்னர் பெட்டி நிறய பணம் லஞ்சம் வாங்கும் வீடியோவை வெளியிடுகிறார்கள்.. சட்டென்று பிரச்சனை திசை திரும்பிவிடுகிறது...
ஆனால் பெட்டி வாங்கிய கவர்னர் அசகாய சூரன்.. அந்த டிவி காரர்களுக்கு பணம் கொடுத்து அவர் மீதான செய்தியை மாற்ற முயல்கிறார்.. பேச்சுவார்த்தையின் போதுதான் தெரிகிறது இவர்கள் வீச்சு எவ்வளவு பெரிது என்று.. ஒரேடியாக தன்னை ப்ரெசிடெண்ட் ஆக்குவதற்கு அந்த டிவி யுடனே ஒரு டீல் போட்டுக் கொள்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டு வெளியிட்ட டிவி யே கொஞ்சம் கொஞ்சமாக எப்படி அவர் இமேஜை வளர்க்கிறார்கள் என்று படம் வளர்கிறது..
நேர்மையாக நடக்கும் ஒரு அரசியல்வாதி.. அவரை டிவி பேட்டியில் எடக்கு மடக்காக கேள்வி கேட்டும் பழைய விவகாரங்களை கிளறியும் அவர் இமேஜை டிவி காலி செய்வது.. இரட்டைக் குழந்தைகள் காணாமல் போவது... அந்த விவகாரத்தை எந்த அளவு முடியுமோ அந்த அளவு பெரிதாக்குவது.. எந்த அளவு அதை 'ஸ்டேஜ்' செய்து காட்டுவது.. என்று கிழித்து தோரணமாய் தொங்கவிட்டிருக்கிறார்கள்.
இந்த படத்தின் ஒரு சாம்பிள் காட்சி.. நேர்மையான அரசியல்வாதியின் பழசை கிளற அரசின் உதவியை நாடுகிறார் டிவி அதிபர்.. அவர் கூப்பிடுவது தற்போதய ப்ரெசிடெண்டை .. ப்ரெசிடெண்ட் இருப்பது ஒரு ராணுவ வீரருக்கு அரசு மரியாதை செலுத்தும் விழாவில்.. அப்படி ஒரு விழாவில் இருப்பவரை போனில் கூப்பிட்டு கிட்டதட்ட மிரட்டுகிறார் டிவி அதிபர். யாரிடம் உண்மையான அதிகாரம் இருக்கிறது என்று அப்பட்டமாக காட்டுகிறது இது! அதுவும் 'என்னய்யா டை போட்டுட்டு இருக்க. கேவலமா இருக்கு. நான் கொஞ்சம் அனுப்பறேன்.. அதை போட்டுக்கோ..' என்று 'நான் உன்னை பாத்துக்கிட்டே தான் இருக்கேன்' என்று உள்ளூட மிரட்டுவது.. அட்டகாசம்!
பற்பல இடங்களில் படம் நம் ஊர் அரசியலை நக்கல் செய்வது போலவே இருக்கிறது. அவர்கள் செய்வதென்னவோ மெக்சிகோ அரசியலை! எல்லா ஊரிலும் இவர்கள் ஒரே மாதிரிதான் போல!
தவறவே விடக்கூடாத படம் இது.. 2014இல் வெளியான படம். Netflix இல் உள்ளது.
இந்தப் படம் பார்க்கும்போது உங்களுக்கு ஆருஷி கேஸ்.. நிர்பயா விவகாரம் , லிங்கா விவகாரம்.. லல்லு.. சுப்பிரமணியம் சுவாமி.. சல்மான்.. பிரியங்கா.. ராகுல்.. மோடி.. எல்லோரும் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.. அவர்களே பொறுப்பு! ..
Tuesday, February 10, 2015
மன்மோஹனின் நெருங்கிய நண்பர்!
டிபெரியஸ் (Tiberius) 14 AD முதல் 37 AD வரை ஆட்சியில் இருந்த ரோமாபுரி மன்னன். வரலாற்றில் அவர் ஒரு கொடுங்கோல் மன்னனாக பதிவு செய்யப் பட்டிருக்கிறார் (மாற்று தகவல்களும் உண்டு) அவரை சதி மூலம் கொன்று பதவிக்கு வந்தவர் அவர் கொள்ளு மருமகன் (grand nephiew) கலிகுலா (Caligula) டிபெரியஸ் இறக்கும்போது கலிகுலாவிடம் சொன்னது..எப்படியாவது மக்களை டிபெரியஸ் நல்லவன் என்று சொல்ல வேண்டும். அது ஒன்றே நான் கேட்கும் உதவி என்றானாம். அடுத்து வந்த கலிகுலாவின் மிருகத்தனமான கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் எல்லோரும் 'இவனை விட டிபெரியஸ் எவ்வளவோ நல்லவன்' என்று சொன்னார்களாம்!
வரலாறு மறுபடி திரும்புகிறது
மௌனசாமியாக இருந்து குடி கெடுத்த மன்மோகனிடம் இருந்து பிடுங்கி மோடியிடம் அரசை கொடுத்தால், அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்தது போல் இருக்கிறது!
நூறு நாட்களில் கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவேன்.. (அதுவும் ஆளுக்கு ஒரு லட்சம்!)
இன்சூரன்ஸ் தனியார் மயமாகாது
ஆதார் அட்டை தேவையில்லை..
அணு ஒப்பந்தம் எல்லோருக்கும் ஏற்றது போல நிறைவேற்றப் படும்..
...
...
எல்லாமே மறந்து விட்டது போல இருக்கிறது. வேலையற்ற வேலையாக இந்துக்கள் பத்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.. கோட்சேக்கு சிலை..பட்டேலுக்கு உலகத்திலேயே பெரிய சிலை... அதானிக்கு வெளிநாட்டில் தொழில் தொடங்க 1 பில்லியன் டாலர் கடன் (ஸ்டேட் பேங்க் மூலம்).. அணு ஒப்பந்தத்திற்கு கிட்ட தட்ட மண்டியிட்டு ஒப்புக் கொண்டு கையெழுத்து..'எளிமையாய்' 11 லட்சத்தில் சூட்..
நல்ல வேளை .. .டில்லியில் தோத்தது பிஜேபி.. இதை ஒரு wakeup call என உணர்ந்து வெறும் விளம்பரத்தை விட்டு உண்மையில் ஏதாவது பண்ணினால் தேவலாம்!
இப்போது சொல்லுங்கள்..
மன்மோகனே நல்லவர் போல இருக்கிறதே என்று எண்ண வைத்த மோடி தானே மன்மோகனின் நெருங்கிய நண்பர்?
Wednesday, October 15, 2014
எது ஊழல்?
முதலில் நான் உண்மை என நினைப்பவை சில..
- கொள்கை அடிப்படையில் எந்த கட்சிக்கும் பெரிய அளவு தன்னலம் கருதாத தொண்டர்கள் கிடையாது.
- எந்த கட்சிக்கும் பெரிய அளவு கொள்கை எதுவும் இல்லை, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் தவிர.
- எல்லோரும் தன் வாழ்நாளில் குறைந்த பட்சம் தன்னிறைவு அடைய விரும்புகிறார்கள்
- யாரையும் சாராமல் தின வாழ்க்கைக்கு தேவையானவற்றை அடைய பணம் தேவையாக இருக்கிறது.
- எந்த ஒரு கட்சி நடத்தவும் பெரிய அளவு பணம் தேவை.
- பதவியில் இல்லாத அரசியல்வாதிக்கு அரசியல் மூலம் சம்பளம் கிடையாது.
எந்த பணவரவும் இல்லாமல் அரசியல்வாதி எப்படி வாழ முடியும்? சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் 50000 வேண்டியிருந்தால், அரசியல்வாதி குடும்பத்துக்கு அது போல சில மடங்கு தேவை. எதற்கு?
இருப்பை காட்டிக்கொள்ள அடிக்கடி போராட்டம் /உண்ணா விரதம் / பொதுக்கூட்டம் / மனித சங்கிலி போராட்டம் போன்றவற்றை நடத்த வேண்டியிருக்கிறது. இன்றைய விலைவாசியில் எது ஒன்றும் நடத்தவும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் முதல் பல லட்சம் வரை தேவையாக இருக்கும். எங்கிருந்து வரும் அந்தப் பணம்?
தனி ஒரு மனிதனாக இல்லாவிட்டாலும் அரசியல்வாதி மூலம் தான் இந்த செலவுகளை சமாளிக்க வேண்டும். அப்போது கட்சி கொடுப்பது?
கட்சிகளுக்கான வருமானம் என்றால், கட்சிக்கு வரும் நன்கொடை,அதன் சொத்துக்கள் மூலம் வரும் வாடகைகள் போன்றவை பெரும்பாலானவை. கொள்கைகளே இல்லை என்னும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நன்கொடை என்பது எவ்வளவு இருக்கப்போகிறது?.. கண்டிப்பாக அதிகம் இருக்க முடியாது.
எதிர்பார்ப்புகளுடன் நன்கொடை என்பது இரு வகையில் இருக்கக் கூடும் (ஊகம் தான்!) ஒன்று செய்து கொடுக்கப் போகிற காரியத்திற்கோ (இந்த திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைத்தால் கட்சிக்கு நிதி போன்ற..) / செய்து கொடுத்த காரியத்திற்க்கோ (இந்த ப்ராண்ட் சோலார் வாங்கினால் மட்டுமே ஊக்கத் தொகை என்பது போன்ற..) வருவது.. இரண்டாவது.. நாளை ஆட்சி அமைத்தவுடன் எனக்குப் அமைச்சர் / எம்பி / எம் எல் ஏ. அதனால் இன்று சம்பாதிப்பதில் கொடுக்கிறேன் என்பது.
ஆக மொத்தம் கட்சிகள் நடத்தத் தேவைப் படும் பணம் சம்பாதிக்க எனக்குத் தெரிந்த வழிமுறைகள் இவைதான்.
அடிப்படையிலேயே நேர்மையுடன் நடத்தவே முடியாத ஒன்றாக இந்த கட்சி நடத்துவது இருக்கிறது. ஆனால் கட்சி நடத்த முடியவில்லை என்றால் ஆட்சிக்கு வர முடியாது. எவருக்கு எந்த அளவு பதவிக்கு வர விருப்பம் இருக்கிறதோ அந்த அந்த அளவுக்கு கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பதோ (அவரே நிதி கொடுப்பதால் / நிதி திரட்டும் வலிமை கொண்டதால்) இல்லை கட்சியை நடத்துவதோ இருக்க வேண்டும்.
மறுபடி அரசியல்வாதிக்கு வருவோம். அவரும் பிழைக்க மாதம் தோறும் பணம் தேவை. நேர்மையாக எந்த வழியும் இல்லை. ஆனாலும் அரசியலில் அவர் இருந்தால்தான் என்றாவது அதிகாரத்துக்கு வர முடியும்.. இப்படி இருக்கும்போது இவர்கள் நேர்மையாக எப்படி இருக்க முடியும்? நேர்மையாக இருப்பது என்பது கட்சி கொடுக்கும் (கொடுத்தால்) பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்வது. அப்படி இருந்தால் அடுத்த மாதமே பெரும்பாலானோர் அவரை மறந்து விடுவார்கள்.. அப்புறம் எப்படி அதிகாரத்துக்கு வருவது?
மொத்தத்தில், அரசியல்வாதிகள் பணம் ஈட்டுவது ஏற்கனவே செய்த செலவுகளை சரிகட்டவும் / எதிர்காலத்தில் செய்யப் போகும் செலவுகளை சமாளிக்கவும். அதையும் தாண்டித் தான் அனைவரும் சம்பாதிக்கிறார்கள்.
இப்படி ஒரு சொதப்பல் அஸ்திவாரத்துடன்.. 'ஊழல் இல்லாத அரசு..ஊழலை அடியோடு ஒழிப்போம்' என்பதெல்லாம் வெற்று வாதம் தான்!
ஓரளவு ஊழலை சகித்துக் கொள்வதே நடைமுறை வழி! இல்லையேல், அரசியல் வாதிகள் செய்வது ஊழல் இல்லை. மற்றவர் செய்வது மட்டுமே ஊழல் என்று சொல்லி விடலாம்!
Monday, November 25, 2013
அமெரிக்கா ஏன் உலகத்தின் தலை சிறந்த நாடு இல்லை..
HBO என்பது அமெரிக்காவில் இருக்கும் ஒரு ப்ரீமியம் டி வி சேனல். ப்ரீமியம் என்பதால் எந்த விளம்பரதாரர் தொந்தரவும் இல்லாமல் நிகழ்ச்சியை பார்க்க முடியும். இந்த சேனலில் முக்கியமாக மூன்று வித நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுகிறது. சினிமா. சின்னத்திரை தொடர்கள். பே-பெர்-வியு நிகழ்ச்சிகள்.
இதில் 2012 இல் இருந்து வெளிவரும் தொடர் The Newsroom. ஒரு தொலைகாட்சியில் நியூஸ் வழங்கும் ஒரு டீமில் நடக்கும் நிகழ்ச்சிகள், எப்படிப்பட்ட நேரத்திலும் நேர்மையாக செய்திகளை வழங்க வேண்டும் என்று துடிக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்.. முடிந்தவரை எல்லோரையும் திருத்த முயற்ச்சிக்கும் செய்தியின் நேர்முக பேட்டியாளர்.. உண்மையாக உழைக்கும் துடிப்பான இளைஞர்கள்..அவர்கள் நேர்மையாக இருப்பதால் அவர்களுக்கு வரும் இடையூறுகள், யார் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று அவர்களை காப்பாற்றும் அந்த நெட்வொர்க்கின் தலைவர் என்று பிரமாதமான கேரக்டர்கள்.. அந்த தொடரில் அலசப்படும் நியூஸ் எல்லாம் அந்தந்த நேரத்தில் நடந்த நிகழ்சிகள் என்று.. அருமையாக எடுக்கப்பட்ட தொடர்..
அந்த தொடரின் முதல் நிகழ்ச்சியின் முதல் சில நிமிட கிளிப்.. அதில் இந்த தொடரின் ஹீரோ அமெரிக்கா இன்று ஏன் சிறந்த நாடு இல்லை என்று விளக்கும் ஒரு சுவாரஸ்யமான ஸீன் ..
இது போன்ற ஆக்க பூர்வமான தொடர்கள் நம் ஊரில் ஏன் வருவதில்லை?
Wednesday, August 21, 2013
இந்திய பொருளாதாரம் - கவலைக்கிடமான நிலையில்..
Image courtesy : Google Images
இந்திய பொருளாதாரம் மிக அபாயமான நிலையில் உள்ளது. ஒரே மாதத்தில் 7% மதிப்பை ரூபாய் இழந்துள்ளது. இதன் ஆபத்தை இரண்டு உதாரணங்கள் மூலம் உணரலாம்.
கொடுக்க வேண்டிய கடன் டாலரில் திருப்பி கொடுக்க வேண்டியிருப்பதால், ஒரே மாதத்தில் கடன் தொகை 7% அதிகரித்துள்ளது! ஆண்டிற்கு 84% வட்டி!
Image courtesy : Google Images
70% பெட்ரோல் இறக்குமதி ஆவதால், பெட்ரோல் பொருட்கள் விலை மேலும் மேலும் உயரும். நம் நாட்டில் பெரும்பாலான சரக்குகள் (அந்த 'சரக்கு' உட்பட) பெட்ரோல் பொருட்களால் இயங்கும் வாகனங்கள் மூலம் விற்பனை ஆகும் இடங்களுக்கு எடுத்து செல்வதால் எல்லா பொருட்களுமே 7% உயரும்.
இன்னுமொரு நெருக்கடி குறைந்த காலத்தில் திருப்பிக்கொடுக்கவேண்டிய கடன் மிக அதிகரித்திருக்கிறது. இன்னும் ஒரே வருடத்தில் இந்தியா திருப்பிக்கொடுக்க வேண்டிய கடன் - $172 Billion. கிட்டதட்ட பதினொரு லக்ஷம் கோடி ருபாய் மதிப்பில்! .
Image courtesy : Google Images
திருப்பிக்கொடுக்கவேண்டிய நேரத்தை நீட்டிக்கொள்ளலாம். ஆனால், நாம் இருக்கும் நெருக்கடியான நிலையினால் வட்டி அதிகமாகும்.
நம் கையிருப்பும் மிக குறைந்துள்ளது. ஏற்றுமதி - இறக்குமதி இடையில், இறக்குமதி அதிகமாக இருப்பதால், நம் கையில் உள்ள தொகை ஏழு மாத பற்றாக்குறையை சமாளிக்கும் அளவே உள்ளது.
இது வரை RBI எடுத்த நடவடிக்கை எதுவும் பலனளிக்கவில்லை! 1990-ஆம் ஆண்டு இருந்த நெருக்கடி நிலைக்கு இப்போது வந்திருக்கிறோம்.
அப்போது அதை சமாளிக்க லாப நிலையில் இருந்த பொதுத்துறை நிறுவனகள் ஒன்றொன்றாய் பலி கொடுத்து சமாளிக்க முடிந்தது. இப்போது என்ன செய்யப்போகிறோம்? (BSNL போன்ற பொன் முட்டை இட்ட வாத்துக்களை தனியார் லாபத்திற்காக பலி கொடுத்துவிட்டோம்)
எந்த அளவு இந்த ஆபத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. எல்லோருக்குமே இதன் மூலம் பாதிப்பு இருக்கும்.
Image courtesy : Google Images
இன்னும் தலைவா ரிலீஸ் ஆகவில்லை என்று கவலைப்படும் பலரை பார்த்தால் தான் கவலையாக இருக்கிறது!
Thursday, March 14, 2013
குற்றங்களை குறைக்க எளிய வழி !
கடந்த சில மாதங்களாகவே மீடியாவில் வரும் செய்திகளில் முக்கியமானது பெண்களுக்கு எதிரான குற்றங்கள். கிட்ட தட்ட எல்லா விதங்களிலும் செயலற்றதாக இருக்கும் இந்திய அரசு, இதில் கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம், வேகமாக செயல்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. அதற்கு அரசுக்கு பாராட்டுக்கள்.
அதே நேரம், அதில் உள்ள சில பிரிவுகள் இந்த சட்டத்தை மட்டும் அல்லாது, ஏற்கனவே இருக்கும் சட்டங்களையும் நீர்த்துப்போகுமாறு செயல் படக்கூடியது.
அதில் முதலாவது, இருவரும் ஒத்துக்கொண்டு வைத்துக்கொள்ளும் செக்ஸ் ரேப் ஆகாது. மேலோட்டமாக இது சரியாக தோன்றுகிறது. ஆனால், புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு, அந்த இருவரின் வயதும் பதினாறு இருந்தாலே போதும் என்கிறது! பதினாறு வயதில் என்ன தெளிவு இருக்க முடியும்?
இதற்க்கு விளக்கமளித்த அமைச்சர் கூறியது, கிட்ட தட்ட, இருவரும் மனம் ஒத்து வைத்துக்கொள்ளும் செக்ஸ் தவறே இல்லை, இருவருமே மைனராக இருந்தாலும் கூட என்ற வகையில் இருக்கிறது! இது பற்றிய செய்தி
கண்டிப்பாக குற்றங்களை குறைக்க இது ஒரு வழி. செய்தது குற்றமே இல்லை என்றானபின் குற்றங்கள் குறையுமா இல்லையா?
Tuesday, January 29, 2013
விஸ்வரூபம் - தவறான முன்னுதாரணங்கள்!
விஸ்வரூபம் தடை விலகி படம் வெளிவரும் நேரம். நடந்ததை பார்க்கும்போது பல தவறான முன்னுதாரணங்களை இந்த பட விவகாரம் ஆரம்பித்து வைத்திருக்கிறது.
முதலாவது. படத்தை பார்க்காமல் பல இஸ்லாமிய சமூக சங்கங்கள் இணைந்து இந்த அளவு பெரிதாக எதிர்ப்பை தெரிவித்து படத்தை எங்களுக்கு போட்டு காட்டிவிட்டுத்தான் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதே போல பற்பல சங்கங்கள் வெளிவரும் படங்களுக்கு தடை விதிக்க போராட்டம் நடத்த முன் வரும்..
இரண்டாவது, இந்த போராட்டங்களுக்கு பணிந்து படத்தை முன் கூட்டியே அவர்களுக்கு போட்டுக்காட்டியது. இதுவே போராட்டத்தை வலுப்படுத்திவிட்டது.
மூன்றாவது, தமிழக அரசு தடை விதித்தது. சென்சார் சான்றிதழ் பெற்றபின்னும் அரசு தடை செய்யலாம் என்பது தயாரிப்பாளர்களின் கழுத்து மேல் தொங்கும் கத்தி!
நான்காவது, நீதிமன்றம் 'பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறியது. பொறுப்பை தட்டிக்கழிப்பது போல தோன்றினாலும் அடுத்த நாளே சரி செய்து விட்டார் நீதிபதி.
கொஞ்சநாளுக்கு வரும் படங்களுக்கு எதிரே பல லெட்டர் பேட் சங்கங்கள் போராடும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது!
Wednesday, October 3, 2012
இன்னும்.. இன்னும்.. கீழே..
இதற்கு முன் இன்னும் எவ்வளவு கீழ் தரமாக இறங்கப்போகிறோம் என்று எழுதியிருந்தேன். இன்றைய செய்தியை படித்தால், அதைவிட கீழ்த்தரமாக போக அதிக நாட்கள் ஆகவில்லை என்று தெரிந்து கொண்டேன்.
ராஜாவை பார்லிமென்ட் எனர்ஜி கமிட்டிக்கு மெம்பராகவும் கல்மாடியை பார்லிமென்ட் வெளியுறவு கமிட்டிக்கு மெம்பராகவும் அரசு நியமித்திருக்கிறது. இதில் கல்மாடியை வெளியுறவு கமிட்டிக்கு உறுப்பினறாக்கியதர்க்கு காங்கிரஸின் நகைச்சுவை உணர்வு தான் காரணம் என நினைக்கிறேன். அவர் தானே இந்தியாவின் மானத்தை உலக அளவுக்கு வாங்கியவர்!
குற்றவாளியோ இல்லையோ. அந்த சந்தேகத்தினால் தானே சிறையில் இருந்தார்கள்? மந்திரி பதவியும் போனது? இன்று வரை அந்த வழக்குகள் முடியவில்லை. ஆனால் மறுபடியும் இவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவியை மத்திய அரசு கொடுக்கிறது என்றால் என்ன அர்த்தம்? இன்னும் மூன்று வருடம் தேர்தல் இல்லை. எவன் என்ன நினைத்தால் எனக்கென்ன என்ற திமிர் தானே?
இந்த அளவு மக்களை இளிச்சவாயர்களாக நினைக்கும் அரசை இந்தியா பார்த்ததில்லை. அதே போல, மன்மோகன் போன்ற பசு தோல் போர்த்திய புலியை , நரியை, இதுவரை இந்தியா பார்த்ததில்லை!
Saturday, September 22, 2012
நமக்கெல்லாம் சுரணையே இல்லையா?
நான் முன்னொரு காலத்தில் யூனியன் ஆதிக்கமில்லாத ஒரு அரசு நிறுவனத்தில் பணி புரிந்தபோது கேட்டது. ஒருவர் அந்த நிறுவனத்தின் எச் ஆர் தலைவரை, யூனியன் ஆதிக்கமில்லாததை எப்படி சாதித்தீர்கள் என்று கேட்டாராம். அதற்கு அவர், இளைஞ்சர்கள் வேலைக்கு சேர்ந்த உடனேயே அவர்கள் தலையை தூக்க முடியாத அளவு வேலை கொடுத்து பிசியாக வைத்திருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் நாம் என்ன சொன்னாலும் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விடலாம் என்றாராம்.
இன்று இந்தியாவில் நடப்பதை பார்த்தால் அந்த எச் ஆர் தலைவரின் சூழ்ச்சி போல ஒன்று தான் இந்தியாவின் தற்போதய நிலைமைக்கு காரணம் என்று தோன்றுகிறது!
யோசித்துப்பார்த்தால், கார், பர்னிச்சர் செட் போன்ற சிற்சில விஷயங்கள் தவிர என் அப்பாவின் இப்போதைய என் வயது வாழ்க்கைக்கும் இப்போது என் வாழ்க்கைக்கும் பெரிய அளவு வித்யாசம் இல்லை! இருந்தும், அவருக்கு அப்போது நிறைய நேரம் இருந்தது போலவும் இப்போது எனக்கு இல்லாமல் இருப்பது போலவும் இருக்கிறது. இது எனக்கு மட்டும் பொருந்தவில்லை. என் நண்பர்கள் பலரின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. தினப்படி வாழ்க்கையே ஓட்டமாக இருக்கும்போது எப்படி போராடுவது?
நமக்கு எந்த விதத்திலும் உதவாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரமாகவாவது இல்லாமல் இருக்கக்கூடாதா என்று எரிச்சலூட்டும் அரசியல் வாதிகள். மன்மோகனின் பேச்சை கேட்டீர்களா? இவர்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், மானம் எதுவுமே இருக்காதா? நேர்மையான நிர்வாகமே வளர்ச்சி தரும் என்று கொஞ்சமும் கூசாமல் எப்படி இவரால் சொல்ல முடிகிறது? திருப்பி திருப்பி சொல்லவே அலுப்பு தட்டும் அளவுக்கு ஊழல்கள்!
இவர் ஆட்சியின் சாதனை ஒன்றே ஒன்று தான். ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மறுபடி மறுபடி ஊழல் செய்து, ஆயிரம், லட்சம் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று மக்களை நினைக்க வைப்பது தான்!
அதைவிட பெரிய விஷயம், இது வரை எந்த அரசியல் வாதியும் மாட்டவில்லை! குற்றம் நிரூபணம் ஆகும் வரை குற்றவாளி இல்லை. அவ்வளவு சீக்கிரம் குற்றம் நிரூபணம் ஆக விடமாட்டோம் என்று நடந்து கொள்ளும் அரசு! சி பி ஐ என்பது வாசலில் கட்டி வைத்திருக்கும் நாய் தான். யாரை காட்டுகிறோமோ அவரை பார்த்து குறைக்கும் என்று சொல்லாமல் சொல்லுகிறது அரசு!
இந்த அளவு ஊழல் புகார் வந்தபின்னும், இப்படி மன்மோகனால் சொல்ல முடிகிறது என்றால் அதற்க்கு என்ன காரணம் இருக்க முடியும்? இவர்களெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்கள். இவர்கள் தின பிழைப்பே போராட்டமாக இருக்கும்போது இவர்களா எதிர்த்து ஏதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை தானே?
நமக்கெல்லாம் உண்மையிலேயே சுரணை இல்லையா?
Saturday, September 8, 2012
உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு?
உங்களுக்கு வருஷத்துக்கு எவ்வளவு நாள் லீவு? மொத்தமாக பத்து நாள்? இருபது நாள்? முப்பது நாள்? என்ன படிச்சு என்ன பிரயோஜனம்? இதுக்கு மேல நம்மால யோசிக்கக்கூட முடியலை.
இங்க பாருங்க.. ஒருத்தர் வருஷத்துக்கு இருநூற்று ஐம்பது நாள் சொந்த வேலையா வெளிநாட்டில் தங்கி இருந்திருக்கிறார். மிக அதிகமாக சம்பாதிக்கும் இவர் மந்திரியாகவும் இருக்கிறார்!
யார் அந்த மந்திரி? நம்ப 'கல்வித்தந்தை', 'விழா நடத்தும் நாயகன்' ஜெகத்ரட்சகன் தான்!
இன்றைய தினமலரில்..
Sunday, July 1, 2012
இன்னும் எந்த அளவு கீழ் நோக்கி செல்லப்போகிறோம்?
ஒரு பக்கம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் சங்மா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதா அவர்களிடம் ஆதரவு பெற அவர் வீட்டிற்கு செல்கிறார். மறு பக்கம் அடுத்த ஜனாதிபதி ஆக பெரிய வாய்ப்பு உள்ள பிரணாப் 2G குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ள கனிமொழி வீட்டிலிருந்து ஜனாதிபதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்! (இதில் சட்டப்படி ஒரு தாரத்திற்கு மேல் மணமுடிப்பது குற்றம் என்றிருக்கும்போது கருணாநிதியின் இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து
பிரச்சாரத்தை தொடங்குவது இன்னுமொரு கொடுமை! எதிலும் தன் குடும்பத்திற்கு லாபத்தை எதிர்நோக்கி காய் நகர்த்தும் கருணாநிதி இப்போதெல்லாம் டெல்லியிலிருந்து யார் வந்தாலும் அவர்களை கனிமொழி வீட்டில்தான் சந்திக்கிறார். முதலில் அந்தோனி.. இப்போது இவர்!)
ஜனாதிபதி பதவி என்பது வெறும் பதவி மட்டும் இல்லாமல் முதல் குடிமகன் என்ற மதிப்பையும் கொடுக்கிறது. அதுவும் இல்லாமல், அவர்கள் மேல் குற்றவழக்கு எதையும் தொடரவும் முடியாமல் ஒரு பாதுகாப்பும் கொடுக்கிறது (என அறிகிறேன்.. தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்). யாரையும் மரண தண்டனையிலிருந்து கூட மன்னிக்க உரிமை உள்ள பதவி!
இப்படி இருக்கும்போது இந்த பதவிக்கு வருபவர்மேல் யாருடைய நிழலும் விழாமல் இருப்பது முக்கியம் இல்லையா? குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்களின் நிழல் இவர்கள் மீது விழுந்தால் எந்த வழக்கிலும் அவர்கள் சார்பாக இருக்க நேரிடும் அல்லவா.
நம் ஊரில் தான் conflict of interest என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லையே!
Tuesday, June 26, 2012
இந்திய பொருளாதாரம்.. ஆபத்தான பாதையில்!
இத்தனை நாட்கள் நமது நாட்டில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் அந்நிய முதலீடு குவிந்து வந்தது. அதை வைத்து எந்த ஒரு நல்ல அரசும் செய்ய வேண்டியவை
- நல்ல உள் கட்டமைப்பு
- எல்லோருக்கும் எளிதில் நல்ல குடிநீர்
- எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி
- விளை பொருட்களை கெடாமல் வைத்திருக்க கோல்ட் ஸ்டோரேஜ் வசதிகள்
- பெரும்பான்மையான மக்கள் கண்ணியத்துடன் வாழ வேலை வாய்ப்பு
- எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய நல்ல கல்வி..
இதில் முதல் ஒன்றில் மட்டும் நல்ல முன்னேற்றம். மற்ற எதிலும் கடந்த இருபது வருடங்களில் பெரும்பாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இல்லையேல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் மோசமாக போய்கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில், ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை தடுக்க அரசு செய்வது, மேலும் முதலீட்டை வசீகரிக்க, இது நாள் வரை இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்பு துறையிலும் அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கிறது.
இது மிக ஆபத்தானது. ஆடம்பரத்திற்காக கந்து வட்டி காரனிடம் கடன் வாங்குவது போன்றது! மிக விரைவில் அழிவை தந்துவிடும்.
ஏதாவது அதிசயம் நடந்து இந்த ஆட்சி ஒழிந்து நல்ல ஒரு ஆட்சி வராதா என்று ஏங்குகிறேன்!
ஏதாவது அதிசயம் நடந்து இந்த ஆட்சி ஒழிந்து நல்ல ஒரு ஆட்சி வராதா என்று ஏங்குகிறேன்!
Friday, June 15, 2012
ஏழை மக்கள் உபயோகிக்கும் பெட்ரோலிய பொருள் அதிரடி விலை குறைப்பு!
ஒரு பக்கம் பகல் கொள்ளையாக பெட்ரோலின் மேல் அசலைவிட அதிகமாக வரி வைத்து விற்று விட்டு 'ஒரே நஷ்டம்' என்று பச்சை புளுகு புளுகும் 'படித்த நல்லவர்கள்' ஆளும் இந்த அரசு! இந்த பெட்ரோல் கொள்ளை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்தாலும், வவ்வால் மிக தெளிவாக அவர் பதிவில் விளக்கியிருந்தார்.
அதே நேரம் இந்தியாவில் பரம ஏழைகள் தினமும் உபயோகிக்கும் விமான பயணிகள் வசதிக்காகவும், விஜய் மல்லய்யா, கலாநிதி மாறன் போன்ற 'உத்தம' முதலாளிகள் நலனுக்காகவும் அதிரடியாக 5% Jet Fuel விலையை
இந்த அரசு குறைத்திருக்கிறது.
ஏப்ரல் மாதத்திலிருந்து இது வரை ஐந்து முறை விலை குறைத்திருக்கிறதாம் இந்த அரசு!
இந்த jet fuel மட்டும் என்ன தாவரத்தில் இருந்தா விளைகிறது? முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பெட்ரோலிய பொருள் தானே? அப்போது மட்டும் ரூபாய் மதிப்பு, உலக சந்தையில் விலை உயர்வு போன்ற காரணங்கள் கிடையாதா?
எந்த அளவு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்!
வயறு எரிகிறது! 'படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான்' என்னும் பாரதி வாக்கு உண்மையாக காத்திருக்கிறேன்!
Wednesday, June 6, 2012
அமெரிக்காவில் பெட்ரோல் விலை..
பல்லாயிரக்கணக்கான கோடி 'நஷ்டத்தில்' இருக்கும் பொது துறை பெட்ரோலிய நிறுவனங்களின் 'நஷ்டத்தையும்' பொருட்படுத்தாமல் மக்களை காக்க ஒரு லிட்டருக்கு வெறும் ரூ. 5.50 மட்டுமே கருணையுடன் விலை உயர்த்திய மன்மோகன் (சோனியா) தலைமையிலான அரசின் பார்வைக்கு :
தாங்கள் எப்போதும் உதாரணம் காட்டும் அமெரிக்காவில் பெட்ரோல் அரசு நிறுவனங்களால் சுத்திகரிக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க தனியார் மாத்திரமே செய்கிறார்கள். அரசு பெட்ரோல் விலையில் தலையிடுவதில்லை. எந்த வித 'மான்யங்களும்' கொடுப்பதில்லை. இருந்த போதும், இன்றைய விலை கிட்ட தட்ட லிட்டருக்கு ரூ. 52 மட்டுமே! ஆனால் அமெரிக்காவின் தனி நபர் வருமானத்தில் பத்தில் ஒரு பாகம் தனிநபர் வருமானமாக இருக்கும் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 75 -க்கும் அதிகம்! இது எந்த விதத்தில் சரி?
இந்த முறை விலை ஏற்றியதற்கு நீங்கள் சொன்ன காரணம் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு. உண்மை தான். ருபாய் மதிப்பு கிட்டதட்ட 20% குறைந்திருக்கிறது இந்த மூன்று மாதங்களில்! ஆனால், அதே சமயம், சுத்திகரிக்காத பெட்ரோலின் மதிப்பு பாரல் ஒன்றிற்கு $ 110 -இலிருந்து $ 85 -இற்கு சரிந்திருக்கிறதே. அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் கண்டுகொள்ள வில்லையே! அதுவும், கொள்முதல் விலை குறைந்தது கிட்ட தட்ட அதே 20% !
இருந்தும் விலையை
ஏற்றாமல் சமாளிக்க முடியவில்லை என்றால் நீங்கள் பெரும் பொய்யர் என்று தெரிகிறது!
ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. நீங்கள் பிரதமராக இருக்கும் வரை மக்களுக்கு விடிவு காலமே இல்லை!
Subscribe to:
Posts (Atom)




















