நம்ம ஊர்ல பஸ்ல போகும்போது "பஸ் அரை மணி நேரம் நிக்கும். சாப்படரவங்க சாப்டுட்டு வரலாம்" அப்படின்னு கண்டக்டர் சொல்லும் ஒவ்வொரு முறையும், கலவரமா இருக்கும்.
முதல்ல அங்க இருக்கற 'ஓட்டல்'! சீடை அளவுக்கு மாவு எடுத்து எப்படித்தான் வடை போடுவாங்களோ! அதையும் கூசாம முப்பது ரூபான்னு சொல்லும்போது அதாலியே அடிக்கலாம்னு தோணும்! டீ, காபின்னு பேரை வச்சிருக்கும் கலர் கலர் (மிதமான) சூடான தண்ணி இன்னும் கொடுமை!
அதுக்கு மேல அங்க இருக்கற பாத் ரூமை நினைச்சாவே வயத்த கலக்கும்.. பாத்ரூம் அப்படின்னு பேர் வச்ச சின்ன தடுப்பு சுவர் வச்ச இடத்துக்கு ஒரு நாப்பது அடி முன்னாடியே அதிலிருந்து வரும் வாடை பாத்ரூம் எங்கே இருக்குன்னும் எப்படி இருக்குன்னும் காட்டிடும்! ஆண்கள், உள்ள போய் உபயோகித்தால் எல்லா வியாதியும் வந்துடும்னு அங்கங்கே நகந்துடுவாங்க. பெண்கள் பாடு தான் பாவம்!
முதல் முதல் அமெரிக்காவில் நெடுஞ்சாலை பயணத்தின்போது Rest Area அப்படின்னு போர்டு பார்த்து நிறுத்தினோம். அதில் உள்ள வசதிகள்.. ஆடம்பரம் எதுவும் இல்லை. அத்யாவசியமான எல்லாம் இருந்தது.
அதில் உள்ள வசதிகள்..
--ஆண் , பெண் கழிவறைகள்.. நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு
--காலை நீட்டி உட்கார வசதியான பெஞ்ச்கள்
--சிறிய தூரத்திற்கு நடை பயில 'வாக் வே'
--வேண்டிய சிறு தின்பண்டங்களை வாங்கிக்கொள்ள 'வெண்டிங் மெஷின்'..
சில ஓய்விடங்களில், 'வெண்டிங் மெஷினில்' காபியும் உண்டு.
--அருகில் உள்ள சாலையில் செல்லும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ற மாதிரி பார்கிங் வசதி.
--சாலையின் மேப்
--பப்ளிக் போன்
--சில இடங்களில், சிறுவர் விளையாட சிறிய பூங்கா..
முக்கியமான விஷயம் ..
இவை அனைத்து வாகன பயணிகளுக்கும் இலவசம்! (போன் உபயோகிக்க , வெண்டிங் மெஷினில் வாங்க காசு கொடுக்க வேண்டும், of course!)
இரண்டாவது, எந்த வித வியாபாரிகளுக்கும் / கடைகளுக்கும் அனுமதி இல்லை.
கிட்ட தட்ட, ஒவ்வொரு மணி நேர பயணத்திற்கு ஒரு முறை உபயோகிக்க கூடிய தூரத்தில் அமைத்திருக்கிறார்கள். (சில சாலைகளில் இல்லாமல் இருக்கலாம். நான் பார்த்த இடங்களில் இருந்தது!)
நீண்ட தூரம் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற இடங்கள் வரப்ரசாதம்!
நம் ஊரில் எப்போ இது போன்ற வசதி வரும் என்று நான் அடிக்கடி எங்கும் வசதி இது!
அது போன்ற ஒரு ஓய்விடத்தின் புகைப்படம் இதோ..
11 comments:
அருமை
இங்க கொடுமையோ கொடுமைங்க... அமெரிக்காவ பாரு ஜப்பான பாருனு நம்ம ஊரு ஆளுங்களூக்கு என்ன சொன்னாலும் , நம்ம பாரம்பரியத்த மாத்தாம கொள்ளையடிப்பதே கொள்கை என வாழறாங்க.. அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே...கரெக்கிட்டாங்கோ.?
வருகைக்கு நன்றி, ராம்ஜி..
வருகைக்கு நன்றி சித்திரவேல்-சித்திரன்.. நீங்கள் சொல்வது உண்மை..நம் ஊரில் எப்போது பார்த்தாலும் வயறு எரியும் விஷயம் இது!
பாரிஸ் நெடும் சாலைகளிலும் இதே போன்ற அமைப்புக்கள் உள்ளன; இவர்களின் திட்டமிடலும், செயற்படுத்தும் விதமும் மிகவும் பாரட்ட தக்கதாகவும் உபயோகமானதகவும் இருக்கிறது;
வருகைக்கு நன்றி, சாய் பிரசாத்..
banthu உங்கள் போஸ்ட் அனைத்தும் அருமை ... Email மூலம் மட்டுமல்லாமல் google friend connect மூலமாகவும் உங்களை follow பண்ணுவதற்கு வழி செய்தால் அருமையாக இருக்கும் ....
நன்றி ஹரி பாண்டி.. கட்டாயம் செய்கிறேன்.
இப்படிப்பட்ட வசதி இருந்தாலும் ட்ரைவர், கண்டக்டருக்கு இலவச
டிபன் தரவில்லையென்றால் உள்ளே
செல்ல மாட்டார்கள். சி.ஐ.டி.யு சங்கத் தோழர்களிடம் இது குறித்து விமரிசித்து உள்ளேன். இரண்டு பணிகளிலும் சங்கத் தோழர்கள் இருந்தால் தவிர்க்க முடியும். ஆனால் பெரும்பாலும் அப்படி அமைவதில்லை என்ற பதிலே கிடைத்தது. பணிக்கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது ஒரு தொழிற்சங்கத்தின் கடமை. இடதுசாரி சங்கங்கள் இப்போதுதான் தயக்கத்தை உடைத்து பேசத் தொடங்கியுள்ளனர்.
மற்ற அமைப்புக்களுக்கோ சங்கம் என்பது வெறும் தொழில் என்றாகி விட்டது.
வருகைக்கு நன்றி ராமன் சார்..
இப்போதைக்கு நான்கு வழிச்சாலை ஓரங்களில் அமைந்துள்ள தனியார் ஓட்டல்கள் பல தரமான வகையில் அமைந்துள்ளன. மெதுவாக முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறோம்.
Post a Comment