Wednesday, June 6, 2012

அமெரிக்காவில் பெட்ரோல் விலை..







பல்லாயிரக்கணக்கான கோடி 'நஷ்டத்தில்' இருக்கும் பொது துறை பெட்ரோலிய நிறுவனங்களின் 'நஷ்டத்தையும்' பொருட்படுத்தாமல் மக்களை காக்க ஒரு லிட்டருக்கு வெறும் ரூ.  5.50 மட்டுமே கருணையுடன் விலை உயர்த்திய மன்மோகன் (சோனியா) தலைமையிலான அரசின் பார்வைக்கு :

தாங்கள் எப்போதும் உதாரணம் காட்டும் அமெரிக்காவில் பெட்ரோல் அரசு நிறுவனங்களால் சுத்திகரிக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க தனியார் மாத்திரமே செய்கிறார்கள். அரசு பெட்ரோல் விலையில் தலையிடுவதில்லை. எந்த வித 'மான்யங்களும்' கொடுப்பதில்லை. இருந்த போதும், இன்றைய விலை கிட்ட தட்ட லிட்டருக்கு  ரூ. 52 மட்டுமே! ஆனால் அமெரிக்காவின் தனி நபர் வருமானத்தில் பத்தில் ஒரு பாகம் தனிநபர் வருமானமாக இருக்கும் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 75 -க்கும் அதிகம்! இது எந்த விதத்தில் சரி?

இந்த முறை விலை ஏற்றியதற்கு நீங்கள் சொன்ன காரணம் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு. உண்மை தான். ருபாய் மதிப்பு கிட்டதட்ட 20% குறைந்திருக்கிறது  இந்த மூன்று மாதங்களில்! ஆனால், அதே சமயம், சுத்திகரிக்காத பெட்ரோலின் மதிப்பு பாரல் ஒன்றிற்கு  $ 110 -இலிருந்து $ 85 -இற்கு சரிந்திருக்கிறதே.  அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் கண்டுகொள்ள வில்லையே! அதுவும், கொள்முதல் விலை குறைந்தது கிட்ட தட்ட அதே 20% !
இருந்தும் விலையை  ஏற்றாமல் சமாளிக்க முடியவில்லை   என்றால் நீங்கள்   பெரும் பொய்யர் என்று தெரிகிறது!

ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. நீங்கள் பிரதமராக இருக்கும் வரை மக்களுக்கு விடிவு காலமே இல்லை!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Avargal Unmaigal said...

என்ன சார் நான் எழுத வைத்திருந்த டாபிக்கை நீங்கள் முந்தி கொண்டு பதிவிட்டுள்ளிர்கள்.நீங்கள் எழுதி இருப்பது உண்மைதான் சார்

bandhu said...

வருகைக்கு நன்றி, அவர்கள் உண்மைகள்.. ரொம்ப நாளாக ஒன்றும் எழுதவில்லை. நேற்று காஸ் போடும்போது தோன்றியது.. அது தான்..

Anonymous said...

ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. நீங்கள் பிரதமராக இருக்கும் வரை மக்களுக்கு விடிவு காலமே இல்லை!//

என்னை விட மோசமாக அவரை திட்டுகிறீர்கள்..-:)

bandhu said...

உண்மை தான் ரெவெரி.. எவ்வளவு முடியுமோ நாட்டை அவ்வளவு குட்டிச்சுவராக்குகிறார் இவர். - ஒரு அப்பழுக்கில்லாத நேர்மையாளர் என்ற போர்வையில்!