Friday, January 7, 2011

காங்கிரஸ்ஸின் U Turn!





இதற்க்கு முன் காங்கிரஸ்ஸின் திட்டம் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் காங்கிரஸ் தி மு க வை ஒழிக்க முனைந்திருப்பதாக எழுதியிருந்தேன். 

இன்றைய செய்திகளை பார்த்தால் காங்கிரஸ் அந்த எண்ணத்திலிருந்து விலகி உள்ளது போல் தோன்றுகிறது. முதல் முறையாக கபில் சிபல் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று முழு பூசணியை மறைக்கும் வேலையில் ஈடு பட்டிருக்கிறார். 

கொஞ்சம் யோசித்தால், டி ஆர் பாலு சோனியாவை சந்தித்ததற்கும் இதற்கும் உள்ள சம்பந்தம் விளங்கும். தி மு க வை பொறுத்தவரை எப்பாடு பட்டாவது மறுபடி ஆட்சிக்கு வந்து விட்டால் முதலமைச்சர் நாற்காலியை கருணாநிதி தன் மகனுக்கு (எந்த மகன்?) தாரை வார்த்து கொடுத்து விடுவார் (ஜன நாயகம்!). இதற்காக எந்த அளவுக்கும் தாழ்ந்து போக தி மு க தயங்காது. இப்போது கருணா நிதிக்கு வயது 87. இதற்க்கு மேல் பதவி இல்லாமல் கட்சியை உடையாமல் நடத்துவது கஷ்டம். எல்லோரும் அவரை சார்ந்து இருப்பது பதவிக்கு மட்டுமே என்பது எல்லோருக்கும் தெரியும். 
ஆதாயம் இல்லாமல் வெறும் வாய் ஜாலத்தில் மயங்கி இருந்த கட்ச்சிக்காரர்கள் காலம் முடிந்தது. 

காங்கிரஸ் ஐ பொறுத்தவரை தனியே நின்று ஜெயிக்க துப்பில்லை. இப்போது கருணாநிதி நிலைமையில் என்ன சொன்னாலும் செய்வார். அதனால் கிடைத்தவரை லாபம் என்ற அவருடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பது. அவருக்கு பிறகு வருவதை அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இந்த முடிவு என்று நினைக்கிறேன்.

தை பிறந்தால் இந்த நிலையில் மாற்றம் இருக்கலாம். எதையும் எப்போது வேண்டுமானாலும் செய்ய துணிந்த அழகிரி எதையாவது செய்தால் காட்சி மாறலாம்!

cartoon :- belongs to the creator of the cartoon. thanks to the artist and google images!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

aahaa super!!!!

ரிஷபன் said...

முன்பு காங்கிரஸ் என்றாலே ஒரு மரியாதை இருந்தது. பிறகு அவர்களின் கோஷ்டி சண்டையில் எல்லாம் தொலைந்தது. இப்போது யார் முதுகிலாவது சவாரி என்ற நிலை உண்டானதற்குக் காரணமே அவர்களேதான்.

bandhu said...

வருகைக்கு நன்றி, ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சார்!

bandhu said...

ரிஷபன்..முக்கியமாக, தன்னை தவிர வேறு யாரையும் காங்கிரஸ் தலைமை நம்பாததால், மத்தியில் தான் ஆட்சியில் இருந்தால் போதும். மாநிலங்களில் யாரவது ஆதரவு கொடுத்தாலே போதும். முக்கியமாக மாநிலங்களில் கூட பெரிய காங்கிரஸ் தலைவரை வளர விட கூடாது என்றே நினைப்பதால் தான் இந்த நிலைமை என்று நினைக்கிறேன்!