Thursday, April 25, 2013

கடவுள்!



ஒரு தாயின் வயிற்றில் 8 மாதம் வளர்ந்த இரு குழந்தைகள் இருந்தன. ஓரளவு வளர்ந்து விட்டதால் இருவருக்கும் இடம் பற்றாக்குறை! நிறையநாள் இங்கேயே இருக்கமுடியாது என்பது இருவருக்குமே தெரிந்து விட்டது. 

முதல் குழந்தை : "எப்படியும் நாம் கொஞ்ச நாட்களில் இங்கிருந்து  சென்றுவிடுவோம். இங்கிருந்து சென்ற பிறகு கூட இதுவரை இருந்தது போல வாழ்க்கை என்று ஒன்று இருக்கும் என நம்புகிறாயா?"


இரண்டாவது : கண்டிப்பாக. இதற்க்கு வெளியேயும் கண்டிப்பாக ஏதாவது இருக்க வேண்டும். எனக்கென்னமோ நாம் வெளியே சென்ற பிறகு நன்றாக இருக்கவேண்டும் என்று ப்ரிபேர் பண்ணிக்கொள்வதர்க்கே இங்கிருக்கிறோம் என்று தோன்றுகிறது!"

முதலாவது : "முட்டாள்! இங்கிருந்து போனபின்னால் வாழ்க்கை கிடையாது. அப்படி ஒன்றிருந்தால் அது எப்படி இருக்கும் என்று சொல் பார்ப்போம்?"

இரண்டாவது : "எனக்குத்தெரியாது. ஆனால் இங்கிருப்பதை விட கண்டிப்பாக வெளிச்சமாக இருக்கக்கூடும். யாருக்குத் தெரியும்? நாம் கால்களால் நடப்போமோ.. வாயில் உணவு உண்ணுவோமோ என்னவோ?"

முதலாவது : "நீ சொல்வது சுத்த பைத்தியக்காரத்தனம்.. கால்களால் நடப்பதாவது.. வாயால் உணவு உண்பதாவது.. நமக்கு உணவு வரும் குழாய் (Umbilical cord ) இருக்கிறது. என்ன.. ரொம்ப சின்னதாக இருக்கிறது. அதனால் தான் வெளியே போனபின் வாழ்க்கை இல்லை என்கிறேன்!"

இரண்டாவது : "எனக்கு என்னமோ வெளியே வேறு இடம் இருக்கும் என்று தோன்றுகிறது. அது நாம் இருக்கும் இடத்தை விட மிக வித்யாசமாக இருக்கும் எனவும் நினைக்கிறேன்."

முதலாவது : "நீ சொல்வது தவறு. முடிந்த வரை இங்கேயே இருப்போம். வெளியே போனால் அவ்வளவுதான்!"

இரண்டாவது : "ஒன்று நிச்சயம். வெளியே போனவுடன் நாம் அம்மாவை பார்ப்போம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்."

முதலாவது : "அம்மாவா? நீ அம்மா இருக்கிறார் என்பதை நம்புகிறாயா? எங்கே இருக்கிறார் அம்மா?"

இரண்டாவது : "அம்மா நம்மை சுற்றி எல்லா எடத்திலும் இருக்கிறார். அம்மாவின் உள்ளே தான் நாம் இருக்கிறோம். அம்மா இல்லாவிட்டால் நமது உலகமே இருக்காது."

முதலாவது : "என் கண்ணுக்கு அம்மா தெரியவில்லை. அதனால் அம்மா இருக்கிறார் என்று நம்ப மாட்டேன்."

இரண்டாவது : "கொஞ்ச நேரம் அமைதியாக எதைபற்றியும் சிந்திக்காமல் கேள். அம்மாவை உன்னால் உணரமுடியும்"

முதலாவது அமைதியாக எதையும் சிந்திக்காமல் கேட்கத்தொடங்கியது... 

thanks to my friend, Sandy, for sharing this in her Facebook wall.
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Avargal Unmaigal said...

நல்லதொரு பகிர்வு அருமை..இதைவிட யாரு பெரிதாக விளக்கிவிடமுடியும்

bandhu said...

வருகைக்கு நன்றி, அவர்கள் உண்மைகள். தவறாமல் வந்து உற்சாகப்படுத்துகிறீர்கள். நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனை... சிறப்பான உரையாடல் அருமை...

வாழ்த்துக்கள்...

bandhu said...

வருகைக்கு நன்றி, தனபாலன்.

பால கணேஷ் said...

சூப்பர்ப் பந்து! நூறு பக்க புத்தகம் விளக்காத கருத்தை அழுத்தம் திருத்தமாய் இந்தப் பதிவின் மூலம் ‘நச்’சென்று ஆணியடித்த மாதிரி உரைத்து விட்டீர்கள்! மிகமிக ரசித்தேன்!

bandhu said...

நன்றி பால கணேஷ் சார்.

அப்பாதுரை said...

senseless சுவாரசியம்.