கொஞ்சம் பழைய செய்தி தான். இருந்தாலும் இப்போது பார்த்தாலும் வயறு எரிகிறது. யார் கிட்டயாவது சொல்லி புலம்பணும்னு தான் இந்த பதிவு! Sixth Agriwatch Global Pulse Summit இல் இந்த பிரகஸ்பதி சொன்ன யோசனை தான் அது.
"பருப்பு வகைகள் நம் விவசாயிகள் வளர்ப்பது நம் தேவைக்கு போதவில்லை என்றால் அயல்நாட்டு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அதில் பருப்பு விளைவித்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும்" இது தான் அன்னார் திருவாய் மலர்ந்திருக்கும் முத்து.
நம் நாட்டில் விவசாயிக்கு எந்த அளவு இந்த அரசு பாதுகாப்பு கொடுக்கிறது என்பது ஊரறிந்த விஷயம். நம் நாட்டில் விளையும் சக்கரைக்கு குறைந்த விலை கொடுத்து வாங்காமல் அயல் நாட்டிலிருந்து அதிக விலை கொடுத்து சக்கரை இறக்குமதி செய்கிறது இந்த அரசு. கடந்த ஐந்து வருடங்களில் ஒரு லட்ச்சத்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் கடன் தொல்லை தாங்காமல். விவசாயிகள் எதிர்த்தபோதும் BT விதிகளை அறிமுகப்படுத்தியதே இவர்தான்!
உள்ளூர் விவசாயிகளை உள்ளூரில் கஷ்டப்படுத்துவது போதாது என்று இப்போது வெளிநாட்டிலும் அதை செய்ய இவர் தயாராகிவிட்டார் போலுள்ளது!
இது போன்ற உதவாக்கரை மந்திரிகளை (அடுத்த தேர்தலுக்குள்) பதவியிலிருந்து தூக்கி எறிய மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையே, அது ஏன்?
2 comments:
//இது போன்ற உதவாக்கரை மந்திரிகளை (அடுத்த தேர்தலுக்குள்) பதவியிலிருந்து தூக்கி எறிய மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையே, அது ஏன்?//
அதுதான் உலகின் மிகப் பெரிய குடியரசின் சாப்க்கேடு! இவ்ற்றையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!
வருகைக்கு நன்றி, சென்னை பித்தன் சார்!
Post a Comment