கருணாநிதியின் சமாளிப்புகள் பெரும்பாலும் மூன்று வகை.
ஒன்று. மற்றவர்கள் மட்டும் ஒழுங்கா? அவர்களும் இதே லட்சணம் தான் என்பது ஒன்று. விலை வாசி புள்ளி விவரம் சொன்னால், மற்ற மாநிலங்களில் தனக்கு சாதகமானவற்றை சொல்வதும் இதில் சேர்த்தி!
இரண்டாவது. இதற்கெல்லாம் காரணம் ஆரியர் என்பது! அது எதுவானாலும்.
மூன்றாவது. கேள்வி கேட்டவரை சந்தேகத்துக்கு உள்ளாக்குவது!
இன்றைய கேள்வியும் நானே பதிலும் நானேவில் முதல் வகை சமாளிப்பிற்கு சாம்பிள்கள் சில..
இலவசங்கள் என்ற பெயரில் 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டி வரும், தி.மு.க., அரசு மக்களை கடனில் மூழ்கடித்துள்ளது என்று தா.பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?
இந்த ஆண்டு கூட மேற்குவங்க அரசு வாங்கியுள்ள கடன் தொகை 16 ஆயிரத்து 260 கோடி ரூபாய். தமிழ்நாடு பெற்ற கடன் 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய். இதிலிருந்து எந்த மாநில கடன் சுமையை மக்கள் தலையிலே ஏற்றி உள்ளது என்பதை பாண்டியன் நடுநிலையோடு கூறுவாரா? கடந்த 2001, 2002ம் ஆண்டில் எனது தலைமையிலான, அரசு விட்டுச் சென்ற கடந்த 32 ஆயிரம் கோடி ரூபாய். அந்தக் கடன் 2005, 2006ம் ஆண்டு இறுதியில் அ.தி.மு.க., ஆட்சி பதவியில் இருந்து நீக்குகின்ற காலக் கட்டத்தில் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி? இலவசங்கள் வழங்காத ஜெயலலிதா ஆட்சியிலே கடனே வாங்கவில்லையா? அந்தக் கட்சியோடு கூட்டணி சேர தா.பாண்டியன் சென்றிருப்பது எந்த அடிப்படையிலே நியாயம்? நியாயத்தைப் பாண்டியனிடம் கேட்க முடியுமா?
வழக்கம் போலத்தான்! அவர்களும் கடன் வாங்கினார்கள். நானும் வாங்கினேன். என்ன தவறு?
* மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று ஹெலிகாப்டரிலேயே திரும்பியிருக்கிறாரே?
தமிழகத்திலே இது வரை பல மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் அ.தி.மு.க., ஆட்சி நடை பெற்ற காலத்திலும் கூட கொல்லப்பட்டுள்ளனர். உதாரணமாக 1991, 1996ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சி நடை பெற்ற போது 38 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதில் எந்த ஒரு மீனவர் வீட்டுக்காவது, ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வேண்டாம், ரயிலிலோ, காரிலோ சென்று இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுண்டா? அப்போதெல்லாம் போகாமல், இன்னும் மூன்று மாதத்தில் தேர்தல் வருகிறது என்றதும், நாகப்பட்டினத்திற்குச் சென்று ஆறுதல் கூறுகிறார் என்றால் அது உண்மையிலே பாசமா? வேஷமா? ஆறுதல் கூறப் போன இடத்திலே கூட தான் ஆட்சிக்கு வர மீனவர்கள் ஓட்டு அளிக்க வேண்டுமென்று தான் ஜெயலலிதா கோரிக்கை வைத்திருக்கிறார்.
திருமண விழாக்களில் அரசியல் மட்டுமே பேசுவதும் எந்த முறையில் சேர்த்தியோ!
6 comments:
தொடர்ந்து 2 நாட்கள் எந்த பத்திரிகையும் அவரை சீண்ட வில்லையென்றால் இப்படித்தான் இரவு 7 மணிக்கு தானே கேட்டுக் கொண்ட 'கேள்வி-பதில்' FAX-ல் வரும். இதில் ஒரு கூத்து என்னவென்றால்....எந்த பத்திரிகையில் எப்போது 'சிட்டி பேஜ் குளோஸ்' செய்வார்கள் என்பது அவருக்கு அத்துப்படி.
பதிவு அருமை நண்பா!
எப்படித்தான் இப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம?..
வருகைக்கு நன்றி தோழரே!
good one
// எப்படித்தான் இப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம?.. //
மானமிகு தலைவர் ஆயிற்றே !
அதுசரி, வெட்கமும் மானமும் நம் போன்றவர்களுக்குதான். மாண்பு மிக்க அரசியல் வாதிகளுக்கு இல்லை. இருந்திருந்தால் இந்த வயதிலும், உடல் நிலையிலும் இன்னமும் பதவி சுகம் அனுபவித்துக்கொண்டு இருப்பாரா? இவரைபோன்றவர்களை பெற்றதற்கு நாமல்லவா வெட்கபடவேண்டும்.
வருகைக்கு நன்றி, கக்கு-மாணிக்கம்,
உண்மைதான். நாம் வெட்கப்பட வேண்டும்!
வருகைக்கு நன்றி, சமுத்ரா!
Post a Comment