முதல்வரின் இன்றைய அறிவிப்பினால் தமிழகத்தில் எதிர்பாராத திருப்பங்கள் நடை பெற்றுள்ளன. ஆகாயத்தையும் தாண்டுமோ என்று எல்லோரும் நினைத்த விலைவாசி இந்த அறிவிப்பினால் பெரும் சரிவை சந்திக்க உள்ளது.
தெருவெங்கும் இருக்கும் டாஸ்மார்க்கினால் மக்கள் கெட்டழியும் நிலையும் எழும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் இந்த அறிவிப்பின் மூலம் பெரும் மாற்றம் காணும் என்பது உறுதி.
அகில இந்தியாவே பெட்ரோல் விலை உயர்வை சந்திக்க முடியாமல் முழிக்கும்போது முதல்வரின் இந்த அறிவிப்பு இதற்க்கு ஒரு தீர்வு காண்கிறது. பெட்ரோல் விலை குறையும் என்பதால் எல்லா பொருட்களின் விலையும் குறையும் வாய்ப்புள்ளது.
பத்தாம் வகுப்பு வரை தேர்வு இல்லை என்பதால் மாணவர்களிடையே பெரும் சரிவை சந்தித்திருக்கும் கற்கும் ஆர்வம், இந்த அறிவிப்பின் மூலம் தீர்வு சொல்லியிருக்கிறார் முதல்வர். சமீபத்தில் ஒரு பதிவர் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத படிக்க கூட தெரியவில்லை என்று ஒரு பதிவு எழுதியிருந்தார்.
தினம் ஒரு இலவசம் என்று எதிர்பார்த்து மக்கள் வாழும் சுயமரியாதையும் உழைக்கும் ஆர்வமும் அற்ற சமுதாயத்திற்கு இந்த அறிவிப்பின் மூலம் தீர்வளித்திருக்கிறார் முதல்வர்.
கிட்ட தட்ட ஆயிரம் விவசாயிகள் கடந்த சில வருடங்களில் தற்கொலை செய்து கொண்ட துயரம் இந்த அறிவிப்பினால் முடிவிற்கு வந்திருக்கிறது.
ரேஷனில் கிடைக்கும் அரிசியை விட கட்டடம் கட்ட தேவையான மணல் அதிக விலை விற்கும் அதனால் கட்ட தொழிலினால் பாதிப்படைவது இதனால் முடிவிற்கு வரக்கூடும்.
தமிழ் நாடெங்கும் விவசாய நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரியல் எஸ்டேட் பிளாட்டக மாறுவதும், தினம் அதிகரிக்கும் சாலை போக்குவரத்தும், என், ஈழ தமிழர்களின் அல்லல் கூட இந்த அறிவிப்பினால் மாறலாம்.
அப்படி என்ன அறிவிப்பு என்கிறீர்களா?
எவ்வளவோ பிரச்சனைகளால் மக்கள் அன்றாடம் அவதிப்படும்போது முதல்வரின் இந்த 'பொறுப்பான' அறிவிப்பு எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விடும் தானே?
5 comments:
நானும் என்னவோ என்று பதறி அடித்துக்கொண்டு படித்தேன்.
.
.
..பெயர் வைப்பது ரொம்ப முக்கியம்.
உங்கள் நடை சூப்பர்.
malgudi, வீணான பரபரப்பு கொடுத்ததற்கு மன்னிக்கவும். தீர்க்க வேண்டிய எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது இது போன்ற வெட்டி அறிவிப்புகள் ஏற்படுத்திய ஆற்றாமையே இந்த பதிவு. வரவிற்கு நன்றி.
இன்னும் பெயர்வைத்தபாடில்லை என்று நினைக்கிறேன்...வைத்திருந்தால் இதற்குள் பேனரில் வந்திருக்குமே...
நீங்கள் ஒரு பெயர் சஜெஸ்ட் பண்ணுங்களேன்...
வருகைக்கு நன்றி, கோமா..
Aani ஆணீ புடுங்குனது வரை போதும்னு தான் தாத்தாவை வீட்டுக்கு அனுப்பிட்டோம்.
Post a Comment