எவ்வளவு நாள் ஒரே பொய்யை சொன்னால் அது உண்மையாகும்?
இங்கு முரளி தியோரா சொல்வது இந்தியாவின் பெட்ரோல் கம்பனிகள் நிறைய நஷ்டத்தை அடைவதால் பெட்ரோல் விலை உயர்வை தவிர வேறு வழியில்லை! எத்தனையோ முறை - வினவு மற்றும் பலர், ஏன் நான் கூட - பெட்ரோல் விலையில் பாதிக்கு மேல் அரசு விதிக்கும் வரிதான் என்று சுட்டி காட்டிய பிறகும், அரசுக்கு சொந்தமான இந்த கம்பனிகள் நஷ்டமடைகிறது என்று சொல்வது ஜமக்காளத்தில் வடி கட்டிய பொய்!
ஒரு கையில் அரசு வரி விதித்து விலையை உயர்த்திவிட்டு, வரி போக அந்த நிறுவனங்களுக்கு போகும் வருமானம் கம்மி. அதனால் மேலும் விலையை உயர்த்துகிறோம் என்று அறிவிக்கிறார்?
இது போன்ற அண்ட புளுகு மந்திரிகளை என்ன செய்யலாம்?
2 comments:
ரோடுகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையைப்பார்க்கும்போது பெட்ரோல் விலை உயர்வு யaாரையுமே பாத்தித்த மாதிரி தெரியலியே.இப்படி ஜனங்களிருந்தால் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு மந்திரிகளுக்கு கொண்டாட்டம் தானே.
அது தான் எனக்கும் பெரிய ஆச்சர்யம். எப்போ தான் வரும் சுரணை எல்லாருக்கும்?
Post a Comment