இன்றைய தினமலரில் படித்தது.
நிதியமைச்சர் அன்பழகன்: விலைவாசி உயர்வுக்கு பாலபாரதி வேதனை தெரிவித்தார். விலைவாசி உயர்வுக்காக, நானும் ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கிறேன். எந்த சூழ்ச்சியால் இந்த விலை உயர்ந்துள்ளது; எந்த முதலாளித்துவத்தை ஒழித்தால் காய்கறி விலை குறையும்; எப்படி வெங்காய விலை இறங்கும் என்று சொன்னால், விலை உயர்வை கட்டுப்படுத்த உதவியாய் இருக்கும். விலைவாசி உயர்வு மார்க்சிஸ் டுகளுக்கு மட்டும் ஏற்படவில்லை. எங்களுக்கும், காங்கிரசுக்கும் கூட விலை உயர்ந்துள்ளது. இதற்கு தீர்வு என்ன என்று சொன்னால், விலைவாசியை குறைக்க அடிப்படை கொள்கை கிடைக்கும்.
அப்போது இத்தனை நாள் இது கூட தெரியாமல் தான் நிதி அமைச்சராக இருக்கிறீர்களா? ஐந்து முறை ஆட்சியில் இருந்துவிட்டு இப்போது தான் அடிப்படை கொள்கையை தேடுகிறார் போல!
வேதனை வேறு தெரிவிக்கிறாராம்! இவர் நிதி அமைச்சராக இருப்பதற்கு நாம் தான் வேதனை தெரிவிக்க வேண்டும்!
விலைவாசி உயர்வு: சட்டசபை கேன்டீனில் தக்காளி சட்னி "கட்"
இதற்கு கமென்ட் தேவையில்லை என்று நினைக்கிறேன்!
வருமானம் கூடும் போது விலைவாசி கூடுவது இயற்கை : அமைச்சர் பொன்முடி புது விளக்கம்
விளக்கம் இருக்கட்டும். எவ்வளவு விலை வெளியில் ஏறினாலும் சட்டசபை மற்றும் பார்லிமென்ட் காண்டீனில் மட்டும் அதே விலைக்கு எல்லாம் விற்க்கபடுகிறதே, அதை மக்களும் எதிர்பார்த்தால் தப்பா?
""இந்த ஆண்டுக்குள் இரண்டு லட்சம் விவசாய மோட்டார்களுக்கு கண்டிப்பாக மின் இணைப்புகள் வழங்கப்படும்,'' என்று, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதி அளித்தார்.
ஆனால் அவற்றுக்கு தடையின்றி மின்சாரமும் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்!
disclaimer : logo and news - property of dinamalar
1 comment:
வருகைக்கு நன்றி, ராதா கிருஷ்ணன்!
Post a Comment