Tuesday, June 26, 2012

இந்திய பொருளாதாரம்.. ஆபத்தான பாதையில்!



இத்தனை நாட்கள் நமது நாட்டில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் அந்நிய முதலீடு குவிந்து வந்தது. அதை வைத்து எந்த ஒரு நல்ல அரசும் செய்ய
 வேண்டியவை

  • நல்ல உள் கட்டமைப்பு
  • எல்லோருக்கும் எளிதில் நல்ல குடிநீர்
  • எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி
  • விளை பொருட்களை கெடாமல் வைத்திருக்க கோல்ட் ஸ்டோரேஜ் வசதிகள் 
  • பெரும்பான்மையான மக்கள் கண்ணியத்துடன் வாழ வேலை வாய்ப்பு 
  • எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய நல்ல கல்வி..

இதில் முதல் ஒன்றில் மட்டும் நல்ல முன்னேற்றம். மற்ற எதிலும் கடந்த இருபது வருடங்களில் பெரும்பாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இல்லையேல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் மோசமாக போய்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில், ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை தடுக்க அரசு செய்வது, மேலும் முதலீட்டை வசீகரிக்க, இது நாள் வரை இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்பு துறையிலும் அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கிறது.

இது மிக ஆபத்தானது. ஆடம்பரத்திற்காக கந்து வட்டி காரனிடம் கடன் வாங்குவது போன்றது! மிக விரைவில் அழிவை தந்துவிடும்.

ஏதாவது அதிசயம் நடந்து இந்த ஆட்சி ஒழிந்து நல்ல ஒரு ஆட்சி வராதா என்று ஏங்குகிறேன்!

Friday, June 15, 2012

ஏழை மக்கள் உபயோகிக்கும் பெட்ரோலிய பொருள் அதிரடி விலை குறைப்பு!




ஒரு பக்கம் பகல் கொள்ளையாக பெட்ரோலின் மேல் அசலைவிட அதிகமாக வரி வைத்து விற்று விட்டு 'ஒரே நஷ்டம்' என்று பச்சை புளுகு புளுகும் 'படித்த நல்லவர்கள்' ஆளும் இந்த அரசு! இந்த பெட்ரோல் கொள்ளை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்தாலும், வவ்வால் மிக தெளிவாக அவர் பதிவில் விளக்கியிருந்தார். 

அதே நேரம் இந்தியாவில் பரம ஏழைகள் தினமும் உபயோகிக்கும் விமான பயணிகள் வசதிக்காகவும், விஜய் மல்லய்யா, கலாநிதி மாறன் போன்ற 'உத்தம' முதலாளிகள் நலனுக்காகவும் அதிரடியாக 5% Jet Fuel விலையை 
இந்த அரசு குறைத்திருக்கிறது.  ஏப்ரல்   மாதத்திலிருந்து இது வரை ஐந்து முறை விலை குறைத்திருக்கிறதாம் இந்த அரசு! 

இந்த jet fuel மட்டும் என்ன தாவரத்தில் இருந்தா விளைகிறது? முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பெட்ரோலிய பொருள் தானே? அப்போது மட்டும் ரூபாய் மதிப்பு, உலக சந்தையில் விலை உயர்வு போன்ற காரணங்கள் கிடையாதா? 

எந்த அளவு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்!  

வயறு எரிகிறது!  'படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான்' என்னும் பாரதி வாக்கு உண்மையாக காத்திருக்கிறேன்!


Wednesday, June 6, 2012

அமெரிக்காவில் பெட்ரோல் விலை..







பல்லாயிரக்கணக்கான கோடி 'நஷ்டத்தில்' இருக்கும் பொது துறை பெட்ரோலிய நிறுவனங்களின் 'நஷ்டத்தையும்' பொருட்படுத்தாமல் மக்களை காக்க ஒரு லிட்டருக்கு வெறும் ரூ.  5.50 மட்டுமே கருணையுடன் விலை உயர்த்திய மன்மோகன் (சோனியா) தலைமையிலான அரசின் பார்வைக்கு :

தாங்கள் எப்போதும் உதாரணம் காட்டும் அமெரிக்காவில் பெட்ரோல் அரசு நிறுவனங்களால் சுத்திகரிக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க தனியார் மாத்திரமே செய்கிறார்கள். அரசு பெட்ரோல் விலையில் தலையிடுவதில்லை. எந்த வித 'மான்யங்களும்' கொடுப்பதில்லை. இருந்த போதும், இன்றைய விலை கிட்ட தட்ட லிட்டருக்கு  ரூ. 52 மட்டுமே! ஆனால் அமெரிக்காவின் தனி நபர் வருமானத்தில் பத்தில் ஒரு பாகம் தனிநபர் வருமானமாக இருக்கும் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 75 -க்கும் அதிகம்! இது எந்த விதத்தில் சரி?

இந்த முறை விலை ஏற்றியதற்கு நீங்கள் சொன்ன காரணம் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு. உண்மை தான். ருபாய் மதிப்பு கிட்டதட்ட 20% குறைந்திருக்கிறது  இந்த மூன்று மாதங்களில்! ஆனால், அதே சமயம், சுத்திகரிக்காத பெட்ரோலின் மதிப்பு பாரல் ஒன்றிற்கு  $ 110 -இலிருந்து $ 85 -இற்கு சரிந்திருக்கிறதே.  அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் கண்டுகொள்ள வில்லையே! அதுவும், கொள்முதல் விலை குறைந்தது கிட்ட தட்ட அதே 20% !
இருந்தும் விலையை  ஏற்றாமல் சமாளிக்க முடியவில்லை   என்றால் நீங்கள்   பெரும் பொய்யர் என்று தெரிகிறது!

ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. நீங்கள் பிரதமராக இருக்கும் வரை மக்களுக்கு விடிவு காலமே இல்லை!

Thursday, March 29, 2012

நம் கண்ணுக்கு சுண்ணாம்பு.. பக்கத்து வீட்டுக்காரன் கண்ணுக்கு வெண்ணை!

 இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள்...

நம்ம ஊரில எவன் செத்தா நமக்கென்ன.. இன்னைக்கு எந்த மாதிரி பல்டி அடிச்சா அமெரிக்கா காரன் நம்பள பாத்து சிரிப்பான்..
எவன் கொவிச்சுக்குவானோ! எதுக்கு வம்பு.. எதுக்கும் ஒரு சலாம் போட்டு வைப்போம். எப்போவாவது உதவும்.. 
நமக்கெல்லாம் எதுக்கு முதுகெலும்பு. அதெல்லாம் பணம் இருக்கும் பெரிய நாட்டுக்காரனுங்களுக்கு. 
அடுத்த வாரம் தானே முடிவெடுக்கணும்.. அன்னிக்கு பாத்துக்கலாம். இப்பவே எதுக்கு முடிவெடுக்கணம்..

இந்த கொள்கைகளில் முதல் கொள்கைப்படி, தமிழகத்திற்கு இப்போது மின்சாரம் கொடுக்க முடியாது என்று சொல்லி அதே வேலையில் பாகிஸ்தானுக்கு மின்சாரம் கொடுக்கப்படும் என்று சொல்கிறார்களே, இவர்களை எதால் அடிக்க?



நம் நாட்டை தவிர மற்ற நாடுகளுக்கு மட்டுமே நல்லது செய்யும் மன்மோகன் சிங் அவர்களை பேசாமல் உலக நாடுகளின் தலைவராக ஆக்கிவிட்டால் என்ன? இந்தியாவாவது பிழைக்கும்!

Wednesday, March 28, 2012

கண்கள் உங்களை ஏமாற்றும்..

Naina Thag Lenge - ஹிந்தி - Movie : Omkara

இதோ இன்னொரு பாடல். இதுவும் ஹான்டிங் பாடல் தான். பாடியவர் ரஹாத் படே அலி கான். நஸ்ரத் படே அலி கானின் தம்பி. படம் ஓம்காரா. ஒதெல்லோ வின் இந்தியப்படுத்திய படம். ஸைப் அலி கானின் அருமையான நடிப்பு.

இந்த பாடல் காட்சியில், ஒருவனை நம்பி ஊரை விட்டு ஓடி வரும் பெண்ணை எவனுடன் ஓடி வந்தாளோ அவனே சந்தேகப்படும் காதல். சந்தேக விதை விழுந்த கணத்திலேயே மனதளவில் அவள் செத்து விடுவாள். கரீனாவின் அற்புத நடிப்பை பார்க்கும்போது தான் தெரியும், பெரிய அழகில்லாத அவரை எல்லோரும் ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்று!

கண்கள் உங்களை ஏமாற்றும். அது நல்லவன் என்று சொல்பவனை நம்பி சென்றால் வருவதெல்லாம் கண்ணீர்தான்.. என்று பாடல் போகும்..


Enjoy the music..



Sunday, March 25, 2012

மனதை சுற்றி சுற்றி வரும் மற்றொரு பாடல்..

Maina Lagiyan Baarishaan- ஹிந்தி - From movie Anjana Anjani.

முன்னர் அறிமுகம் செய்த பாடலை கேட்கவில்லை என்றால் கொஞ்சம் கேட்டு விட்டு வந்து விடுங்கள்.. 

இதோ மனதை சுற்றி சுற்றி வரும் மற்றொரு பாடல். முதல் நாலு வரிகளுக்குள் பாட்டில் நம்மை ஈர்த்து விட்டு வேறு தளத்துக்கு பயணிக்கிறது இசை.. இருந்தாலும், அந்த முதல் நாலு வரிகள் மனதை விட்டு அகலுவதில்லை.

பாடலுடன் வரும் காட்சிகளும் பிரமாதமான விஷுவல்ஸ் உடன் இருப்பது இதமாக இருக்கிறது. நம் ரவிச்சந்திரன் கேமரா.

இதில் இன்னொரு விசேஷம் பிரியங்கா சோப்ரா நடித்திருப்பது.. பேஷன் பார்த்தீர்களா. அதில் அதகளம் பண்ணியிருப்பார். 

கேட்டு (பார்த்து) மகிழுங்கள்..




Friday, March 23, 2012

மனதை சுற்றி சுற்றி வரும் பாடல்..


Tose Naina Lage..  ஹிந்தி பாடல்..

ரொம்ப நாள் கேக்காம விட்டு மறுபடியும் அகஸ்மாத்தா கேட்டுவிட்டு மூளையில் எறும்பு மாதிரி சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்கும் பாடல் இது. ஏன் தான் மறுபடி கேட்டோமோ என்று செல்லமாக கடிந்து கொள்ளவும் தோன்றியது..

ஹான்டிங் மெலடி பாடல் இது.. ஒரு முறை கேட்டால் மறுமுறை தவறாமல் கேட்பீர்கள்.. இசை மிதுன் ஷர்மா..  இவரின் வேறு எந்த பாடலும் அதிகம் கேட்டதில்லை.. தேடி பார்த்து கேட்கவேண்டும்..

Enjoy..