Friday, March 23, 2012

மனதை சுற்றி சுற்றி வரும் பாடல்..


Tose Naina Lage..  ஹிந்தி பாடல்..

ரொம்ப நாள் கேக்காம விட்டு மறுபடியும் அகஸ்மாத்தா கேட்டுவிட்டு மூளையில் எறும்பு மாதிரி சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்கும் பாடல் இது. ஏன் தான் மறுபடி கேட்டோமோ என்று செல்லமாக கடிந்து கொள்ளவும் தோன்றியது..

ஹான்டிங் மெலடி பாடல் இது.. ஒரு முறை கேட்டால் மறுமுறை தவறாமல் கேட்பீர்கள்.. இசை மிதுன் ஷர்மா..  இவரின் வேறு எந்த பாடலும் அதிகம் கேட்டதில்லை.. தேடி பார்த்து கேட்கவேண்டும்..

Enjoy..


Wednesday, February 22, 2012

ஐன்ஸ்டீன் எழுதிய சினிமா ஒன் லைன்!





எதேச்சையாக ஐன்ஸ்டீன் எழுதிய ஒரு வாக்கியத்தை பார்த்தேன்.. இது தோனி படத்தின் ஒன் லைன் தானே!



Tuesday, January 17, 2012

செய்தி விமர்சனம்!



தினமணியில்..




உத்தரகண்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு தீர்வுகாண ஒரே வழி ஆட்சி மாற்றம்தான் என்றும் வலியுறுத்தினார் சோனியா ..


பின்னே.. கொள்ளை அடிக்கறது காங்கிரஸின் பிறப்புரிமை.. அதை மற்றவர் காப்பி அடித்தால் சும்மா விடுவாரா..




தினமணியில்..
ராகுல் விரும்பினால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: பிரியங்கா


அவர் எல்லா இடத்திலும் ஆப்பை தேடி அதில் அமர்ந்து கொள்வதால்.. இதிலும் அப்படியே செய்வார் என்று நம்புகிறேன்.. பிரியங்கா 


தினமணியில்..


ஓய்வுபெறுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: கம்பீர்


உண்மை தான்.. ஒய்வு பெற்றே ஆக வேண்டிய மன்மோகன் போன்றவர்கள் பதவியை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டிருப்பதை பார்த்தால் எல்லோருக்கும் இப்படி தான் தோன்றும்!


தினமணியில்..
கோழிக்கோடு என்று நினைத்து கொச்சியில் விமானத்தை தரை இறங்கிய விமானிகள்

ஏதோ இந்த அளவு நம் நாட்டிற்கு உள்ளேயே தரை இறங்கினார்களே.. அந்த அளவு உத்தமம்!

Monday, October 17, 2011

அமெரிக்க அனுபவம். - 3


அலுவலகத்தில் மதிய நேரம். அன்று எடுத்து சென்றிருந்த 'மேத்தி பராத்தாவை' மைக்ரோவேவில் சூடு பண்ணிக்கொண்டிருந்தேன். (என் மனைவி ஒரு அருமையான சமையல் நிபுணர்)

அதை எடுக்கும்போது, அருகில் நின்றிருந்த அமெரிக்க சக ஊழியை..

"ஓ! பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது.. நீங்களே சமைத்ததா?"  என்றார்..


"கிழித்தேன்.. எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும். இது என் மனைவி செய்தது" என்றேன்.


"நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்! எனக்கும் என் கணவருக்கும் வீட்டில் செய்த சமையல் என்றால் அவ்வளவு இஷ்டம்.. ஆனால் பாருங்கள், எனக்கும் சமைக்க தெரியாது. அவருக்கும் சமைக்க தெரியாது.. தினமும் சாப்பாடு வெளியில் தான். இல்லையேல் Frozen Dinner தான்.."
என்று சொல்லிக்கொண்டே போனார்! 

கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், யோசித்துப்பார்த்தால் இது தான் உண்மையான சுதந்திரம் என்று தோன்றியது. வேலைக்கும் போய்கொண்டு சமையல் கட்டையும் தான்  மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியை நினைத்துக்கொண்டேன். பாவமாக இருந்தது.

வீட்டுக்கு போனவுடன் மேத்தி பராத்தா செய்வது எப்படி என்று மனைவியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்..


Tuesday, October 11, 2011

தமிழ்மணத்தின் குறும்பு!


தமிழ்மணத்தில் இன்று அடுத்தடுத்து வந்த பதிவுகள்..


நல்லாத்தான் காமெடி பண்றாங்க!


Wednesday, October 5, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்!


இந்த நூற்றாண்டின் இணையற்ற சி இ ஓ, ஸ்டீவ் ஜாப்ஸ் இன்று காலமானார். அழுகும் நிலையிலிருந்த ஆப்பிளை எல்லோரும் அண்ணாந்து பார்க்க வைத்த அவருக்கு என் அஞ்சலி..

Tuesday, September 6, 2011

அமெரிக்க அனுபவம் - 2


இதை என் முந்தைய பதிவு போலவே இன்னொரு அனுபவம்..

ஒரு திங்கள் கிழமை காலையில் வழக்கம் போல ஒரு மீட்டிங் துவங்குவதற்காக காத்திருக்கும்போது சம்பிரதாயமாக மற்றவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.. 

உரையாடல் தமிழில்..

உடன் பணி புரியும் அமெரிக்க பெண்மணி..

"சென்ற வீகென்ட் எப்படி செலவழித்தீர்கள்"

"பிள்ளைகளுடன் மால் சென்றிருந்தேன்.. வேறு விசேஷமில்லை.. உங்களுடைய வீகென்ட் எப்படி?" என்றேன்..

"மிக அருமையாக இருந்தது.. ஊரிலிருந்து என் மாமியார் வந்திருந்தார். நானும் என் கணவரும் மாமியாருடன் சென்று வெட்டிங் கௌன் (wedding gown)  வாங்கினோம்.."

எனக்கு இந்த வாக்கியம் அபத்தமாக தெரிந்தது.. வெட்டிங் கௌன் என்கிறார். மாமியார் என்கிறார். ஒரு வேளை கல்யாணத்திற்கு முன்னேயே மாமியார் என்கிறாரோ? அவ்வளவு அன்யோன்யமோ? நம்ம ஊரிலும் இருக்கிறார்களே.. என்று பலவாறு சிந்தனை பறந்தது..

இருந்தாலும் குழப்பம் பெரிய அளவு என் முகத்தில் தெரிந்ததை பார்த்து, அவரே..

"வெட்டிங் கௌன் என் மாமியாருக்கு! சமீபத்தில் விவாகரத்து பெற்ற அவர் மறுமணம் செய்துகொள்ளப்போகிறார்.. அதற்காக தான்.. " என்றார்..

என்னிடம் மறு பேச்சில்லை!