Wednesday, August 21, 2013

இந்திய பொருளாதாரம் - கவலைக்கிடமான நிலையில்..


Image courtesy : Google Images




இந்திய பொருளாதாரம் மிக அபாயமான நிலையில் உள்ளது. ஒரே மாதத்தில் 7% மதிப்பை ரூபாய் இழந்துள்ளது. இதன் ஆபத்தை இரண்டு உதாரணங்கள் மூலம் உணரலாம்.
கொடுக்க வேண்டிய கடன் டாலரில் திருப்பி கொடுக்க வேண்டியிருப்பதால், ஒரே மாதத்தில் கடன் தொகை 7% அதிகரித்துள்ளது! ஆண்டிற்கு 84% வட்டி!

Image courtesy : Google Images

70% பெட்ரோல் இறக்குமதி ஆவதால், பெட்ரோல் பொருட்கள் விலை மேலும் மேலும் உயரும். நம் நாட்டில் பெரும்பாலான சரக்குகள் (அந்த 'சரக்கு' உட்பட) பெட்ரோல் பொருட்களால் இயங்கும் வாகனங்கள் மூலம் விற்பனை ஆகும் இடங்களுக்கு எடுத்து செல்வதால் எல்லா பொருட்களுமே 7% உயரும்.

இன்னுமொரு நெருக்கடி குறைந்த காலத்தில் திருப்பிக்கொடுக்கவேண்டிய கடன் மிக அதிகரித்திருக்கிறது. இன்னும் ஒரே வருடத்தில் இந்தியா திருப்பிக்கொடுக்க வேண்டிய கடன் - $172 Billion. கிட்டதட்ட  பதினொரு லக்ஷம் கோடி ருபாய் மதிப்பில்! .
Image courtesy : Google Images


திருப்பிக்கொடுக்கவேண்டிய நேரத்தை நீட்டிக்கொள்ளலாம். ஆனால், நாம் இருக்கும் நெருக்கடியான நிலையினால்  வட்டி அதிகமாகும்.

நம் கையிருப்பும் மிக குறைந்துள்ளது. ஏற்றுமதி - இறக்குமதி இடையில், இறக்குமதி அதிகமாக இருப்பதால், நம் கையில் உள்ள தொகை ஏழு மாத பற்றாக்குறையை சமாளிக்கும் அளவே உள்ளது.

இது வரை RBI எடுத்த நடவடிக்கை எதுவும் பலனளிக்கவில்லை! 1990-ஆம் ஆண்டு இருந்த நெருக்கடி நிலைக்கு இப்போது வந்திருக்கிறோம்.

அப்போது அதை சமாளிக்க லாப நிலையில் இருந்த பொதுத்துறை நிறுவனகள் ஒன்றொன்றாய் பலி கொடுத்து சமாளிக்க முடிந்தது. இப்போது என்ன செய்யப்போகிறோம்? (BSNL போன்ற பொன் முட்டை இட்ட வாத்துக்களை தனியார் லாபத்திற்காக பலி கொடுத்துவிட்டோம்)

எந்த அளவு இந்த ஆபத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. எல்லோருக்குமே இதன் மூலம் பாதிப்பு இருக்கும்.

Image courtesy : Google Images

வேலையில்  ஆள் குறைப்பு , வானளாவிய விலை உயர்வு. ஒரே நாளில் பங்கு சந்தைகளில் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் பலர்..

இன்னும் தலைவா ரிலீஸ் ஆகவில்லை என்று கவலைப்படும் பலரை பார்த்தால் தான் கவலையாக இருக்கிறது!


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Anonymous said...

அந்நிய முதலீட்டை தொடர்ந்து நம்பினால், வரும் வேகத்தில் பணம் போய்டும். மாறாக சுய தொழில் மற்றும் உற்பத்திகளை பெருக்க முனைய வேண்டும். அடுத்து இந்த லட்சக் கணக்காய் ஊழல் செய்தவனை எல்லாம் பிடிச்சி, நய பைசா விடாமல் திருப்பி வாங்க வேண்டும். இன்றைய நிலையில் இரண்டும் பகல் கனவே ! :(

bandhu said...

முற்றிலும் உண்மை இக்பால் செல்வன். அந்நிய முதலீட்டை வைத்து உள்கட்டமைப்பு, சுயதொழில், ஏற்றுமதி எதிலும் பெரிய அளவு முன்னேற்றாமல் எப்படி இத்தனை பணத்தை வீணடித்தோம் என்று புரியவே இல்லை!

RAM said...

உண்மை தான். மிகக் கடின நிலையில் தான் உள்ளோம்..தொலைநோக்கு இல்லாத அரசியல் வாதிகள் அமையாத வரை நமக்கு விடிவு இல்லை..

bandhu said...

Rama K , கசப்பாக இருந்தாலும் இது தான் இன்றைய நிலை. ஆனால், கவலை கொள்பவர்கள் மிக குறைவாக இருக்கிறார்கள்! அது தான் எனது ஆதங்கம்!

செங்கோவி said...

வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப்பணத்தைக் கொண்டுவந்திருந்தாலே, தப்பித்திருக்கலாம்..இனி அடுத்த ஆட்சி வரும்வரை, டண்டணக்கா தான்!

bandhu said...

அதை மறந்துவிட்டேன் செங்கோவி! என்னும் ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது நமக்கு என்பதே கொஞ்சம் நிம்மதி அளிக்கிறது! திருடர்கள் கையில் சாவி இருக்கிறது. இவர்கள் போகும் வரை காத்திருக்க வேண்டியது தான்!

indrayavanam.blogspot.com said...

இந்திய பொருளாதார நிலைமைகளை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

bandhu said...

வருகைக்கு மிக்க நன்றி. இது பற்றி பெரிதாக விழிப்புணர்வு இல்லை என நினைக்கிறேன். மிக்க வருத்தம் அளிக்கிறது!

bandhu said...
This comment has been removed by the author.