Image Courtesy : Google Images
எது நடக்கக்கூடாது என்று பயந்தோமோ அது நடந்து கொண்டிருக்கிறது.
ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. போனவாரம் வரை 1 டாலருக்கு 62 இல் இருந்த மதிப்பு இப்போது 1 டாலருக்கு 67 என்ற நிலைக்கு சென்றுவிட்டது.
அரசின் போக்கோ நான்கு குருடர்கள் யானையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாகத்தை தடவிப்பார்த்து அதன் உருவத்தை ஒவ்வொருமாதிரி கற்பனை செய்து கொள்வார்களே, அது போல இருக்கிறது.
NDTV -யின் இப்போதைய நிலையை விளக்கும் கலந்துரையாடலை கேட்டேன். காங்கிரஸ் சார்பாக வந்த ஒருவர் "இப்போதைய நிலைக்கு நாம் அயன் ஓர் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அதற்க்கு காரணம் கர்நாடகாவில் அந்த அயன் ஓரில் ஏகப்பட்ட ஊழல். கர்நாடகாவில் அப்போதைய ஆட்சி பி.ஜே.பி. அதனால் இந்த சிக்கலுக்கு காரணம் பி.ஜே.பி. தான்!" என்று ஒரு போடு போட்டார். சும்மா சொல்லக்கூடாது. குடுத்த காசுக்கு நல்லாவே கூவுகிறார்!
அதே கலந்துரையாடலில் இன்னொருவர், "பொருளாதார மேதை" என நினைக்கிறேன்.. (ஊரெங்கும் இந்த "பொருளாதார மேதைகளின்" அட்டகாசம் தாங்க முடியவில்லை!). அவர் சொன்னது.."இந்தியா ஆயிரத்தி நூறு வருடமாக பொருளாதார ரீதியாக முன்னேறாத நாடு. (என்ன கணக்கோ!) கடந்த இருபது வருடமாக தான் இந்த வளர்ச்சி. கொஞ்சம் குறைந்திருக்கிறதே ஒழிய இப்போதும் நாம் மிக பலமாகத்தான் இருக்கிறோம்" என்றார்!
Image Courtesy : Google Images
பதிவுலகத்தின் கண்களாலும், தமிழ் பத்திருக்கைகளின் கண்களாலும் தமிழகத்தை பார்த்துக்கொண்டிருப்பதால் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக இருப்பதாக தோன்றுகிறது.
போகும் போக்கை பார்த்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைத்து பொருட்களும் 25% வரை விலை உயரக்கூடும் என நினைக்கிறேன். அதைவிடக்கொடுமை பணம் கொடுத்தாலும் பொருட்கள் கிடைக்காமல் போவது. சில அத்யாவசியம் இல்லாத ஆடம்பரப் பொருட்கள் கிடைக்காவிடில் தலை முழுகிப்போகாது. (பெட்ரோமாக்ஸே வேணுமா?) ஆனால், முக்கியமான பொருட்களான பெட்ரோலிய பொருட்கள் (பெட்ரோல், டீசல், சமையல் காஸ்..), இறக்குமதி செய்யும் சில மருந்துகள், போன்றவற்றின் தட்டுப்பாடு வந்தால் அது பல விதத்தில் எல்லோரின் வாழ்வையும் பாதிக்கும்.
அரசின் செயல்கள் யாவும்.. எத்தை தின்னால் பித்தம் குறையும்.. என்ற மனோபாவத்தில் பலவற்றையும் முயற்ச்சித்து பார்ப்பது போல இருக்கிறது..
இதற்க்கு நடுவில் சிரியாவின் மீது அமேரிக்கா போர் தொடுக்குமோ என்ற பயம்.. (ஏண்டா ..ஏன் .. ஏன் இந்த கொலைவெறி? ) பிரிட்டன் பார்லிமென்ட் அந்த நாட்டிற்கு போருக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது கொஞ்சம் ஆஸ்வாசம் தருகிறது!
இந்த நிகழ்வுகள் எல்லோரயுமே பாதிக்கும் என்பது மிக விரைவில் அனைவரும் அறிந்து கொள்வார்கள். என்ன.. அப்போது அது மிக கசப்பாக இருக்கும்!
Image Courtesy : Google Images
No comments:
Post a Comment