Tuesday, June 26, 2012

இந்திய பொருளாதாரம்.. ஆபத்தான பாதையில்!



இத்தனை நாட்கள் நமது நாட்டில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் அந்நிய முதலீடு குவிந்து வந்தது. அதை வைத்து எந்த ஒரு நல்ல அரசும் செய்ய
 வேண்டியவை

  • நல்ல உள் கட்டமைப்பு
  • எல்லோருக்கும் எளிதில் நல்ல குடிநீர்
  • எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி
  • விளை பொருட்களை கெடாமல் வைத்திருக்க கோல்ட் ஸ்டோரேஜ் வசதிகள் 
  • பெரும்பான்மையான மக்கள் கண்ணியத்துடன் வாழ வேலை வாய்ப்பு 
  • எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய நல்ல கல்வி..

இதில் முதல் ஒன்றில் மட்டும் நல்ல முன்னேற்றம். மற்ற எதிலும் கடந்த இருபது வருடங்களில் பெரும்பாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இல்லையேல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் மோசமாக போய்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில், ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை தடுக்க அரசு செய்வது, மேலும் முதலீட்டை வசீகரிக்க, இது நாள் வரை இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்பு துறையிலும் அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கிறது.

இது மிக ஆபத்தானது. ஆடம்பரத்திற்காக கந்து வட்டி காரனிடம் கடன் வாங்குவது போன்றது! மிக விரைவில் அழிவை தந்துவிடும்.

ஏதாவது அதிசயம் நடந்து இந்த ஆட்சி ஒழிந்து நல்ல ஒரு ஆட்சி வராதா என்று ஏங்குகிறேன்!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

Avargal Unmaigal said...

நல்ல ஆட்சிக்கு இனிமேல் இந்தியாவில் வழியே இல்லை. நல்லாட்ட்சி வேண்டுமென்றால் புரட்சி ஏற்பட வேண்டும் அதற்க்காக ரத்தம் சிந்த இப்போதைக்கு மக்கள் தயார் இல்லை என்பதே உண்மை

bandhu said...

உண்மை தான் Avargal Unmaigal .. தவறாமல் வருகை தருவதற்கு நன்றி..

Anonymous said...

இது எல்லா நாடுகளின் ஆசையும் கூட...

bandhu said...

அப்படித்தான் தோன்றுகிறது ரெவெரி

வெங்கட் நாகராஜ் said...

//இது மிக ஆபத்தானது. ஆடம்பரத்திற்காக கந்து வட்டி காரனிடம் கடன் வாங்குவது போன்றது! மிக விரைவில் அழிவை தந்துவிடும்.//

உண்மை. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

தொடர ஆரம்பித்து விட்டேன்.

bandhu said...

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ். உண்மையாகவே கவலையாக இருக்கிறது