ஒரு பக்கம் பகல் கொள்ளையாக பெட்ரோலின் மேல் அசலைவிட அதிகமாக வரி வைத்து விற்று விட்டு 'ஒரே நஷ்டம்' என்று பச்சை புளுகு புளுகும் 'படித்த நல்லவர்கள்' ஆளும் இந்த அரசு! இந்த பெட்ரோல் கொள்ளை பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்தாலும், வவ்வால் மிக தெளிவாக அவர் பதிவில் விளக்கியிருந்தார்.
அதே நேரம் இந்தியாவில் பரம ஏழைகள் தினமும் உபயோகிக்கும் விமான பயணிகள் வசதிக்காகவும், விஜய் மல்லய்யா, கலாநிதி மாறன் போன்ற 'உத்தம' முதலாளிகள் நலனுக்காகவும் அதிரடியாக 5% Jet Fuel விலையை
இந்த அரசு குறைத்திருக்கிறது.
ஏப்ரல் மாதத்திலிருந்து இது வரை ஐந்து முறை விலை குறைத்திருக்கிறதாம் இந்த அரசு!
இந்த jet fuel மட்டும் என்ன தாவரத்தில் இருந்தா விளைகிறது? முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் பெட்ரோலிய பொருள் தானே? அப்போது மட்டும் ரூபாய் மதிப்பு, உலக சந்தையில் விலை உயர்வு போன்ற காரணங்கள் கிடையாதா?
எந்த அளவு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்!
வயறு எரிகிறது! 'படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான்' என்னும் பாரதி வாக்கு உண்மையாக காத்திருக்கிறேன்!
5 comments:
எரிச்சல் வருவது சரியே
பாரதி பாவம் விடுங்க :)
வருகைக்கு நன்றி அப்பாதுரை சார்..
/வயறு எரிகிறது! 'படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான்' என்னும் பாரதி வாக்கு உண்மையாக காத்திருக்கிறேன்!
//
அடுத்த தேர்தலில் ஐயோ என போவார்கள் கவலையை விடுங்கள்
இன்று
சிரிக்க சில படங்கள்
Post a Comment