பல வருடங்களுக்கு முன் எனக்கு நடந்த அனுபவம் இது. அப்போது நாங்கள் அமெரிக்கா வந்து ஓரிரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். நான் புதிதாக ஒரு கம்பெனியில் சேர்ந்திருந்தேன். அங்கு என்னை தவிர வேறு யாரும் இந்தியர்கள் இல்லை. எல்லா அனுபவமுமே கொஞ்சம் புதியதாக இருந்தது.
அதில் இந்த அனுபவம் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது!
எங்கள் இரண்டாவது குழந்தை பிறந்த வேளை. அந்த செய்தியை இந்திய வழக்கப்படி, அலுவலகத்தில் பலருடன் பகிர்ந்து கொண்டேன். அப்போது உடன் பணி புரிந்த ஒருவர் - அமெரிக்கர்- உடனான உரையாடல்..தமிழில்..
அமெரிக்கர்: "இது தான் உங்கள் முதல் குழந்தையா?"
நான்: "இல்லை. இது இரண்டாவது குழந்தை. என் முதல் குழந்தைக்கு ஆறு வயதாகிறது"
அமெரிக்கர்: "இதே மனைவியுடனா?"
நான் முழிப்பதை பார்த்து, அவர் மறுபடி விளக்கமாக
"முதல் குழந்தையும் இதே மனைவியுடனா இல்லை இது வேறு கல்யாணத்திற்கு பிறகா?"..
கொஞ்ச நேரம் அதிர்ச்சியில் எனக்கு பேச்சே வரவில்லை!
11 comments:
பந்து!சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பின்னூட்டப் பக்கங்களிருந்து காணாமல் போய்ட்டீங்க போல இருக்குதே!பாலோயர் எண்ணிக்கை குறைவா இருக்குது.5வது டிக்கட் வாங்கிக்கிறேன்:)
ஆமாம் சார். ஆணின்னு பொய் சொல்ல விரும்பலை.. சட்டியில் ஒன்னும் இல்லை. அதனால் அகப்பையிலும் ஒன்னும் வரலை!
ரொம்ப எதார்த்தமான ஆளா இருப்பீங்க போலிருக்கே. அமெரிக்கரைப் போலவே அவர்களின் கேள்வி கேலியைப் போல பலவற்றை தினந்தோறும் சந்தித்துக் கொண்டே இருக்கின்றேன். ஆனால் வெள்ளை கலாச்சாரம் நமக்கு ஆச்சரியம் வெறுப்பு. அவர்களுக்கு நம் வாழ்க்கை அதிசயம்.
ஜோதிஜி.. முதலில் எனக்கும் மிகவும் ஆச்சர்யமாக தான் இருந்தது. இப்போது அவர்கள் வாழ்க்கை முறை புரிகிறது. வெறுப்பு இல்லை. Being Independent என்பதற்கு மிக அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அமெரிக்க தம்பதியர் இருவர் வாசலில் அமர்ந்து
குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தபடி
பேசிக்கொள்கிறார்கள்
" என்னோட குழந்தையும் உன்னோட குழந்தையும்
நம்மோட குழந்தையோட எவ்வளவு சந்தோஷமாக
விளையாடுகிறார்கள் பார்த்தாயா .."
இந்த உரையாடல் அங்கு சாத்தியமே என இங்கு
பட்டிமண்டபங்களில் ஜோக்காகச் சொல்வார்கள்
அது சரிதான் போல இருக்கு என் உங்கள் பதிவைக்
கண்டதும் புரிந்து கொண்டேன்
சுவரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி ரமணி சார். உண்மையிலேயே இது இங்கு சாதாரணம் தான். அவர்களும் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை!
என்ன பண்றது? அவர்களின் கலாச்சாரம் அப்படி.
உண்மை தான் பிரசாத்..
வருகைக்கு நன்றி..
முதல் குழந்தையும் இதே மனைவியுடனா இல்லை இது வேறு கல்யாணத்திற்கு பிறகா?"..
ம்ம்.. எதையாவது சொல்லி குடும்பத்துல குழப்பம் பண்ணிரப் போறார்..
நமக்கு நேர் எதிரான கலாச்சாரம் மற்றும்
பண்பாடு உடையவர்கள் அமெரிக்கர்கள்
எனவே நாம் அவர்களைப் புரிந்து கொள்வதும்
அவர்கள் நம்மை புரிந்து கொள்வதும் கடினமே
அவர்களுடனானதங்கள் அனுபவங்களை
தொடர்ந்து அறிய இப்பதிவு ஆவலைத் தூண்டுகிறது
தொடர வாழ்த்துக்கள்
'ஒரு பொண்டாட்டியை கட்டி சமாளிக்கர்தே எங்க ஊர்ல கண்ணைகட்டர வேலை!'னு அந்த வெள்ளக்காரருக்கு சொல்லர்துக்கென்ன!! :)
Post a Comment