Monday, April 25, 2011

சத்ய சாயி பாபா கடவுளா?



If there is righteousness in the heart, there will be beauty in the character. 
If there is beauty in the character, there will be harmony in the home.
If there is harmony in the home, there will be order in the nation.
When there is order in the nation, there will be peace in the world. 

சத்ய  சாயி  பாபா

ஒவ்வொருவரின் உள்ளத்திலும்  நேர்மை குடி கொண்டிருந்தால் அந்த தேசம் அமைதியாக திகழும் என்பது பாபாவின் அருள் மொழி. இது மட்டுமல்ல, அவர் போதனைகள் எல்லாமே எளிய கருத்துக்கள் தான். எல்லாவற்றிலும் அடி நாதம் ஒன்றே. அன்பு. அன்பு. அன்பு. எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்த வேண்டும். மானிட சேவையே மகேசன் சேவை. 

கிட்டதட்ட எல்லாமே நாம் பலமுறை கேட்ட கருத்துக்கள் தான். பொதுவாக யாரும் மறுக்க முடியாதவை கூட. பாபா இந்த அறிவுரைகளை சித்து வேலைகள் என்ற தேனில் குழைத்து கொடுத்தார். தேனின் சுவை மக்களை அவர் பக்தர்கள் ஆக்கியது என்றால், இந்த அறிவுரைகள் அவர்களை நல்ல மனிதர்கள் ஆக்கியது. தேனின் சுவை ஒரு அறிமுகம் மட்டுமே. முழுமையான சாரம் அவர் போதனைகளில் தான் இருந்தது. 

இந்த அன்பின் வெளிப்பாடு தான் பாபாவின் மட்டற்ற பொது சேவை. ராயல சீமா முழுவதற்கும் தண்ணீர் வர அவர் எடுத்த முயற்சி, தமிழக ஆந்திர அரசுகள் இணைந்து செய்ய வேண்டிய கிருஷ்ணா குடிநீர் திட்டத்திற்கு அவர் பங்களிப்பு, புட்டபர்த்தியில் இருக்கும் சாய் கல்லூரி. உலகத்தரத்திலான இலவச மருத்துவ மனை. 

இப்படி பாபா இந்த சமுதாயத்திற்கு அளித்தது எவ்வளவோ. 

இதையெல்லாம் விட்டு விட்டு, அவர் அளித்த தேன் உண்மையானது அல்ல. வெறும் சக்கரை தண்ணீர்தான் என்று சொல்பது போல, அவர் செய்தது கண்கட்டு வித்தை, போலி, ஏமாற்றுவேலை என்று சொல்பது சாரத்தை விட்டு விட்டு வழியை குறை சொல்பது தான்!

அவர் அருளிய அருள் மொழிகள் மட்டும் எனக்கு போதும். அதுவே சாரம். 

இந்த அளவு சமுதாயத்திற்கு ஒருவர் செய்ய முடியுமென்றால்....

அவர் கடவுள் தான்!  

அவர் என்றும் பக்தர்கள் இதயத்தில் வாழ்வார்!   


மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Geetha Sambasivam said...

முதல் வருகை அளித்ததற்கும் கருத்துக்கும், இந்தப்பதிவுக்கும் மனமார்ந்த நன்றி. மனம் ரொம்ப நொந்து போயிருந்தது. வாழ்த்துகள். வணக்கம்.

bandhu said...

உங்கள் வருகைக்கும் நன்றி, கீதா சாம்பசிவம் அவர்களே..

RVS said...

நூறு சதம் உண்மை. பாபா செய்த நற்காரியங்கள் அதிகம். வீம்புக்கு மக்கள் ஏதேனும் உளறுகிறார்கள்.