ஓட்டு போடுவதற்கு முன் கடைசி நேர சிந்தனைகள். தி மு கா மறுபடி இந்தமுறை பதவிக்கு வரக்கூடாது. தி மு க ஆட்சியின் சில சாதனைகள்
- ஸ்பெக்ட்ரம் மெகா ஊழலில் உலகத்திற்கே எந்த அளவு ஊழல் செய்ய முடியும் என்று காட்டியது!
- தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்ட / அறிவிக்கப்படாத மின் வெட்டு. ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தும் மின் வெட்டிற்கு அ தி மு க வை குற்றம் சொல்வது. இந்த ஐந்தாண்டுகளில் என்ன கிழித்தார்கள்?
- கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு அமைச்சரும் சேர்த்த பற்பல கோடிகள்! நேருவின் சொத்து இரண்டு கோடியிலிருந்து பதினைந்து கோடியாக உயர்ந்திருக்கிறது இந்த ஐந்தாண்டுகளில்
- தெருவெங்கும் ஓடும் சாராயக்கடை (டாஸ்மாக்). தன் மகன் குடியினால் அழிந்தும் (மு க முத்து) அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் இந்த அளவு கருணாநிதி டாஸ்மாக்கை வளர்த்திருப்பது.
- தன் குடும்ப வாரிசுகள் செல்வத்தை வளர்க்க (சுமங்கலி கேபிள் மூலமும், சன் டி வி யின் விளம்பர வருவாய் மூலமும்) அரசு பணத்தில் எல்லோருக்கும் இலவசமாக டி வி கொடுத்தது
- தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும்போது கடிதம் எழுதுவது. தன் குடும்பத்திற்கு பதவி என்றால் டில்லிக்கு நேரில் சென்று காவடி எடுப்பது
- ஈழப்ரச்சனையில் உலக சாதனையாக மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருந்தது
- கனிமொழி விசாரணை வளையத்தில் மாட்டியதும் பொது பிரச்சனையில் 'போராடி' சிறை செல்வது போல சீன் காட்டியது
காரணங்கள் போதும் என்று நினைக்கிறேன். இப்போது, அ தி மு க ஆட்சிக்கு வந்தால் அவர்கள் மட்டும் ஒழுங்கா என்ற கேள்விக்கு பதில்..
அவர்களும் ஒழுங்கில்லை என்பதே!
ஆனால், ஆட்சியை மாற்றுவது மூலம் ஒரு திருடர் இன்னொரு திருடரை மாட்டி விட சந்தர்ப்பங்கள் உண்டு. ஆட்சியில் இருப்பவர்களுக்கு, இது நிலையில்லை என்ற எண்ணம் தோன்றும். இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் தவறை பெரிதாக்கி காட்ட ஒரு கேடலிஸ்ட் இருக்கும்.
மேலும், இப்போது தமிழ்நாட்டில் இருப்பது ஒரு ஊடக பயங்கர வாதம். அன்னா ஹசாரேவின் உண்ணா விரதத்தையே எந்த தொலை காட்சி ஊடகமும் காட்ட வில்லை. இது தொடர்ந்தால், மக்களை இருட்டில் வைப்பதையே இவர்கள் விரும்புவார்கள்
இதற்கெல்லாம் ஒரு முடிவின் தொடக்கமாக இந்த ஆட்சி மாற்றம் அமைய வேண்டும்!
6 comments:
நன்று...
வருகைக்கு நன்றி, சாணக்கியன்..
ஆட்சி மாற்றம் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என்பதை மட்டுமே நம்புவோம். நன்றாக வடிவமைத்து எழுதி உள்ளீர்.
வருகைக்கு நன்றி, கமல்.நல்லதையே நினைப்போம். நல்லது நடக்கும்!
சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
திருச்சியில் இங்கிருந்து ஒருமுறை போனபோது (2003) - மேலே கூரையே இல்லாத அம்மன் கோவில் ஒன்றில் நாம் எழுதி வைப்பது நடக்கும் என்ற ஐதீகம் உண்டு என்று என் மனைவின் உறவினர்கள் சொல்ல - நான் எழுதி வைத்தது !!
- தண்ணீர் எல்லா ஜீவராசிகளுக்கும் பொது மற்றும் இன்றி அமையாதது. மனிதனின் சுய தேவைகளால் விரயமாகும் தண்ணீரால் உண்டாகும் தட்டுபாட்டை குறைக்க போதிய அளவு மழையும்
- லஞ்சமே வாங்காத அரசியல்வாதியும் கேட்டேன். (இது ரொம்ப "டூ மச்" என்றாலும் - அவர்கள் திருந்தினால் நாடே திருந்தி சுபீச்சம் ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் !!)
ஒழுங்காய் பெயர் இருந்த அம்மனுக்கே ஆப்பு வைப்பவர்கள் நம்ம ஊர் அரசியல்"வியாதிகள்" !!
Post a Comment