தேர்தல் கமிஷன் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கிறது. இதே தேர்தல் கமிஷன், தேர்தலுக்கு பிறகு கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்களை எதிர்த்து ஒன்றும் சொல்வதில்லை.
இந்த தேர்தலில் தி மு க கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்கள்
- 35 கிலோ அரிசி - ஏழை மக்களுக்கு
- பஸ் பாஸ் - 58 வயதை தாண்டிய எல்லோருக்கும்
- இன்ஜினியரிங் மாணவர்கள் எல்லோருக்கும் லேப்டாப்
- மீனவர்களுக்கு இலவச இன்சூரன்ஸ்
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக்சி அல்லது கிரைண்டர்
...மற்றும் பல..
அ தி மு க கொடுப்பதாக உறுதி அளிக்கும் இலவசங்கள்
- 20 கிலோ அரிசி - எல்லா குடும்பங்களுக்கும்
- பஸ் பாஸ் - 58 வயதை தாண்டிய எல்லோருக்கும்
- 12 -ஆம் வகுப்பு மானவர்களிலுருந்து அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப்
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி
- குறைந்த விலையில் கேபிள்
- ஏழை மக்களின் திருமணத்திற்கு 4 கிராம் தங்கம்....
..மற்றும் பல..
இதில் இரண்டு கட்சிகளுமே சொல்லாமல் விட்டது, அனைத்தும் அரசு பணத்தில் என்பதை.
ஆனால், தேர்தலுக்கு முன் கொடுக்கும் பணம் அரசு பணம் இல்லை. அவரவர்கள் சம்பாதித்த பணம்.
இப்படி இருக்கும்போது தேர்தல் கமிஷன் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடை செய்வது சரியா? தடை செய்வது அரசியல் வாதிகளுக்கு நன்மையாகவே முடிகிறது!
நீங்களே சொல்லுங்கள், ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பா?
1 comment:
ரொம்ப சரிங்க... ஆனா அவங்களுக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து சரி கட்டிட்டாங்கன்னா.. எல்லாமே பணமயம் இங்கே... ஒன்றும் சொல்வதற்கில்லை. ;-))
Post a Comment