மேலே உள்ள புகைப்படம் இன்றைய தினமலரில் வெளியானது. அரசு கூட்டம் முடிந்தவுடன் அலங்காரமாக கட்டியிருந்த காய் கறிகளை எடுத்து செல்ல பொதுமக்கள் சிலர் அலை மோதுவதை இதில் பார்க்கலாம்.
விண்ணை தொடும் காய்களின் விலை, மக்களை எந்த அளவிற்கு வீழ்த்தியிருக்கிறது என்பது பார்த்தாலே தெரிகிறது. அதை விட முக்கியம், இலவசமாக கிடைப்பதை ஏற்றுக்கொள்வது தன்மானத்திற்கு இழுக்கு என்னும் மனநிலை இவர்களுக்கு சுத்தமாக இல்லை என்பதும் தெரிகிறது.
ஆட்சியாளர்களின் மிகப்பெரிய தோல்வி இது என்று கருதுகிறேன்!
4 comments:
//ஆட்சியாளர்களின் மிகப்பெரிய தோல்வி இது என்று கருதுகிறேன்!//
தவறு. ஆட்சியாளர்களின் மிகப்பெரிய வெற்றியாக ஆட்சியாளர்கள் இதைக் கருதுகின்றனர்.
நீங்கள் சொல்வது சரி சார்! நான் சொல்வதும் சரியே! என் எண்ணப்படி இது ஆட்சியாளர்களின் தோல்வி. அவர்கள் எண்ணப்படி இது அவர்கள் வெற்றி!
இந்த இலவச மனநிலைதானே ஆட்சியாளர்கள் கையில் இருக்கும் ஒரே அஸ்திரம்.பாவம் மக்கள்.மாற்றுவது ம்கவும் சிரமமான விஷயம்....துளிதுளியாய் எடுத்து கடல் நீரைக்கூட குடிநீராக்கலாம்...
இந்த மனநிலை மாறாத வரை நமக்கு இவர்களை விட்டால் வேறு கதியில்லை!வருகைக்கு நன்றி, கோமா.
Post a Comment