Tuesday, September 29, 2020

பங்கு சந்தை முதலீடா சூதாட்டமா?



உங்கள் கையில் நிறைய பணம் இருக்கிறது. அதை முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். 


ஏதாவது ஒரு டீக்கடை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறீர்கள். ஏற்கனவே நீங்கள் வேலையில் இருப்பதால், ஏற்கனவே இருக்கும் டீக்கடை ஒன்றில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறீர்கள். வீட்டருகே புதிதாக வந்த ஒரு கடை உங்களுக்கு ஞாபகம் வருகிறது. பிரமாதமான அலங்காரத்துடன் இருக்கும் அந்த கடை வந்த சில நாட்களிலேயே எப்போதும் கூட்டமாக இருப்பதும் உங்களுக்கு தெரியும். லேட் பண்ண வேண்டாம் என்று அந்த உரிமையாளருடன் பேசி ஐந்து லக்ஷம் பணம் போடுகிறீர்கள். நேற்றுவரை டீக்கடை வாடிக்கையாளராக இருந்த நீங்கள் இன்று டீக்கடை பங்கு தாரர் என்று பெருமையாக இருக்கிறது!

நீங்கள் செய்தது முதலீடா? சூதாட்டமா?

சூதாட்டம். டீக்கடை எவ்வளவு லாபத்தில் இயங்குகிறது? எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது? மாதம் எவ்வளவு செலவு? மாதா மாதம் வருமானம் அதிகரிக்கிறதா ..

இதெல்லாம் தெரியாமல் பணம் போட்டால் சூதாட்டம். தெரிந்து முடிவெடுத்து பணம் போட்டால் முதலீடு!

இதே தான் பங்கு சந்தையிலும்! 

மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விளக்கம். மிகவும் கவனமாக, பார்த்துப் பார்த்து செய்ய வேண்டிய முதலீடு - நஷ்டம் வரலாம் என்பதையும் உணர்ந்து கொண்டால் நல்லது!

bandhu said...

வருகைக்கு நன்றி, வெங்கட்.

கால் வைக்கும் முன், 'Paper Money ' வகையில், ஒரு நோட்டில் 1,00,000 முதலீடு என்று எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்திருக்கும் பங்குகளை , ரிசர்ச்சுக்கு பிறகு, வாங்கியதாக எண்ணி அந்த முதலீட்டில் இருந்து குறைத்து பங்காக மாற்றி அதே நோட்டில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சில மாதங்கள் அந்த பங்கு விலையை கண்காணியுங்கள். ஒரு நல்ல புரிதல் கிடைக்கும்.

அடுத்தது, 'Mad Money '. இந்த பணம் போனாலும் என் வாழ்க்கையை அது புரட்டிப் போடாது என்ற அளவு பணத்தை மட்டும் ஒதுக்கி வைத்து பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம்

இரண்டுக்குமே அடிப்படை.. அந்த பங்கை ஏன் வாங்க வேண்டும் என்ற தெளிவான காரணங்கள் தெரிந்து வாங்கவேண்டும்

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல விளக்கம். எளிமையாகப் புரிய வைத்திருப்பதற்கு நன்றி. முதலீடு என்பது மிகவும் யோசித்துச் செய்ய வேண்டும். ஆனால் பங்குச் சந்தை சிலரை பைத்தியமாக்குவதையும்/க்ரேசியாக பார்த்திருக்கிறேன்.

கீதா