பிடிக்குதோ.. இல்லையோ.. நான் இந்த 'சோசியல் மீடியா'க்களில் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய நேரம் செலவழிக்கிறேன்.. எனக்கு மட்டுமில்லை.. பலருக்கும் இதே அனுபவம் என நினைக்கிறேன்..
முதலில் எல்லாம் பஸ்.. ரயில்.. பயணங்களில் கொஞ்சமாவது மற்றவர்களுடன் பேசுவார்கள்.., இப்போது சுத்தம்!
(இங்கு).. ஏறியவுடன் பையை கீழே வைக்கும் முன்.. போஃனில் ஃபேஸ்புக் .. யூடியூப் .. பார்ப்பவர்கள் கிட்டதட்ட எல்லோரும்!
இது எங்கே போய் முடியும் என்று முழிக்கும் போது இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது..
எல்லாரும் தனித்தனியா கூட்டமா அலையப் போறோம்!
கடைசியில்.. ஐன்ஸ்டீன் சொன்னது தான் நடக்கப் போகிறது!
5 comments:
இவைகளில் மூழ்கியவருக்கு விடிவே கிடையாது... குடியைப் போல... தானாக திருந்தினால் தான் உண்டு...!
இதுவே என் கவலையும்!வருகைக்கு நன்றி, தனபாலன்..
நானும் மாட்டிகிட்டு தப்பிக்க முடியாம தவிக்கிறேன் :(
ஆஹா! நாங்கள் இதை எழுத நினைத்துப் பாதியில் இருக்கின்றது பதிவு...இதே ஐன்ஸ்டீனின் வார்த்தைகளுடன்.....உண்மையே. இங்கும் இந்தியாவிலும் அப்படித்தான். டிவிட்டருக்கு அபபுறம் என்ற கேள்விக்கே இடம் இல்லையே நண்பரே! இப்போது வாட்சப் போடு போடு என்று போடுகின்றதே...நாங்கள் இந்த வலைத்தளங்களில் மூழ்குவதில்லை....இதனால், நமது நெருங்கிய சொந்தங்கள் கூட விலக நேரிடுகின்றது....டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் சோமச்சா ஹான்? என்று மகளிர்மட்டும் படத்தில் க்ரேசியின் வசனம் வரும்...இருக்கலாம் ஆனால் மனித உறவுகள் விலகிக் கொண்டிருக்கின்றது..உலகமே மௌனமாகிவிடுமோ?
இதைக் குறைக்க வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். முயற்சி செய்து வருகிறேன்.
Post a Comment