Sunday, March 9, 2014

குடிநீர் தேவைக்கு தீர்வு!



இந்த இணைப்பில் இருக்கும் வீடியோவைப் பாருங்கள்..


பெரு நாட்டின் லிமா நகரத்தில் இது நிறுவப்பட்டுள்ளது. ஒரு பெரிய விளம்பரப் பலகையில் Air Filter , Condenser , Carbon Filter அனைத்தையும் இணைத்து காற்றில் இருக்கும் ஈரப் பதத்தை உறிஞ்சி குடிநீராக மாற்றும் திட்டம். கடந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு பலகையில் இருந்து 10000 லிட்டர் குடிநீர் எடுத்திருக்கிறார்கள்! எடுத்த குடிநீர் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் மூலம் சுத்திகரிக்கப் படுவதால், மிக மிக தூய்மையான ஒன்றாக இருக்கிறது இந்த நீர்.

இதில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், அந்த ஊரில் காற்றின் ஈரப்பதம் 98% இருப்பதால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது.

சென்னையில் காற்றின் ஈரப்பதம் எப்போதுமே 80% க்கு அருகிலோ அதிகமாகவோ.. நம் குடிநீர் தேவைக்கு இப்படி ஒரு வழி சாத்தியமா?

பெருவில் அமைக்கப் பட்டது proof of concept என நினைக்கிறேன். சாத்தியமே என்று நிரூபிக்க நிறுவப் பட்டது. ஆனால், அதை நிர்மாணிக்கவும் தொடர்ந்து அது வேலை செய்யவும் ஆகும் செலவு மிக அதிகமானால் இந்த திட்டம் விரயமாகும். அதே சமயத்தில், விளம்பரப் பலகை என்பது ஒரு பணம் கொடுக்கும் விஷயம். அந்த விளம்பரப் பலகையின் மூலம் வரும் பணத்தைக் கொண்டு இந்த திட்டத்தை நடத்த முடிந்தால்?

சாத்தியம் என்றே தோன்றுகிறது!
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக அருமையான் பகிர்வு! சென்னைக்கு அவசியமான ஒன்றுதான்! நம் அரசியல் வாதிகள் கொள்ளையடிக்கும் மக்கள் பணத்தை முதலீடு செய்தாலே இது சாத்தியம்தான்!நல்லதொரு பகிர்வு நண்பரே!

Expatguru said...

நல்ல பதிவு. CSV என்ற தொழில் நுட்பத்தை கொண்டு குறைந்த செலவில் சூரிய வெளிச்சத்தின் மூலம் கடல் நீரை குடி நீராக்கலாம். மனது வைத்தால் கண்டிப்பாக இது முடியும். ஆனால் நமது அரசியல்வாதிகள் எதிலும் கமிஷன் அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்களே. மக்களை பற்றி யார் நினைக்கிறார்கள்? The technology is available, people with the know-how are available, but there is no will by our political bosses to do something good.

திண்டுக்கல் தனபாலன் said...

நம் ஊர்களுக்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்... ம்...

திண்டுக்கல் தனபாலன் said...

காணொளியுடன் சிறப்பான பகிர்வுக்கு நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

எனது g+ வட்டத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி...

bandhu said...

வருகைக்கு நன்றி துளசிதரன் சார்... சரியாகச் சொன்னீர்கள்!

bandhu said...

வருகைக்கு நன்றி expatguru .. நம்மால் முடியும். ஆனால் தமிழ் நண்டு கதை போல ஒருவர் காலை மற்றொருவர் இழுத்து விடுவதிலே காலம் போய்விடுகிறது.. அதே போல, இந்த திட்டத்திலும், செலவாகும் தொகைக்கு மேல் வரும் பணம் எல்லாம் கமிஷனாக அடித்துக் கொள்ளலாம் என்று ஆகிவிட்டால் நடக்குமோ என்னமோ!

bandhu said...

தனபாலன் சார்.. உண்மை தான். நம் ஊருக்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆள் பிடிக்க அந்த ஊர் கல்லூரியில் இப்படி செய்திருக்கிறார்கள் என்றால், நம் ஊரிலும் ஏதாவது ஒரு கல்லூரி செய்யலாம்தான்!

வெங்கட் நாகராஜ் said...

நானும் இந்த காணொளி பார்த்தேன். என் ஃப்ரூட் சாலட் பதிவில் வெளியிட நினைத்திருந்தேன்.....

இந்த மாதிரி விஷயங்கள் இந்தியாவிற்கு வந்தால்..... நன்றாக இருக்கும்.

bandhu said...

வருகைக்கு நன்றி வெங்கட்.. ஏற்கனவே இதே அனுபவம் நம் இருவருக்கிடையில் வைக்கம் விஜயலட்சுமி தகவலில்! ஒரே அலைவரிசையில் நாம் என நினைக்கிறேன்!