Sunday, April 7, 2013

இசை அனுபவம்!

இன்றைய இசை அறிமுகம் மிக புதுமையான ஒன்று. அகபெல்லா (A capella) என்பது எந்த வித இசை கருவிகளும் இல்லாமல் இசையையும் பாடகர்களே இசை போலவே பாடிவிடுவது (சத்தம் செய்வது?)

அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள் பலவற்றில் இதற்கென்றே இசை குழுக்கள் இருக்கும். எந்த இசை கருவியும் இல்லாததால், எந்த முதலீடும் இல்லாமல் மாணவர்கள் இதை பழக முடியும். இசை மீது காதல் ஒன்றிருந்தால் போதும் என்பது இதன் சிறப்பு. 

அகபெல்லாவின் இசை தொகுப்பு ஒன்று..



இப்போது அதிலும் புதுமை செய்த ஒருவர் பற்றி. அலா வார்டி (Alaa Wardi).  ஈரானில் பிறந்து சவுதி அரேபியாவில் வாழும் இளைஞர். இசையின் எல்லா வாத்தியங்களின் சத்தங்களையும் அவரே தனித்தனியாக உருவாக்கி எல்லாவற்றையும் இணைத்து அற்புதமான இசை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். எந்த அளவு இசையை ஒருவர் நேசித்துக் கொண்டிருந்தால்  இப்படி ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்க முடியும் என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. 

இதோ அவர் வெளியிட்டுள்ள ஒரு ஹிந்தி பாடல்.. 


இன்னும் ஒரு அற்புதமான பாடல் அவரிடம் இருந்து.. 



அசந்து விட்டேன்.. இசையை எந்நேரமும் சுவாசித்துக்கொண்டிருக்கும் ஒருவரால் தான் இதை செய்திருக்க முடியும். நீங்களும் ரசித்து அனுபவிப்பீர்கள் என நம்புகிறேன்..
மறுமொழிப்பெட்டி:
>தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான முயற்சி. நல்ல இசையைத் தேடிக் கொண்டு வந்து எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி பந்து ஜி......

bandhu said...

வருகைக்கு நன்றி வெங்கட்.. I was truly amazed listening to this music..