இதற்கு முன் இன்னும் எவ்வளவு கீழ் தரமாக இறங்கப்போகிறோம் என்று எழுதியிருந்தேன். இன்றைய செய்தியை படித்தால், அதைவிட கீழ்த்தரமாக போக அதிக நாட்கள் ஆகவில்லை என்று தெரிந்து கொண்டேன்.
ராஜாவை பார்லிமென்ட் எனர்ஜி கமிட்டிக்கு மெம்பராகவும் கல்மாடியை பார்லிமென்ட் வெளியுறவு கமிட்டிக்கு மெம்பராகவும் அரசு நியமித்திருக்கிறது. இதில் கல்மாடியை வெளியுறவு கமிட்டிக்கு உறுப்பினறாக்கியதர்க்கு காங்கிரஸின் நகைச்சுவை உணர்வு தான் காரணம் என நினைக்கிறேன். அவர் தானே இந்தியாவின் மானத்தை உலக அளவுக்கு வாங்கியவர்!
குற்றவாளியோ இல்லையோ. அந்த சந்தேகத்தினால் தானே சிறையில் இருந்தார்கள்? மந்திரி பதவியும் போனது? இன்று வரை அந்த வழக்குகள் முடியவில்லை. ஆனால் மறுபடியும் இவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவியை மத்திய அரசு கொடுக்கிறது என்றால் என்ன அர்த்தம்? இன்னும் மூன்று வருடம் தேர்தல் இல்லை. எவன் என்ன நினைத்தால் எனக்கென்ன என்ற திமிர் தானே?
இந்த அளவு மக்களை இளிச்சவாயர்களாக நினைக்கும் அரசை இந்தியா பார்த்ததில்லை. அதே போல, மன்மோகன் போன்ற பசு தோல் போர்த்திய புலியை , நரியை, இதுவரை இந்தியா பார்த்ததில்லை!
3 comments:
inna saamy intha naattai thiruththq pakkireenkalaa namma thiruvalar pari suththam oruvar pothu kammunu irunka aduththa therthalil namma nattaiye ottu moththama viththu kaasa parththuviduvarkal...
//இன்னா சாமி இந்த நாட்டை திருத்த பாக்கிறீங்களா நம்ம திருவாளர் பரி சுத்தம் ஒருவர் போதும் கம்முனு இருங்க அடுத்த தேர்தலில் நம்ம நாட்டையே ஒட்டு மொத்தமா வித்து காச பார்த்துவிடுவார்கள் ...//
உண்மைதான் மாலதி. அப்படித்தான் நடக்கிறது இங்கே.
Sad but true.
Post a Comment