ஒரு பக்கம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் சங்மா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதா அவர்களிடம் ஆதரவு பெற அவர் வீட்டிற்கு செல்கிறார். மறு பக்கம் அடுத்த ஜனாதிபதி ஆக பெரிய வாய்ப்பு உள்ள பிரணாப் 2G குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ள கனிமொழி வீட்டிலிருந்து ஜனாதிபதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்! (இதில் சட்டப்படி ஒரு தாரத்திற்கு மேல் மணமுடிப்பது குற்றம் என்றிருக்கும்போது கருணாநிதியின் இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து
பிரச்சாரத்தை தொடங்குவது இன்னுமொரு கொடுமை! எதிலும் தன் குடும்பத்திற்கு லாபத்தை எதிர்நோக்கி காய் நகர்த்தும் கருணாநிதி இப்போதெல்லாம் டெல்லியிலிருந்து யார் வந்தாலும் அவர்களை கனிமொழி வீட்டில்தான் சந்திக்கிறார். முதலில் அந்தோனி.. இப்போது இவர்!)
ஜனாதிபதி பதவி என்பது வெறும் பதவி மட்டும் இல்லாமல் முதல் குடிமகன் என்ற மதிப்பையும் கொடுக்கிறது. அதுவும் இல்லாமல், அவர்கள் மேல் குற்றவழக்கு எதையும் தொடரவும் முடியாமல் ஒரு பாதுகாப்பும் கொடுக்கிறது (என அறிகிறேன்.. தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்). யாரையும் மரண தண்டனையிலிருந்து கூட மன்னிக்க உரிமை உள்ள பதவி!
இப்படி இருக்கும்போது இந்த பதவிக்கு வருபவர்மேல் யாருடைய நிழலும் விழாமல் இருப்பது முக்கியம் இல்லையா? குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்களின் நிழல் இவர்கள் மீது விழுந்தால் எந்த வழக்கிலும் அவர்கள் சார்பாக இருக்க நேரிடும் அல்லவா.
நம் ஊரில் தான் conflict of interest என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லையே!
12 comments:
காலம் கட்டாயம் மாறும் என்று நம்பிய் தான் இருக்கிறோம்.
வருகைக்கு நன்றி, பட்டு.. நானும் அதே நம்பிக்கையுடன் இருக்கிறேன்..
நம் ஊரில் தான் conflict of interest என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லையே!//
மிகச் சரி
இத்தனை உயர்வான பதவிக்கானதேர்தலில் கூட
மதிக்கத் தக்கவர்கள் கிடைக்காமல் போவது
நம் நாட்டின் துரதிஷ்டமே
சிந்திக்கச் செய்து போகும் பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
சரியான கருத்து..
பொதுவாழ்வில் விழுமியங்கள் நீர்த்துப் போனதால் வந்த விளைவு இது...
லீ க்வான் யூ வின் தி சிங்கப்பூர் ஸ்டோரியில் உலகின் பல நாடுகள்,தலைவர்கள் பற்றிய அவரது பார்வை பிரமிப்பூட்டும் அளவுக்கு நூல் பிடித்தாற் போன்று சரியாக இருந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன்..
அவரது பார்வையில் இந்தியாவின் அரசுத் தலைவர்களாக இருந்த நேரு,சாஸ்திரி,இந்திரா,ராசீவ் வரைக்கும் அவரது கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.
நேருவின் காலத்தில் இருமுறை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணப்பட்டிருக்கும் அவர், முதல் முறை நேருவைப் பற்றிய உயர்ந்த அபிப்ராயம் கொண்டு எழுதியிருக்கிறார்;அவரது இரண்டாவது பயணத்திலேயே இந்தியாவில் பரவத் துவங்கி விட்ட ஆட்சிக் குளறுபடிகள்,லஞ்சம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்..
கவனியுங்கள் இது 60 களின் மத்திமக் காலம். அதன்பிறகு 50 வருடங்களில் கேவலமாக ஆள்வதில் அதிபுத்திசாலித்தனமான,அதி கேவலமாக எந்த கூச்ச நாச்சமுமில்லாமல் லஞ்ச லாவண்யங்களில் உலகத்திற்கே கற்றுக் கொடுக்கும் அளவுக்கு காங்கிரஸ் பார்ம்பரியத்தோடு வளர்ந்திருக்கிறோம்..
:))
இந்த நிலையில் கான்ஃபிளிக்ட் ஆஃப் இன்ட்ரஸ்ட் பற்றியெல்லாம் எழுதுவது நமக்கு மேலும் ஆயாசம்தான் தரும்..
ஏதாவது பெரிய விபத்து ஏற்பட்டு,நல்ல,புத்திசாலியான,உத்வேகமுள்ளவன் எவனாவது ஒரு மாநிலத்திற்காவது முதல்வரானால் மட்டும் இந்தியா நிமிர்வதற்கான சாத்தியம் இருக்கும்..
ரமணி சார்.. வருகைக்கு nandri
அறிவன்.. வருத்தமாக இருந்தாலும் நீங்கள் சொல்வது தான் உண்மை!
உங்களைப் போன்ற பதிவுலகில் மூத்த பதிவர்களி நட்பு கிடைத்ததில் மகிழ்கிறேன் சார்... நானும் தங்களைத் தொடர்கிறேன்
வருகைக்கு நன்றி சீனு.
ஒரு கோபமான என்னுடைய கூடங்குளத்து மூன்றாம் பதிவில் பதிவுலகத்தில் குழந்தையான எனக்கு வழிகாட்டி விட்டு எங்கே சென்றிர்கள் அண்ணா? மறுபடியும் உங்களின் ஒரு கோபமான பதிவில் வந்துள்ளேன்...மாற்றம் ஒன்றே மாறாதது...காத்திருப்போம்.
ஆதாயம் இல்லாமல் அரசியல் இல்லை என்றாகி விட்டது. அப்புறம் நியாயங்களையும் தர்மங்களையும் எங்கே தேடுவது? முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பற்றியும் கூட ஏதோ நிதி நிறுவன ஊழல் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன பயன்?
சதீஷ்.. வருகைக்கு நன்றி.. கோபம் இன்னும் அதிகமாவது எதையும் செய்ய இயலாமல் இருப்பதை நினைக்கும்போது தான்!
உண்மை தான் ஸ்ரீராம். அவரை பற்றியும் எவ்வளவு சர்ச்சைகள். போங்கடா புடுங்கிகளா என்பது போல கண்டுகொள்ளாமல் பதவி காலம் முழுவதும் இருந்தாரே!
Post a Comment