அலுவலகத்தில் மதிய நேரம். அன்று எடுத்து சென்றிருந்த 'மேத்தி பராத்தாவை' மைக்ரோவேவில் சூடு பண்ணிக்கொண்டிருந்தேன். (என் மனைவி ஒரு அருமையான சமையல் நிபுணர்)
அதை எடுக்கும்போது, அருகில் நின்றிருந்த அமெரிக்க சக ஊழியை..
"ஓ! பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது.. நீங்களே சமைத்ததா?" என்றார்..
"கிழித்தேன்.. எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும். இது என் மனைவி செய்தது" என்றேன்.
"நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்! எனக்கும் என் கணவருக்கும் வீட்டில் செய்த சமையல் என்றால் அவ்வளவு இஷ்டம்.. ஆனால் பாருங்கள், எனக்கும் சமைக்க தெரியாது. அவருக்கும் சமைக்க தெரியாது.. தினமும் சாப்பாடு வெளியில் தான். இல்லையேல் Frozen Dinner தான்.."
என்று சொல்லிக்கொண்டே போனார்!
கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், யோசித்துப்பார்த்தால் இது தான் உண்மையான சுதந்திரம் என்று தோன்றியது. வேலைக்கும் போய்கொண்டு சமையல் கட்டையும் தான் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியை நினைத்துக்கொண்டேன். பாவமாக இருந்தது.
வீட்டுக்கு போனவுடன் மேத்தி பராத்தா செய்வது எப்படி என்று மனைவியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்..
31 comments:
ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது...
உண்மைதான் சூர்யஜீவா..
நினைத்தீர்கள்...பாதிக்கிணறு...சமைத்தீர்களா?
உண்மையாகவே சமைத்தேன், ரெவெரி.. நன்றாகவே இருந்தது!
தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ஹலோ சொல்லுறது இல்லையா?
இப்புடி ஒரு பிளாக் இருப்பதை இதுலே 34 பதிவு வரை எழுதியிருக்கிங்கே
இப்பதான் பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் இனி தொடர்கிறேன்
வாழ்த்துக்களுக்கு நன்றி, சித்ரா. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
வருகைக்கு நன்றி ஹைதர்.. தங்கள் வரவு நல வரவாகுக..
நன்றி நண்பரே என் பதிவில் திருத்தங்கள் சொன்னதுக்கு...
நீங்கள் என் வகை. வாழ்த்துக்கள்.
வீட்டுக்கு போனவுடன் மேத்தி பராத்தா செய்வது எப்படி என்று மனைவியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்
>>>
இன்னுமா சமைக்க கத்துக்கலை
இப்போது இங்கு கூட பாதி ஆண்கள்
சமையல் தெரிந்தவர்களாகவும்
உடன் உதவுபவர்களாகவுமே உள்ளோம்
செய்பவர்களாக மாறித்தான் ஆகவேண்டும்
இல்லையெனில் பல வகைகளில் சிரமம்தான்
தங்களிடம் இருந்து இன்னும் அந்தச் சூழல் குறித்த
விரிவான அதிகமான பதிவுகளை
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
அருமையான பதிவுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
அழகிய பதிவு..வாழ்த்துக்கள்..
இல்லாள் வரும் முன் இப்போதே கற்றுக்கொள்ள தொடங்குகிறேன்..:)
வருகைக்கு நன்றி சி பி..
வருகைக்கு நன்றி ரமணி சார்..
வருகைக்கு நன்றி மயிலன்..
Nice blog bandhu...enjoyed reading your posts...keep writing often,cheers!
அனுபவத்தை அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி....
கற்றுக்கொண்டீர்களா?
வருகைக்கு நன்றி, ம.தி.சுதா..
சென்னை பித்தன் சார்.. கற்று கொண்டேன் . வருகைக்கு நன்றி..
வாழ்த்துக்கள்.
சீக்கிரமா சமைக்க கத்துக்கங்க .
All the Best
எம்டிஆர் இருக்க பயமேன்?
அதானே எம் டி ஆர் இருக்க கவலையே இல்லையே!
என்ன ஆச்சு
அக்டோபருக்குப் பின் பதிவையே காணோம்
தங்கள் அடுத்த பதிவைஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
கோர்வையாக எழுத உருப்படியாக எதுவும் தோன்றவில்லை என்பதே உண்மையான காரணம், ரமணி சார்..
பரோட்டா பண்ணி பாத்தேளா அப்புறம்?? :) எங்காத்துல தங்கமணிக்கு சப்பாத்தி & தோசை மாஸ்டர் எப்போதும் அடியேன் தான் :)
தங்கள் ப்ளாக் பக்கம் இன்று தான் வருகிறேன். (சமீபத்து சண்டையில் கண்ட ஒரு நல்ல உள்ளம் நீங்கள் )
அமெரிக்காவில் உள்ளீர்களா?
பெண்கள் குறித்து இப்பதிவில் சொன்னது உண்மையே. ஓரளவு நாம் உதவுதே கூட அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
என் மனைவிக்கு சமையலில் மேல் வேலைகள் (நறுக்கி தருவது, சமையல் கட்டி அனைவருக்கும் எடுத்து வைப்பது- இது செம பெரிய வேலை) நான் செய்கிறேன். இருவரும் சமையல் அறையில் ஒன்றாய் இருந்தால் நிறைய பேசி கொள்ளவும் முடிகிறது !
வருகைக்கு நன்றி மோகன் குமார்.. ஆம் அமெரிக்காவில் சில வருடங்களாக இருக்கிறேன். சண்டை இருவரின் புரிந்துணர்வோடு நல்லபடியாக முடிந்தது மன நிறைவை தந்தது..
தக்குடு.. வருகைக்கு நன்றி.. கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலேயே பரோட்டா எல்லாம் பண்ணி அசத்தறீங்க! வாவ்! நான் எல்லாம் சுத்த வேஸ்ட்!
Post a Comment